search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (20-9-2016 முதல் 26-9-2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (20-9-2016 முதல் 26-9-2016 வரை)

    20-9-2016 முதல் 26-9-2016 வரை நடக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை கீழே பார்க்கலாம்.
    20-ந் தேதி (செவ்வாய்) :

    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * இன்று புண்ணிய தல யாத்திரை, பிதுர் கடன் இயற்றுதல், அன்னதானம் வழங்குவது நல்லது.
    * கீழ்நோக்கு நாள்.

    21-ந் தேதி (புதன்) :

    * கார்த்திகை விரதம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகசரகலசாபிஷேகம்.
    * திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    22-ந் தேதி (வியாழன்) :

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
    * கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    23-ந் தேதி (வெள்ளி) :

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்படம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் பவனி வருதல்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    * அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு 8-வது நாள் விழா. மாலையில் இனிப்பு பலகாரங்களுடன் திருக்கல்யாண சுருள் பதிவலம் வருதல்.
    * சமநோக்கு நாள்.

    24-ந் தேதி (சனி) :

    * ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * இன்று விஷ்ணு ஆலயங்களில் வழிபாடு செய்வது சிறப்பு தரும்.
    * மேல்நோக்கு நாள்.

    25-ந் தேதி (ஞாயிறு) :

    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு 10-வது நாள் விழா. இரவில் இந்திர விமான வாகனத்தில் அய்யா நகர் வலம் வருதல்.
    * சமநோக்கு நாள்.

    26-ந் தேதி (திங்கள்) :

    * சுமார்த்த ஏகாதசி.
    * முகூர்த்த நாள்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    * திருமயம் சத்தியமூர்த்தி பவனி.
    * மேல்நோக்கு நாள். 
    Next Story
    ×