search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (26-7-2016 முதல் 1-8-2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (26-7-2016 முதல் 1-8-2016 வரை)

    26-7-2016 முதல் 1-8-2016 வரை நடக்கும் ஆன்மிக நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
    26-ந் தேதி (செவ்வாய்)

    * ராமேஸ்வரம் சேது மாதவ சன்னிதிக்கு, விநாயகப்பெருமான் எழுந்தருளி ஆராதனை விழா.
    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * சமநோக்கு நாள்.

    27-ந் தேதி (புதன்)

    * திருப்பாப்புலியூர், காளையார் கோவில், நயினார் கோவில்களில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன், நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் ஆகிய கோவில்களில் உற்சவம் ஆரம்பம்.
    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
    * சமநோக்கு நாள்.

    28-ந் தேதி (வியாழன்)

    * கார்த்திகை விரதம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் ஆடிப்பூர உற்சவம் தொடக்கம், இரவு 16 சக்கர வண்டிச் சப்பரம் என்ற அழகான திருத்தேரில் ஆண்டாள் பவனி.
    * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன், மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சியருளல்.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க காமதேனு வாகனத்தில் வீதி உலா.
    * திருத்தணி முருகப்பெருமான் கோவிலில் தெப்ப உற்சவம்.
    * கீழ்நோக்கு நாள்.

    29-ந் தேதி (வெள்ளி)

    * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் காலை பெரிய சிம்ம வாகனத்திலும், இரவு பால வெள்ளி கிளி வாகனத்திலும் பவனி.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை திருவீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    30-ந் தேதி (சனி)

    * சர்வ ஏகாதசி.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பரங்கியிலும், ரெங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் திருவீதி உலா.
    * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் காலை பெரிய கிளி வாகனத்திலும், மாலை வேணுகோபாலர் அலங்காரத்திலும் காட்சி அருளல்.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    31-ந் தேதி (ஞாயிறு)

    * பிரதோஷம்.
    * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் காலை கமல வாகனத்தில் வீதி உலா, இரவு சிவலிங்க பூஜை செய்தல்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் கோவர்த்தனகிரியிலும் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    1-ந் தேதி (திங்கள்)

    * மாத சிவராத்திரி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் ஐந்து பெரிய திருவடி சேவை.
    * சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் அம்பாள் திருவீதி உலா.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப் பல்லக்கிலும், இரவு தங்க விருட்சத்திலும் பவனி.
    * திருவாடானை சிநேக வள்ளியம்மன் வெள்ளி விருட்ச வாகனத்தில் புறப்பாடு.
    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×