search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள்(12-7-2016 முதல் 18-7-2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள்(12-7-2016 முதல் 18-7-2016 வரை)

    12-7-2016 முதல் 18-7-2016 வரை நடக்கும் முக்கிய நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
    12-ந் தேதி (செவ்வாய்) :

    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ண அவதார காட்சி. இரவு சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
    * குரங்கணி முத்துமாலையம்மன் பவனி வருதல்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * சமநோக்கு நாள்.

    13-ந் தேதி (புதன்) :

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வருசாபிஷேகம்.
    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவிலில் ரத உற்சவம்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராம அவதார காட்சி, அனுமன் வாகனத்தில் வீதி உலா.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    14-ந் தேதி (வியாழன்) :

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்ச லீலை அருளல்.
    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி இரவு தோளுக்கினியானில் பவனி.
    * வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (வெள்ளி) :

    * சர்வ ஏகாதசி.
    * வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் சேஷ வாகனம்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    16-ந் தேதி (சனி) :

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத் தேர் பவனி.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலிங்க நர்த்தனம், இரவு மோகன அவதாரம், யானை வாகனத்தில் திருவீதி உலா.
    * திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    * திருவள்ளூர் வீரராகவ பெருமாள் புறப்பாடு.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    17-ந் தேதி (ஞாயிறு) :

    * பிரதோஷம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வரர் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு.
    * வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் இரவு புஷ்ப விமானத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.

    18-ந் தேதி (திங்கள்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ரோற்சவம்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    Next Story
    ×