search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (21–6–2016 முதல் 27–6–2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (21–6–2016 முதல் 27–6–2016 வரை)

    21–6–2016 முதல் 27–6–2016 வரை நடைபெறும் ஆன்மிக நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
    21–ந் தேதி (செவ்வாய்)

    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் பால்குட ஊர்வலம்.
    * திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், தாயார் கண்ணாடி சப்பரத்தில் திருவீதி உலா.
    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    22–ந் தேதி (புதன்)

    * திருநெல்வேலி டவுண் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் வருசாபிஷேகம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம சுவாமி ரத உற்சவம்.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
    * திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூம்பல்லக்கிலும் பவனி.
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் பூக்குழி விழா, இரவு புஷ்ப சப்பரத்தில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    23–ந் தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.
    * சங்கடஹர சதுர்த்தி.
    * திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் ரத உற்சவம்.
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
    * இன்று விநாயகப்பெருமானை வழிபடுவது நன்மை தரும்.
    * மேல்நோக்கு நாள்.

    24–ந் தேதி (வெள்ளி)

    * திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் சப்தாவரணம்.
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
     * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * மேல்நோக்கு நாள்.

    25–ந் தேதி (சனி)

    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் விருட்ச சேவை.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை.
    * இன்று கருட தரிசனம் செய்வது நன்மை தரும்.
    * மேல்நோக்கு நாள்.

    26–ந் தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    27–ந் தேதி (திங்கள்)

    * திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.
    Next Story
    ×