search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (24–5–2016 முதல் 30–5–2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (24–5–2016 முதல் 30–5–2016 வரை)

    24–5–2016 முதல் 30–5–2016 வரை நடக்கும் ஆன்மிக நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
    24–ந் தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தசாவதாரக் காட்சி.
    * பழனி முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி வருதல்.
    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம்.
    * காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் காலை வேணுகான கண்ணன் திருக்கோலத்தில் காட்சியளித்தல்.
    * கீழ்நோக்கு நாள்.

    25–ந் தேதி (புதன்) :

    * சங்கடஹர சதுர்த்தி.
    * காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் உபய நாச்சியார்களுடன் ரத  உற்சவம்.
    * மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் திருவீதி உலா.
    * அரியக்குடி சீனிவாச பெருமாள் இரவு புஷ்ப பல்லக்கில் விடையாற்று உற்சவம்.
    * இன்று விநாயகப் பெருமானை வழிபடுதல் நன்று.
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
    * கீழ்நோக்கு நாள்.

    26–ந் தேதி (வியாழன்) :

    * முகூர்த்த நாள்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் கோவில் வருசாபிஷேகம்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * மதுரை கூடலழகர், திருக்கண்ண புரம் சவுரிராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் விடையாற்று உற்சவம்.
    * காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
    * திருப்பதி ஏழுமலையப்பன்  புஷ்பாங்கி சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    27–ந் தேதி (வெள்ளி) :

    * காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆளும் பல்லக்கில் தீர்த்தவாரி.
    * ராமேஸ்வரர் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அப்பால் தங்கப்  பல்லக்கில் புறப்பாடு.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    28–ந் தேதி (சனி) :

    * அக்னி நட்சத்திரம் நிவர்த்தி.
    * திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
    * இன்று கருட தரிசனம் நன்று.
    * மேல்நோக்கு நாள்.

    29–ந் தேதி (ஞாயிறு) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி மூவர் உற்சவம் ஆரம்பம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனு மனுக்கு திருமஞ்சன சேவை.
    * இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
    * மேல்நோக்கு நாள்.

    30–ந் தேதி (திங்கள்) :

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில்  கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×