search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (5–4–2016 முதல் 11–4–2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (5–4–2016 முதல் 11–4–2016 வரை)

    இந்த வார முக்கிய ஆன்மீக விசேஷங்கள்
    5–ந் தேதி (செவ்வாய்)

    * பிரதோஷம்.

    * மாத சிவராத்திரி.

    *திருக்குற்றாலம் குற்றாலநாத சுவாமி உற்சவம் ஆரம்பம்.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் பரமபதநாதர் திருக்கோலமாய் காட்சி அருளல்.

    * சமநோக்கு நாள்.

    6–ந் தேதி (புதன்)

    * போதாயன அமாவாசை.

    * திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் ஐந்து கருடோற்சவம்.

    * அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பூக்குழி விழா.

    * தாயமங்கலம் முத்துமாரியம்மன் பால்குடக் காட்சி.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் வைகுண்ட நாதர் சேவை.

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    7–ந் தேதி (வியாழன்)

    * அமாவாசை.

    * பாபநாசம் சிவபெருமான் பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை காளிங்க நர்த்தனம், மதியம் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமன் வாகனத்தில் ராமர் திருக்கோலத்தில் காட்சி தருதல்.

    * தாயமங்கலம் முத்துமாரியம்மன் தீர்த்தவாரி.

    * சமநோக்கு நாள்.

    8–ந் தேதி (வெள்ளி)

    * தெலுங்கு வருடப்பிறப்பு.

    * திருக்குற்றாலம் குற்றாலநாத சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி.

    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் சுவாமி ராஜாங்க அலங்காரம்.

    * ஒழுகைமங்கலம் மாரியம்மன் புஷ்ப விமானத்தில் திருவீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    9–ந் தேதி (சனி)

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் ரத உற்சவம்.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி சூர்ணோற்சவம், இரவு புஷ்பப் பல்லக்கில் கல்யாண திருக்கோலமாய் காட்சியருளல்.

    * ஒழுகைமங்கலம் மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    * பாபநாசம் சிவபெருமான் ஏக சிம்மாசனத்தில் திருவீதி உலா.

    * குச்சனூர் சனி பகவான் சிறப்பு ஆராதனை.

    * கீழ்நோக்கு நாள்.

    10–ந் தேதி (ஞாயிறு)

    * சதுர்த்தி விரதம்.

    * கார்த்திகை விரதம்.

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் பவனி.

    * ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ரத உற்சவம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் உற்சவம் ஆரம்பம், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலையில் நவநீத சேவை, வெண்ணெய் தாழி சேவை, இரவு தங்கக் குதிரையில் ராஜாங்க அலங்காரம்.

    * கீழ்நோக்கு நாள்.

    11–ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் தந்தப் பல்லக்கில் பவனி.

    * நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் சித்திரை உற்சவம் தொடக்கம்.

    * சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள். 
    Next Story
    ×