search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ‘முழு நிலவு நாள்’ திருவிழாவையொட்டி பெண்கள் ஆலமரத்தில் நூலை சுற்றியபடி வலம் வந்த காட்சி.
    X
    ‘முழு நிலவு நாள்’ திருவிழாவையொட்டி பெண்கள் ஆலமரத்தில் நூலை சுற்றியபடி வலம் வந்த காட்சி.

    ‘வட் பூர்ணிமா’ என்றழைக்கப்படும் ‘முழு நிலவு நாள்’ விரதம்

    சாவித்திரி என்ற பெண் உயிர் இழந்த தன் கணவன் சத்யவானை இடைவிடாத நோன்பு மற்றும் இறை வேண்டலால் காப்பாற்றினாள். அதை நினைவுபடுத்தும் வகையிலும் வட் பூர்ணிமா திருவிழா கொண்டாடப்படுகிறது.
    வட இந்திய பெண்கள் ஆண்டு தோறும் ‘வட் பூர்ணிமா’ திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். வட் பூர்ணிமா என்றால் ‘முழு நிலவு’ என்று பொருள். இந்த ‘முழு நிலவு நாள்’ அன்று பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், அவர் நல்ல உடல் நலத்துடன் வாழவும் இறைவனை வழிபடுகின்றனர்.

    இந்த நாளே வட் பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. சாவித்திரி என்ற பெண் உயிர் இழந்த தன் கணவன் சத்யவானை இடைவிடாத நோன்பு மற்றும் இறை வேண்டலால் காப்பாற்றினாள். அதை நினைவுபடுத்தும் வகையிலும் வட் பூர்ணிமா திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழா மராட்டியம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மராட்டிய மாநிலம் முழுவதும் வட் பூர்ணிமா எனப்படும் முழுநிலவு திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடபட்டது.



    திருவிழாவை முன்னிட்டு திருமணம் முடிந்த பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்க நேற்று உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தங்களை மணப்பெண்கள் போல அலங்கரித்து கொண்டு கோவிலுக்கு சென்று இறைவனை வேண்டினர்.

    பின்னர் அவர்கள் குழுவாக ஆலமரத்தில் நூலை சுற்றினர். மேலும் ஒருவருக்கொருவர் குங்கும திலகமிட்டு கொண்டனர். இவ்வாறு பெண்கள் நோன்பு இருந்து ஆலமரத்தில் நூல் சுற்றினால் அவர்களின் கணவன் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்பது ஐதீகம்.

    மும்பையை பொருத்தமட்டில் தாராவி, தாதர், அந்தேரி, பாந்திரா, கொலாபா ஆகிய அனைத்து பகுதிகளிலும் வட் பூர்ணிமா திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதுபோன்று தானே, நவிமும்பை, வாஷி பகுதிகளிலும் முழுநிலவு திருவிழாவை திருமணமான பெண்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
    Next Story
    ×