search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புத்திரபாக்கியம், குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தி தரும் நாகபஞ்சமி விரதம்
    X

    புத்திரபாக்கியம், குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தி தரும் நாகபஞ்சமி விரதம்

    நாகதோஷம் உள்ளவர்களும் ராகு, கேது தோஷங்களால் பாதிப்பு உள்ளவர்களும் ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து நாகதேவதையை வழிபட்டு அனுசரிப்பதே நாகபஞ்சமி விரதம்.
    ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாகசதுர்த்தி கொண்டாடுகிறார்கள். அன்று நாகர் சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு. நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இதர வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம்!

    நாகதோஷம் உள்ளவர்களும் ராகு, கேது தோஷங்களால் பாதிப்பு உள்ளவர்களும் ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து நாகதேவதையை வழிபட்டு அனுசரிப்பதே நாகபஞ்சமி விரதம். ஆடி பஞ்சமி முதல் ஒவ்வொரு மாதமும் பஞ்சமி திதியன்று இந்த விரதத்தை மேற்கொண்டு 12ம் மாதமான ஆனிமாத வளர்பிறை பஞ்சமி அன்று இவ்விரதத்தை முடிப்பர். இதன் பலனால், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறும் குழந்தைப்பேறு உடையவர்கள் குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தியும் உண்டாகும்.

    புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும் பிரகதாம்பாள் உடனுறை நாகநாதரை நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் வணங்கி அருள் பெற்றதாக தலவரலாறு கூறுகின்றது. இன்றும் பக்தர்கள் பலர் தங்களது நாகதோஷம் நீங்க ஆயிரக்கணக்கில் நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இங்குள்ள ஐந்து தலை நாகரை வணங்குவதும் நாகதீர்த்தத்தில் குளிப்பதும் விசேஷம்.



    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அருகில் அனுமார் கோதண்டராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அனுமார் புளியமர வடிவில் காட்சி தருகிறார். ராகுதோஷம் உள்ளவர்கள் வழிபடுவதற்காக அனுமன் சன்னதிக்கு வலப்புறம் ஒரு சிறிய மாடம் அமைக்கப்பட்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

    ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாகசதுர்த்தி கொண்டாடுகிறார்கள். அன்று நாகர் சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு. நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இதர வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம் ! நாகபஞ்சமி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு மணப்பேறும் மகப்பேறும் பலனாகப் பெறுகிறார்கள்.
    Next Story
    ×