search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மங்கள வாழ்வு பெற விரதமிருந்து குங்கும அர்ச்சனை செய்யலாம்
    X

    மங்கள வாழ்வு பெற விரதமிருந்து குங்கும அர்ச்சனை செய்யலாம்

    வெள்ளி, செவ்வாய் மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மன் கோவில்களில் குங்கும அர்ச்சனை நடைபெறும். விரதமிருந்து இதில் கலந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி பெருகும்.
    நாம் உபயோகிக்கும் பரிமள பொருட்களில் ஒன்று குங்குமம். ‘மங்கள மங்கையர் குங்குமம், மதுரை மீனாட்சி குங்குமம்’ என்று வர்ணித்துக் கூறுவர். பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டால், குடும்ப அமைதியைக் காட்டும்.

    கல்யாணம் ஆன பெண்கள் தன் கணவருடைய ஆயுள் பெருகவும், இல்லறம் நல்லறமாக அமையவும் தன்னுடைய மாங்கல்யத்திலும், நெற்றி வகிட்டிலும் குங்குமத்தை வைத்துக் கொள்வார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் இருந்தால், துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை செய்வது வழக்கம்.

    குங்குமம் சுமங்கலி பாக்கியத்தைக் கொடுக்கும் பொருளாகும். எனவே வெள்ளி, செவ்வாய் மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மன் கோவில்களில் குங்கும அர்ச்சனை நடைபெறும். விரதமிருந்து இதில் கலந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி பெருகும்.
    Next Story
    ×