search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியர் நல்ல கணவனைப் பெற பாவை நோன்பு
    X

    கன்னியர் நல்ல கணவனைப் பெற பாவை நோன்பு

    கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை கொண்டதாகும்.
    ஆண்டாளால் பாடப்பட்டது திருப்பாவை; வைணவ தொடர்புடையது. மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவெண்பாவை, சைவத் தொடர்புடையது. மார்கழி நோன்பு அல்லது பாவை நோன்பு என்று அழைக்கப்படும் மேற்கண்ட இரண்டு நூல்களும், இறைவனை துயில் எழுப்பும் பாடல்களாகும். மார்கழி நோன்பு என்பது முற்றிலும் கன்னிப்பெண்களுக்கு உண்டானது.

    அவர்கள் விடியலுக்கு முன்பாக துயில் கலைந்து, தனது தோழிகளையும் துயில்கலைய செய்வர். பின்னர் அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி ஆற்றில் மார்கழி நீராடுவர். அதன்பிறகு கரையில் பாவைக்களம் ஒன்றை அமைத்து, அங்கு பாவையை உருவாக்கி, அந்த பாவையை வைணவக் கன்னியர்கள் கவுரியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் எண்ணி போற்றி வழிபடுவர்.

    நல்ல கணவன் கிடைக்க வேண்டும். அந்த கணவனாகப்பட்டவன் சைவக் கன்னிக்கு சிவனடியாராகவும், வைணவக் கன்னிக்கு வைணவ அடியாராகவும் விளங்க வேண்டும். இனிமேல் பிறவிகள் இருக்குமாயின், அந்த பிறவிகளிலும் இறைவனுக்கு அடிமை தொண்டாற்றியே இருத்தல் வேண்டும் என்று தனக்குண்டானதை கேட்டு பெறும் பெண்கள், இறுதியில் பொதுவாக ஊரும், நாடும் செழிக்க மாதம் மும்மாரி பொழிய வேண்டும் என்றும் வேண்டு வார்கள்.

    பெண்கள் நோன்பு இருப்பதற்கு தகுந்த மாதம் மார்கழி. ஆயர்பாடி கோபியர்கள் அனைவரும் கண்ணனை கணவனாக அடைய விரும்பி, மார்கழி மாதம் முழுவதும் கவுரி நோன்பு நோற்று காத்யாயனியை, பார்வதியை வழிபட்டனர். கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை கொண்டதாகும்.
    Next Story
    ×