search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிரக தோஷங்களை விரட்டும் புரட்டாசி 4-வது சனி விரதம்
    X

    கிரக தோஷங்களை விரட்டும் புரட்டாசி 4-வது சனி விரதம்

    இன்று புரட்டாசி 4-வது சனி. ஏழைகளுக்கு ஆடை தானம் செய்ய வேண்டும். இதனால் கிரக ரீதியிலான தோஷங்கள் விலகும்.
    புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். புரட்டாசி மாதத்தை பெருமாள் மாதம் என்றே அழைப்பர்.

    108 திவ்ய தேசங்கள் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாத வழிபாடுகள், உற்சவங்கள் மிகவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற பெருமாள் தலங்களில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை, நேர்த்திக் கடன்கள் செலுத்தவும் இந்தமாதம் மிகவும்சிறந்தது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களுள் ஒன்றாக அக்னிபுராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுள் திருமாலை வணங்குவது சிறப்பாகும்.

    இன்று புரட்டாசி 4-வது சனிக்கிழமையாகும். இதையொட்டி பெருமாள் தலங்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் உண்டியல் ஏந்தி கோவிந்தா, நாராயணா, கோபாலா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர்.

    தானமாக பெற்ற அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் தலங்களுக்கு நடைபயணமாகச் சென்று காணிக்கை செலுத்துவர். புரட்டாசி மாதத்தில்தான் திருவேங்கட முடையானுக்கு பிரமோற்சவமும் நடைபெறுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) கருட சேவை நடைபெற்றது.

    புரட்டாசி சனியன்றுதான் திருப்பதியில் விஷ்ணு பகவான் சீனிவாசனாக அவதாரம் செய்தார். இதன் காரணமாகவும் புரட்டாசி சனி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாளில் பெருமாளை நினைத்து சனிக்கிழமை விரதம் இருக்கும் போது துளசி மற்றும் மலர்களைத் தூவி ஏழுமலையான் குறித்த திவ்ய பிரபந்தப் பாடல்களைப் பாட வேண்டும். காலையில் ஏற்றும் தீபம் மாலை வரை எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். நாளை மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நைவேத்யம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்ய வேண்டும். இதனால் கிரக ரீதியிலான தோஷங்கள் விலகும்.
    Next Story
    ×