search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி விரத பூஜை
    X

    ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி விரத பூஜை

    ஜேஷ்டா நட்சத்திர பூஜையை நவராத்திரி ஜேஷ்டா நட்சத்திரத்திலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு ஜேஷ்டா நட்சத்திரத்தன்றும் செய்வது நல்லது.
    நவராத்திரியில் வரும் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி விரத பூஜை மிகவும் விசேஷமானதொரு பூஜையாகும். மூல நட்சத்திரத்திற்கு முதல் நாள் கேட்டை நட்சத்திரம் அன்று ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி விரத பூஜை செய்யலாம்.

    சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும். இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். மகாலட்சுமியை குறித்து சொல்லும் சுலோகங்கள், அக்ஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் சொல்லி குங்குமம், புஷ்பம், அட்சதைகளினால் அர்ச்சிக்கலாம். சகஸ்ர அர்ச்சனை மிகவும் விசேஷம்.

    இந்த ஜேஷ்டா நட்சத்திர பூஜையை நவராத்திரி ஜேஷ்டா நட்சத்திரத்திலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு ஜேஷ்டா நட்சத்திரத்தன்றும் செய்வது நல்லது. காலையில் பூஜை செய்து விட்டு மாலையிலும் நெய் விளக்கேற்றி லட்சுமி ஹ்ருதயம், நாராயண ஹ்ருதயம் படிக்க வேண்டும்.

    கடைசியில் சொடல் வைத்து ஆரத்தி எடுத்து விட்டு லட்சுமி நாராயண ப்ரீத் யாதம் என்று சொல்லி கிருஷ்ணா பணமஸ்து செய்ய வேண்டும். இப்படியாக ஒரு வருடம் வரும் ஜேஷ்டா நட்சத்திரங்களிலோ அல்லது இவ்வளவு நட்சத்திரங்கள் செய்வதாகவோ மனதில் நினைத்துக் கொண்டு செய்யலாம். ஜேஷ்டா நட்சத்திர காலத்தில் லட்சுமி பூஜை செய்வதும், லட்சுமி ஹ்ருதயம், நாராயண ஹ்ருதயம் படிப்பதும் வறுமை அகன்று செல்வம் பெருகும் என்பது பொருள்.

    சாமுத்ரிகா லட்சணப்படி சகல விதமான அழகும் பொருந்தியவள் ஸ்ரீமகாலட்சுமி. அதனால் லட்சணங்கள் பொருந்தியவள் லட்சுமி என்று கூறுவர்.

    அதுமட்டுமல்ல மிக அழகானப் பெண்களை ‘‘பெண் மகாலட்சுமி மாதிரி அழகாக இருக்கிறாள்’’ என்று கூறுவதும் இதனால்தான்.

    பொதுவாக மகாலட்சுமி, தம் பக்தர்களுக்கு உலகில் உள்ள சகல சவுபாக்கியங்களை குறைவின்றி கொடுக்கிறாள். அதோடு பேரின்பமாகிய முக்தி, மோட்சம் எனும் வீடுபேற்றினைப்பெற அவ்வழிகளில் முன்னேறும் பக்தர்களுக்கு மோட்ச இன்பத்தையும் அவரவர்களுக்கு ஏற்றவாறு, அவரவர் தகுதிக்குத் தக்கவாறு அள்ளி அள்ளித்தரும் வள்ளலாகத் திகழ்கிறாள்.
    Next Story
    ×