search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழப்பமும், கலகமும் உண்டாக்குதல் கொலை செய்வதை விடக் கொடியது
    X

    குழப்பமும், கலகமும் உண்டாக்குதல் கொலை செய்வதை விடக் கொடியது

    அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்பேரில் சரியான சட்டத்திட்டத்தைப் பேணியே போர் புரிய வேண்டும், இறைநிராகரிப்பவர்கள் நேர்வழியில் செல்ல வேண்டுமென்ற ஆசையும் உற்சாகமும் அக்கால முஸ்லிம்களிடம் மேலோங்கியிருந்தது.
    ‘நக்லா’வில் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்பதை அறிந்த மக்காவைச் சேர்ந்த இறைமறுப்பாளர்கள் பயந்தனர். நக்லாவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காகச் செல்லும் வழி ஆபத்தானது என்று உணர்ந்தனர். இருப்பினும் அவர்கள் முஸ்லிம்களுடன் சமாதானமாகச் செல்லாமல், மக்காவிற்குள் இருக்கும் முஸ்லிம்களையெல்லாம் கொல்வோம் என்று பகைமை கொண்டனர்.

    அப்போது அல்லாஹ் இறைவசனங்களை அருளினான் “உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் அத்து மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. உங்களை வெட்டிய அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்.

    ஏனெனில் குழப்பமும், கலகமும் உண்டாக்குதல் கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் அங்கும் அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

    எனினும், அவர்கள் அவ்வாறு செய்வதில் நின்றும் ஒதுங்கி விடுவார்களாயின், நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். குழப்பமும், கலகமும் நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர வேறு எவருடனும் பகை கொண்டு போர் செய்தல் கூடாது.”

    போருக்கான இறைவசனங்கள் அருளப்பட்டதும் அதற்கான தயாரிப்புகளை மக்கள் செய்து கொண்டனர். இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போராகவும், இன பெருமைக்கு மிகப் பெரிய அடியாகவும் இருந்தது. போர் சம்பந்தப்பட்ட இன்னும் பல இறைவசனங்கள் அருளப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்கள் கைதிகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதுவரை விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது.

    அவ்வசனங்களை மக்கள் வாசிக்கும்போது போர் சமீபத்தில் நிகழப் போகிறதென்றும், அதன் முடிவில் அல்லாஹ்வின் பாதையில் தமது வீரத்தை வெளிப்படுத்திக் காட்ட வேண்டுமென்றும், இறுதியில் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைக்கும் என்பதும் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தாலும். முஸ்லிம்கள் போருக்காகத் தங்களைச் சரியாகத் தயார்படுத்திக் கொண்டனர்.

    அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்பேரில் சரியான சட்டத்திட்டத்தைப் பேணியே போர் புரிய வேண்டும், இறைநிராகரிப்பவர்கள் நேர்வழியில் செல்ல வேண்டுமென்ற ஆசையும் உற்சாகமும் அக்கால முஸ்லிம்களிடம் மேலோங்கியிருந்தது.

    திருக்குர்ஆன் 2:190-193

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×