search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரச்சனைகளை தீர்க்கும் சிவபெருமானின் அபிஷேகங்கள்
    X

    பிரச்சனைகளை தீர்க்கும் சிவபெருமானின் அபிஷேகங்கள்

    வில்வ இலைகளால் அர்ச்சித்து வணங்கும்போது அனைத்து துன்பங்களும் விலகி நிம்மதி அருள்வார் சிவபெருமான் என்பதே அபிஷேகங்கள் தரும் பலன்கள் ஆகும்.
    பொதுவாகவே அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றாலும் எம்பெருமான் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் சிவன் ஒரு அபிஷேகப் பிரியர் என்றும் கூறுவர். காரணம் முக்கண் முதல்வனாகும் சிவனின் நெற்றிக்கண் தீப்பிழம்பாக உஷ்ணத்தை அளிக்கும். 

    அச்சூட்டைத் தணித்து அவருக்கு குளிர்ச்சி ஊட்டவே சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு மேலாக ஒரு செம்பு பாத்திரத்தைக் கட்டி, அதனுள் குளிர்ச்சியான நீர், பன்னீர், நெய், இளநீர் போன்றவற்றை நிரப்பி, அதன் அடியில் சிறு துளைகளிட்டு அதன் வழியே சொட்டு சொட்டாக விழும்படி அமைப்பார்கள்.

    சொட்டு சொட்டாக விழும் நீர் சிவனை குளிர்விக்கும் என்பது ஐதீகம். அவரின் உஷ்ணத்தைத் தவிர்க்க உதவும் ஜலதாரை எனப்படும் இந்த தாரா அபிஷேகத்தில் சில வகைகள் சிறப்புமிக்க பலன்களை அருளும். சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள் விலகி அச்சம் தீர்ந்து நல்வாழ்வு கிட்டும். 

    தேனினால் தாராபிஷேகம் செய்தால் சருமவியாதிகள் நீங்கும், கரும்புச்சாறு கொண்டு தாராபிஷேகம் நிகழ்த்தினால் சகலத் துன்பமும் நீங்கி மோட்சம் கிடைக்கும். மேலும் சிறப்பு வாய்ந்த, குளிர்ச்சி தரும் வில்வ இலைகளால் அர்ச்சித்து வணங்கும்போது அனைத்து துன்பங்களும் விலகி நிம்மதி அருள்வார் சிவ பெருமான் என்பதே அபிஷேகங்கள் தரும் பலன்.
    Next Story
    ×