search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் தோஷம் போக்கும் உஜ்ஜைனி மங்களநாதர்
    X

    செவ்வாய் தோஷம் போக்கும் உஜ்ஜைனி மங்களநாதர்

    நாட்டின் பல இடங்களில் செவ்வாய்க்கு கோவில்கள் இருந்தாலும், உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் மங்களகரமான வாழ்வை அருள்பவர். மத்திய பிரதேசத்தின் தலைநகரான உஜ்ஜைனில் அமைந்துள்ள மங்களநாதர் சிவாலயம், செவ்வாய் அவதரித்த தலமாகும். இதனால் இது அங்காரக ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் தலமாக கருதப்படுகிறது. நாட்டின் பல இடங்களில் செவ்வாய்க்கு கோவில்கள் இருந்தாலும், செவ்வாய் பிறந்த தலமாக உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் உள்ளதால், இங்குள்ள வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயத்தில் செவ்வாய் பகவான், மங்களநாதர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியாக காட்சியளிக்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில் மூலவருக்கு எதிரில் நந்தி சிலை இருக்கும். ஆனால் இங்கு மங்களநாதர் கருவறையின் முன்பு செவ்வாய் பகவானின் வாகனமாக கருதப்படும் ஆடு உருவம் வைக்கப்பட்டுள்ளது.

    ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் 4,7,8,12 இடங்களில் செவ்வாய் இருந்தால், அது தோஷமாக கருதப்படுகிறது. இதனால் அந்த ஜாதகருக்கு திருமண தடைஏற்படும்; விபத்து நேரிடும், அடிக்கடி காயம் ஏற்படும் என்கிறது ஜோதிட பலன். இந்த தோஷ நிவர்த்திக்காக மக்கள் செவ்வாய் தலத்திற்குச் சென்று, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து பரிகார பூஜைகள் செய்கின்றனர்.

    திருமணத்தடை ஏற்படுபவர்கள், செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து அங்காரனுக்கு சிவப்பு ஆடை சாத்தி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, துவரம் பருப்பு பொடி கலந்த அன்னத்தை நிவேதனம் செய்து, பிறகு அதனை தானம் செய்கிறார்கள்.

    உஜ்ஜைனி ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிப்ரா நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
    Next Story
    ×