search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தைபேறு, நீண்ட ஆயுள் தரும் ஹோமங்கள்
    X

    குழந்தைபேறு, நீண்ட ஆயுள் தரும் ஹோமங்கள்

    நம் கண்களுக்கு தெரியாமல் நம்முடைய கோரிக்கைகளை இறைவனிடம் சேர்ப்பிக்கும் சிறந்த பணியை ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னி செய்து கொண்டிருக்கிறார்.
    ஒருவருக்கு ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்களுக்கும், வீட்டிலும் தொழில் முறையிலும் நடக்கும் விரும்பத்தகாத பிரச்சனைகளுக்கும் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி தேடுவது நல்ல பலன் தரும். அதிலும் தோஷ பரிகாரங்களில் மிகவும் உயர்வாக கருதப்படுவது, ஹோமங்கள். இது இன்று நேற்றல்ல, புராண காலத்தில் இருந்தே தாங்கள் விரும்பிய காரியங்கள் வெற்றி அடைய சித்தர்களும், யோகிகளும், அறிவில் சிறந்த ஞானிகளும், நாடாளும் அரசர்களும் ஹோமங்கள் செய்து தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்துள்ளனர்.

    பரிகார ஹோமங்களில் வளர்க்கப்படும், அக்னி மற்ற தெய்வங்களின் தூதர் போல செயல்படுகிறார். நம் கண்களுக்கு தெரியாமல் நம்முடைய கோரிக்கைகளை இறைவனிடம் சேர்ப்பிக்கும் சிறந்த பணியை ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னி செய்து கொண்டிருக்கிறார்.

    இதில் சில முக்கியமான ஹோமங்களையும், அது செய்வதால் கிடைக்கும் பலன்களையும் பார்ப்போம்.

    கணபதி ஹோமம் (தடைகள் நீங்க): ஹோமங்களில் தலையாயது, முழுமுதற் கடவுளான கணேசனுக்கு செய்யப்படும் கணபதி ஹோமம். எந்த ஒரு புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும், கணபதி ஹோமம் செய்வது சிறப்பு. இதனால்,தொழில் மட்டுமின்றி, நமது உடல், மனம், மற்ற விஷயங்களில் ஏற்படும் தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

    வெள்ளிக்கிழமை, மற்றும் சதுர்த்தி நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். இதற்கான ஹோமத்திரவியங்கள், அஷ்டத்திரவியம் மற்றும் தேங்காய்த்துண்டு. குறிப்பாக 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்தால் செல்வம் வளரும்.

    அவஹந்தி ஹோமம் (நாடு செழிக்க): அவஹந்தி ஹோமம் நடத்துவதால், விவசாயத்தில் நல்ல மகசூல் ஏற்படும் என்பது நம்பிக்கை. இன்றுள்ள காலகட்டத்தில், நாடு பசுமைப்புரட்சியில் சிறக்கவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், இந்த ஹோமம் அவசியமாகிறது.



    ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு): குழந்தையின் நீண்ட ஆயுளுக்காகவும், தேக ஆரோக்கியத்தை முன்னிட்டும் ,குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக் கூடஇந்த ஹோமம் செய்வதன் மூலம் தீர்த்துவிடலாம்.

    மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி): ஒருவரின் பிறந்த நாளன்று சிவபெருமானுக்காக செய்யப்படும் ஹோமம் மிருத்தியஞ்ச ஹோமம் ஆகும். அகாலமரணத்தை தவிர்ப்பதற்காகவும், ஆயுள் விருத்தியடையவும் , நீண்டநாட்களாக தொடரும் வியாதிகளில் இருந்து விடுபடவும் இந்த ஹோமம் செய்யப்படுகிறது.இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.

    லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி): 16 வித செல்வங்களை அடையவும், சர்வமங்களங்களை அடையவும், மேன்மையை அடையும் பொருட்டும் இந்த ஹோமம் செய்யப்படுகிறது. எதிர்மறை சக்திகள் மற்றும் சாபங்களை நீக்கி நம் இல்லத்தில் செல்வ செழிப்பிற்கு வழிவகுக்கவும் லட்சுமி ஹோமம் செய்தல் நலம்.

    வித்யா ஹோமம் (கல்வி கேள்விகளில் சிறக்க): மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறவும், புத்திகூர்மை ஏற்படவும், ஞானம் விருத்தியடையவும், நினைவாற்றல் பெருகவும், உயர்கல்வி வாய்ப்பு கிட்டவும், செய்யும் தொழிலில் முன்னேற்றம் காணவும் வித்யா ஹோமத்தை நடத்த வேண்டும்.

    மங்கள சமஸ்கரண ஹோமம் (சந்தான பாக்கியம்): திருமணம் ஆகி நீண்டகாலமாக குழந்தைக்காக ஏங்கும் தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் மங்கள சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை பாக்கியம் பெற இந்த ஹோமத்தை நடத்தலாம்.

    கனகதாரா ஹோமம் (திறன்கள் மேம்பட): பரம ஏழையையும் செல்வந்தன் ஆக்கிவிடும் ஹோமம் கனகதாரா ஹோமம் . ஒரு மனிதனின் வெற்றிக்கு மூலகாரணமாக இருக்கும் அவனது திறமையை வெளிகொணர்ந்து அவனை மேன்மை அடையச் செய்யும் ஹோமம் இது.

    ஹோமங்கள் நம் வாழ்வில் மலர்ச்சியையும் மேன்மைகளையும் கொண்டு வரட்டும்.
    Next Story
    ×