search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் தோஷம் அரிய தகவல்கள்
    X

    செவ்வாய் தோஷம் அரிய தகவல்கள்

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும். செவ்வாய் பகவானை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    செவ்வாயின் அளவற்ற வீர்யம்

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும். பூமாதேவியினால் வளர்க்கப்பட்டவன் செவ்வாய் (தரணீ கர்ப்ப சம் பூதம்) என விளக்குகிறார் ஸ்ரீ வியாச பகவான். பரத்வாஜ முனிவரின் கருணையினால், அவரது மகனாக வளர்ந்து, நவக்கிரகங்களில், அக்கினிக்குச் சமமான ஒளியும், பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.

    செந்நிறத்தில், கொழுத்து விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பைப் போல் ஜொலிப்பதால், செவ்வாய் என்று பெயரை அடைந்தான். கிரேக்க பாசையில் மாஸ் எனப் போற்றப்பட்ட இக்கிரகம், பூமி, நிலம், செம்பு, உத்தம சகோதரர்கள், சேனைகளுக்குத் தலைமை, பிடிவாதம், நினைத்ததைச் சாதித்தே தீரும் வல்லமை. முன்கோபம் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்றவர் ஆவார்.

    செவ்வாய்க்கு உரியது :

    பெயர்    - அங்காரகன்
    மலர்    - செண்பகம்
    வாகனம்    - அன்னம்
    தானியம்    - துவரை
    நவரத்னம்    - பவழம்
    வஸ்த்ரம்    - சிவப்பு
    அன்னம்    - துவரை
    திக்கு    - தெற்கு

    அங்காரகனுக்கு பிடித்தமானவை :

    தானியம்    : துவரை
    மலர்    : செண்பகம், செவ்வரலி
    வஸ்திரம்    : சிவப்பு ஆடை
    ரத்தினம்    : பவழம்
    நிவேதனம்    : துவரம் பருப்புப்பொடி அன்னம்
    சமித்து    : கருங்காலி
    உலோகம்    : செம்பு

    தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள் :

    செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதுநல்லது.

    எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? :

    செவ்வாய் தசையில் செவ்வாய் புத்தி நடப்பவர்கள்:
    “சூரிய காயத்ரி”-ஜபித்து வரவும், கதிரவனை வழிபட்டு வரவும்.
    செவ்வாய் தசையில் ராகு புத்தி நடப்பவர்கள்:
    ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வரவும்.
    செவ்வாய் தசையில் குரு புத்தி நடப்பவர்கள்:
    பிரதோஷ வழிபாடு செய்யவும்.
    செவ்வாய் தசையில் சனி புத்தி நடப்பவர்கள்:
    நீலகண்டர் “திரிசதி”-யை பாராயணம் செய்து வரவும்.
    செவ்வாய் தசையில் புதன் புத்தி நடப்பவர்கள்:
    “சூரிய காயத்ரி”- ஜபித்து வரவும்.
    செவ்வாய் தசையில் கேது புத்தி நடப்பவர்கள்:
    காளபைரவரை செவ்வாய் தோறும் வணங்கி வரவும்.
    செவ்வாய் தசையில் சுக்கிரன் புத்தி நடப்பவர்கள்:
    வரலட்சுமி பூஜை செய்து வரவும்.
    செவ்வாய் தசையில் சூரியன் புத்தி நடப்பவர்கள்:
    கோ பூஜை வெள்ளி தோறும் செய்து வரவும்.
    செவ்வாய் தசையில் சந்திரன் புத்தி நடப்பவர்கள்:
    அஷ்டலட்சுமிகளை வணங்கி வரவும்.

    செவ்வாய் தோஷம் ஆணுக்கு இருந்தால் பெண்ணுக்கும் அதே அளவு தோஷம் இருக்க வேண்டும்.

    இதில் ஆண்களை விட பெண்கள்தான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தோஷமுள்ள பெண்கள் தோஷமுள்ள ஆண்களை மணப்பதுதான் முறையானது. பாதுகாப்பானது. தீர்க்க சுமங்கலியாக கணவனுடன் நீண்ட காலம் வாழச் செய்வதாகும்.

    ஆண்களும் தோஷமுள்ளவர்களானால் தோஷமுள்ள பெண்ணை மணந்தால்தான் வாழ்க்கை தங்கு தடையின்றி மகிழ்ச்சியுடன் நடந்து வரும்.

    துவரை தானம்:

    உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

    வாழைப்பூ தானம்:


    ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து தந்து விட வேண்டும்.

    நோய், கடன் தொல்லை உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

    செவ்வாய்க்கிழமையில் வரும் சுவாதி நட்சத்திரத்தில், ஒரே வாழை மரத்தின் பழம், பூ இவற்றை அதே மரத்தின் தலை இலையில் வைத்து, துவரை, தேங்காய், வெல்லம், மஞ்சள் துண்டு, வெற்றிலைபாக்கு காணிக்கை இவற்றை வைத்து தானம் செய்ய வேண்டும்.

    இதை முருகன் கோவிலிலோ, அல்லது பைரவர் கோவிலிலோ வைத்து செய்ய வேண்டும். தோசம் மாறி சுகம் உண்டாகும். வியாதியில் இருந்து பூரண குணம் பெறலாம். கடன் அடையும்.
    Next Story
    ×