search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏழு பிறவியின் துன்பம் போக்கும் வன்னி விநாயகர்
    X

    ஏழு பிறவியின் துன்பம் போக்கும் வன்னி விநாயகர்

    எந்த ஜென்மத்தில் என்ன துன்பம் பிறருக்குச் செய்தோமோ தெரியாது என்பதால் இப்பிறவியில் விசேஷ தினங்களில் வன்னி இலைகளால் விநாயகரை வழிபட்டு துன்பங்கள் நீங்கி, இன்பகரமான வாழ்க்கையைப் பெறுவோம்.
    முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டை ஆண்டு வந்த சாம்பன் எனும் அரசனின் கொடுங்கோலான ஆட்சியால் மக்கள் துயரமடைந்தனர். ‘துர்புத்தி’ என்ற அமைச்சன் மன்னனின் அடாவடித்தனத்துக்குத் துணை நின்றான். அதனால், மறு பிறவியில் காகமும் ஆந்தையுமாக இருவரும் பிறந்தனர். அடுத்து பாம்பும் தேளுமாகவும், நான்காம் பிறவியில் நாயும் பூனையுமாகவும், ஐந்தாம் பிறவியில் குதிரையும் கழுதையாகவும், ஆறாம் பிறவியில் மீனும் முதலையுமாகவும், ஏழாம் பிறவியில் புலியும் மானுமாகவும் பிறந்தனர். அதற்கடுத்த பிறவியில் வேடனும் ராட்சதனுமாகப் பிறந்து ஒவ்வொரு பிறவியிலும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டே போகும் வாழ்க்கை அமைப்பு அமைந்தது.

    அப்படி, வேடனை ராட்சதன் துரத்திய நிலையில், பயத்தில் வேடன் வன்னி மரத்தில் ஏறி பதுங்கும்போது ஏற்பட்ட சலனத்தால் வன்னி மர இலைகள் உதிர்ந்தன. உதிர்ந்த வன்னி இலைகள் மரத்தின்கீழ் இருந்த விநாயகர்மீது விழுந்தன. அப்போது ராட்சதனும் அம்மரத்தில் ஏறி வேடனைப் பிடிக்க முயலுகையில், வன்னி இலைகள் மீண்டும் உதிர்ந்து விநாயகருக்கு அர்ச்சனையாக விழுந்தன. அந்த நேரம் அந்தி சாய்ந்த நேரம். சதுர்த்தி திதியுடன் உள்ள அந்தி நேரத்தில் வன்னி இலைகளால் இருவரும் அர்ச்சனை செய்த காரணத்தால் ஒருவரை ஒருவர் வீழ்த்தி கைலாயம் சென்றபோது, சொர்க்கம் அவர்களுக்குக் கிடைத்தது என்று புராணங்கள் கூறுகின்றன.

    ஏழு பிறவியில் அவர்கள் அடைந்த துன்பங்கள் சங்கடஹர சதுர்த்தி வேளையில், வன்னி இலைகளால் அர்ச்சித்ததால் இறைவன் முக்தி கொடுத்தார். எனவே, எந்த ஜென்மத்தில் என்ன துன்பம் பிறருக்குச் செய்தோமோ தெரியாது என்பதால் இப்பிறவியில் விசேஷ தினங்களில் வன்னி இலைகளால் விநாயகரை வழிபட்டு துன்பங்கள் நீங்கி, இன்பகரமான வாழ்க்கையைப் பெறுவோம்.

    Next Story
    ×