search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாக தோஷம் பாதித்தவர்களுக்கு திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?
    X

    நாக தோஷம் பாதித்தவர்களுக்கு திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?

    ஒரு ஆணின் ஜாதகத்தில் 2,4,5,7,8,12-வது இடங்களால் ராகு அல்லது கேது சுபபார்வையுடன் இருந்தால், பெண் ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.
    * ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் நாகதோஷம் இருந்தால் திருமணப் பொருத்தம் செய்யலாம். ஆண் அல்லது பெண், இருவர் ஜாதகத்தில், ஒருவருக்கு தோஷம் இருந்து, மற்றவருக்கு தோஷம் இல்லாவிட்டால், அந்த ஜாதகத்தைப் பொருத்தம் செய்யக்கூடாது.

    * அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்ம நட்சத்திரம் தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.

    * அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்ம நட்சத்திரம் வரும். ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

    * ஜாதக பலன் கூறும்போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள்.

    * ஒரு ஆணின் ஜாதகத்தில் 2,4,5,7,8,12-வது இடங்களால் ராகு அல்லது கேது சுபபார்வையுடன் இருந்தால், பெண் ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.

    சில பரிகாரங்கள் :

    1. வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் நாக உருவத்தை வைத்து கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும்.

    2. செம்பு அல்லது வெள்ளி யினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்தல் வேண்டும்.

    3. நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். மகளிர் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகிவிடும்.

    ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு உணவருந்தலாம்.

    4. எந்த விதமான சர்ப்பதோஷமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    பரிகார பஞ்ச ஸ்தலங்கள் :

    1. திருகாளகத்தி. சிமந்திரா (ஆந்திரா) மாநிலத்தில் உள்ளது..
    2. குடந்தை கிழ் கோட்டம் கும்பகோணம் அருகில் உள்ளது
    3. திருபாம்புரம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது
    4. கிழ் பெரும்பள்ளம் மாயவரம் அருகில் உள்ளது
    5. திருநாகைக் காரோணம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்தியில் உள்ளது.
    Next Story
    ×