search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் தோஷம் நீக்கும் பத்ரகிரி சிவசுப்பிரமணியர்
    X

    செவ்வாய் தோஷம் நீக்கும் பத்ரகிரி சிவசுப்பிரமணியர்

    செவ்வாய் தோஷம் நீங்க வேண்டி வரும் பக்தர்கள் இந்த கோவிலுல் உள்ள குளத்தில் நீராடிவிட்டு, பூஜையில் கலந்துகொண்டு முருகனை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
    சிக்கமகளூரு மாவட்டம் பத்ராவதி மற்றும் தரிகெரே பகுதிகளுக்கு இடையே எம்.சி.ஹள்ளி கிராமத்தில் பத்ரகிரி மலை அமைந்துள்ளது. அந்த மலையில் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் முருகன் ஆலயம் இருக்கிறது. இக்கோவிலில் வள்ளி-தெய்வானையுடன் சிவசுப்பிரமணியராக வீற்றிருந்து, முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த ஆலயத்தில் மூலவரான முருகன் பிரமாண்ட தோற்றத்துடன் சிவசுப்பிரமணி சாமியாக காட்சி தருகிறார். கருவறையில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி உள்ளார்.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செவ்வாய்தோஷம், பித்துரு தோஷம், ஜாதக பொருத்தமின்மை, திருமணத்தடை ஆகியவை நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம், செல்வம், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருதல் ஆகியவை கிட்டும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. அதற்கான பரிகார முறைகளும் உள்ளன.



    அதாவது செவ்வாய் தோஷம் நீங்க வேண்டி வரும் பக்தர்கள் திங்கட்கிழமை அன்று இரவே கோவிலுக்கு வந்து, குளத்தில் நீராடிவிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு முதல் பூஜையில் கலந்துகொண்டு முருகனை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    அதேபோல், செவ்வாய்க்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் திருமணத்தடை, ஜாதக பொருத்தமின்மை, புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்து பூஜை செய்தால் தடைகள் நீங்கி நினைத்தது நடக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

    இக்கோவில் பெங்களூரு-ஒன்னாவர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் பத்ரகிரி அமைந்துள்ளது.
    Next Story
    ×