search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமணத்தடை அகற்றும் திருவைராணிக்குளம் மகாதேவர்
    X

    திருமணத்தடை அகற்றும் திருவைராணிக்குளம் மகாதேவர்

    திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் தலமாக விளங்குகிறது திருவைராணிக்குளம் மகாதேவர் கோவில்.
    திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் தலமாக விளங்குகிறது திருவைராணிக்குளம் மகாதேவர் கோவில்.

    திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் தலமாக விளங்குகிறது, கேரள மாநிலம், திருவைராணிக்குளம் மகாதேவர் கோவில்.

    இக்கோவிலில் வட்டவடிவமான கருவறைப் பகுதியில் முன்புறம் மகாதேவரும், பின்புறம் பார்வதி தேவியும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் சதிதேவி, தர்மசாஸ்தா, பெருமாள், யட்சி ஆகியோர்களுக்குத் தனிச் சன்னிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு அருகில் பெரிய தெப்பக்குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலில் இருக்கும் பார்வதி சன்னிதி ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே திறந்து வைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் மாலை வேளையில் பார்வதி தேவி சன்னிதி வழிபாட்டுக்காகத் திறக்கப்படுகிறது. 12 நாட்களுக்குப் பின்பு மீண்டும் சன்னிதி மூடி வைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் இச்சன்னிதியிலிருக்கும் சாளரத்தின் வழியாகப் பக்தர்கள் பார்வதி தேவியை வேண்டிச் செல்கின்றனர்.



    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைத் திருநாளில் தொடங்கி எட்டு நாட்கள் இங்கு சிறப்பு விழா ஒன்றும் நடைபெறுகிறது. இவ்விழாவில் நடைபெறும் ஆறாட்டு விழா மிகவும் சிறப்புடையதாக இருக்கிறது. இவ்விழா நாட்களில் நடைபெறும் அன்னதானத்தில் கலந்து கொண்டு, உணவு உண்பவர்களுக்கு வயிறு தொடர்புடைய அனைத்து நோய்களும் நீங்கிவிடும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    இக்கோவிலில் இருக்கும் பார்வதி தேவி சன்னிதி திறந்திருக்கும் பன்னிரண்டு நாட்களில் இங்குள்ள பார்வதி தேவியைத் திருமணத்தடை உடையவர்கள்  வழிபட்டுச் சென்றால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர் களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும். பிரிந்திருக்கும் தம்பதியர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மறைந்து, அவர்களிருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வர் என்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.  

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவிலிருந்து அங்கமாலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீமூலநகரம் சென்று, அங்கிருந்து வல்லோம் சாலையில் 1½ கிலோ மீட்டர் தூரமும், அங்கிருந்து அகவூர்  திருவைராணிக்குளம் செல்லும் சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரமும் என மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. ஆலுவா, காலடி ஆகிய ஊர்களிலிருந்து திருவைராணிக்குளத்திற்குக் கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    Next Story
    ×