search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோஷம், தோல் நோய் தீர்க்கும் திருமங்கலக்குடி
    X

    தோஷம், தோல் நோய் தீர்க்கும் திருமங்கலக்குடி

    கும்பகோணம் அருகில் திருமங்கலக்குடியில் நவகிரக தலங்களில் முதல் தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனை வணங்கினால் தோஷம், நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
    நவக்கிரகங்களால் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் ஆலயங்கள், தமிழகத்தில் நிறைய இருக்கின்றன. அவற்றுள் ஒன்று திருமங்கலக்குடி. இது கும்பகோணம் அருகில் உள்ளது. இத்தலத்தில் வழிபட்ட பிறகே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

    சனிப்பெயர்ச்சியால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளை சிவன் - பார்வதி - முருகருக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து பின் சூரியனாரை மனமுருக பிரார்த்தித்தால் எப்படிப்பட்ட சனி தோஷமும் விலகும்.

    இந்த தலத்திற்கு ‘பஞ்சமங்கள சேஷத்திரம்” என்ற நாரதர் கூறுவதாக நாடி சாஸ்திரம் பேசுகிறது. ஆதித்ய ஹருதய ஸ்தோத்திரம். அனுமன் சாலீசா போன்ற ஸ்லோகங்களை இந்த பஞ்சமங்கள சேஷத்திரத்தில் அமர்ந்து 12 முறை பாராயணம் செய்தால், களத்திர தோஷம் நீங்கும். விவாகம், புத்திர, கல்வி, உத்யோகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களும் முற்றிலுமாக களையப்படும்.



    காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி தாயாரையும் பிரார்த்தித்த பின், சூரிய காயத்ரியை நூற்றி எட்டு முறை உச்சரித்தப்படி தாமரை மலர்களை சமர்ப்பித்து பெரும் நல்விளைவுகளில் சூரிய உதய நேரத்தில் பாராயணம் செய்தால் அஷ்டம் சனி, ஏழரைச் சனி, கண்டகச் சனி போன்ற 12 விதமான சனி தோஷங்கள் நிவாரணம் ஆவதுடன் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும்.

    தோல் நோய் உள்ளவர்கள் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, தொடர்ந்து 11 வாரங்கள் இத்தலத்திற்கு வந்து இங்கு தரும் வெள்ளெருக்கு இலையில் சுவாமி நிவேதனம் செய்த தயிர்சாதத்தை வைத்து சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    ஆடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இறைவன் பிராணநாதசுவாமி- இறைவி மங்களாம்பிகை.

    தல விருட்சம் - வெள்ளெருக்கு

    இத்திருத்தலத்தில் முறைப்படி வழிபாடு செய்தால் ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். அன்பான இல்லறமும் அமையும்.
    Next Story
    ×