search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பில்லி, சூனியம், திருமணத்தடை நீக்கும் வனபத்திர காளியம்மன்
    X

    பில்லி, சூனியம், திருமணத்தடை நீக்கும் வனபத்திர காளியம்மன்

    மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்திர காளியம்மனை வழிபாட்டால் திருமண தடை, பில்லி, சூனியம், எதிரிகள் துன்பம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தேக்கம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது வனபத்திர காளி கோவில்.

    பசுமையான மலையடிவாரத்தில், குளுமையான பவானி ஆற்றின் கரையில், வனப்பகுதியிலே எழுந்துள்ள ஆலயம். அருகில் உள்ள பவானி ஆற்றில் மூழ்கி எழுந்து இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளும் பகையும் விலகும், அதுவும் அமாவாசை என்றால் விசேஷம் என்று நம்பிக்கையுடன் பல ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் சொல்கிறார்கள். ஆடி அமாவாசை சிறப்பென்றாலும் ஒவ்வொரு அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் செய்ய ஏற்ற நாள்.

    எதிரிகள் தாக்கத்திலிருந்து விடுபடவும், திருமணத்தடை விலகவும், பிள்ளைப் பேறு கிட்டவும் பவானி ஆற்றில் இருக்கும் உருண்டைக் கற்களை எடுத்து வந்து மஞ்சள் துணியில் முடிந்து இத்திருக்கோவிலின் மேற்கு சுற்றில் நிற்கும் தொரத்தா மரத்தில் கட்டிவிட்டு வேண்டிய வரம் தர பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சிவப்பு நிற காய்களுடன் நிற்கும் தொரத்தா மரம் என்னும் காட்டு மரம் தல விருட்சமாக இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு மருத்துவகுணமுடைய இம்மரத்தின் இலைகள் தோல் நோய் தீர்க்கும் திறனுடையது. இத்திருக்கோவிலின் எதிரே பூக்குண்டம் அமைக்கப்பட்டு ஆடிமாதத்தில் விழா நடைபெறுகிறது.

    இத்தலத்தில் வனத்திடையே நின்றருளும் வனபத்திரகாளி மங்கலத்தையும், வேண்டும் வரத்தையும் தருவாள் என்பது வழிபடுவோரின் நம்பிக்கை.
    Next Story
    ×