search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தை அமாவாசைக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்
    X

    தை அமாவாசைக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

    நமக்காக வாழ்ந்து, நம்மைப் பற்றி, நம் எதிர் காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்றாக இந்த பித்ரு பூஜை அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சில விஷயங்களை செய்யலாம்.
    பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் உள்ளன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாளே அமாவாசையாகும். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. எனவேதான் அமாவாசை அன்று, சில செயல்களைத் தொடங்கினால் அது வெற்றியாகும் என்பார்கள். ராகு, கேது மற்றும் கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண, அமாவாசையில் பரிகாரம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். இன்றைய தினம் மூதாதையர்களின் ஆசிகளையும் பெறலாம்.

    பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு உணவளித்தல் 3 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. புண்ணிய நதிகளில் நீராடுதல் 3 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. ஏழைப் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்தல். 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. திருக்கோவிலில் தீபம் ஏற்றி வைத்தல் 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது.

    அன்னதானம் செய்வது 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. பித்ரு பூஜை செய்ய உதவுதலுக்கு 6 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது.  திருக்கோவில்களுக்கு புனர்நிர்மாணம் செய்விப்பதற்கு 7 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திமக்கிரியை செய்வித்தல் 9 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. இவற்றைப் போலவே, முன்னோர்களுக்கு கயா சேத்திரத்தில் திதி பூஜை செய்தல் 21 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது.

    நமக்காக வாழ்ந்து, நம்மைப் பற்றி, நம் எதிர் காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்றாக இந்த பித்ரு பூஜை அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கூட நாம் இதுபோன்ற விஷயங்களை செய்யலாம். தை அமாவாசை என்கிற புண்ணிய நாளில் நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களது நல்லாசியினைப் பெறுவோம்.
    Next Story
    ×