search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குடும்ப ஒற்றுமை தரும் ஆலயம்
    X

    குடும்ப ஒற்றுமை தரும் ஆலயம்

    இங்கு குடும்ப ஒற்றுமை வேண்டி இந்த கோவிலுக்கும் வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
    ‘வியாக்ரம்’ என்றால் புலி என்று பொருள். இந்தப் பகுதி தமிழில் ‘பெரும்புலிவனம்’ என்று அழைக்கப்பட்டது. பின்னர் பெரும்புலியூர் என்று மாற்றமடைந்தது. பெரும்புலியூர் என்பது நாளடைவில் பெரம்பலூர் என்று மருவி விட்டது. வியாக்ரபாத முனிவரும், பஞ்சபாண்டவர்களும் வழிபட்ட விஷ்ணு கோவில் பெரம்பலூரில் இருக்கிறது. இந்தக் கோவிலில் விஷ்ணு மதன கோபால சுவாமியாகத் தனிச் சன்னிதியிலும், மரகதவல்லித் தாயார் தனிச் சன்னிதியிலும் இருந்து அருள் புரிகின்றனர்.

    இங்கிருக்கும் விஷ்ணுவை வழிபட்ட பஞ்ச பாண்டவர்கள், ‘இறைவா! நாங்கள் இந்தக் காட்டிற்குள் வந்து அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம், எங்கள் உறவினர்களால் வந்தது. எங்களைப் போன்று, இனி உறவினர்களைப் பிரிந்து யாரும் துன்பப்படாமலிருக்க இங்கிருந்து அருள் புரிய வேண்டும். இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு, அவர்கள் உறவினர்களுக்கிடையே ஒற்றுமை நீடித்திட அருள வேண்டும்’ என்று வேண்டினர். இறைவனும் அவ்வாறே அருளினார். எனவே, இங்கு குடும்ப ஒற்றுமை வேண்டி வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

    இந்தக் கோவிலுக்கு அருகில் தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. சிலர் அந்தக் குளத்தை ‘புலியக்குளம்’ என்றும், சிலர் ‘திரவுபதி குளம்’ என்றும் சொல்கிறார்கள்.
    Next Story
    ×