search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடவுள் சொல்வது உண்மை
    X

    கடவுள் சொல்வது உண்மை

    “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” ஆதியாகமம்- 3:5
    “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” ஆதியாகமம்- 3:5

    மனிதன் கடவுள் கூறிய உண்மைகளைவிட சாத்தான் கூறுகின்ற பொய்களைத்தான் அதிகமாக நம்புகின்றான். சாத்தான் கூறின பொய்களைச்சார்ந்து மனிதன் உடனடியாக செயல்பட ஆரம்பிக்கின்றான். ஆனால் கடவுள் கூறிய உண்மைகளை உண்மைகள் என்று உணர்ந்தாலும் செயல் படவோ, மிகவும் தாமதிக் கின்றான்.

    ஆதியில் பிசாசானவன் சொன்ன பொய் ஆதாம் ஏவால் தம்பதியினரால் உடனடியாக நம்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே மனிதகுலமே கேட்டுக்குள் விழ்ந்தது. சாத்தான் கூறுகின்ற பொய்கள் கவர்ச்சியானவை. எனவே உடனடியாக அவை ஏற்கப்படுகின்றன. கடவுள் கூறுகின்ற உண்மைகள் தரமானவை. ஆனால் கவர்ச்சியற்றவை. எனவே மனிதனை எளிதாக அவை ஈர்ப்பதில்லை.

    சந்தோஷத்திற்கு மிக அவசியமாக சாத்தான் பணம், பொருள், ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றை காண்பிக்கின்றான். ஆனால் கடவுளோ, நற்பண்புகளையும், நற்சுபாவங்களையும் காண்பிக்கின்றார். சாத்தான் சொல்வது பொய். ஆனாலும் மனிதன் எளிதாக கவரப்படுகின்றான். கடவுள் சொல்வது உண்மை. ஆனால் மனிதனோ அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் போகின்றான்.

    கடவுளை நம்புவதாகவும், வேத வார்த்தைகளை நம்புவதாகவும் கூறுகின்ற அநேகர் கூட உண்மையில் சாத்தானின் பொய்களுக்குத்தான் அவர்கள் செவி கொடுக்கின்றார்கள். எனவேதான் பணம் பொருளை தேடவும், ஆஸ்தி அந்தஸ்துக்களை பெருக்கவும், பதவி, ஆடம்பரங்களை நாடவும், ஆடம்பரவாழ்வில் மூழ்கவும் அவர்கள் அதிக தீவிரமாய் இருக்கின்றனர். எனவேதான் நற்குணங்களைவிடவும் நற்பண்பு சார்ந்த வாழ்க்கையை விடவும் அவர்கள் பணத்திற்கும், பொருளுக்கும், ஆஸ்திக்கும், அந்தஸ்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

    நாம் எவற்றை நம்புகின்றோம். எவற்றை மேன்மையாக ஒத்துக்கொள்கின்றோம் என்பதில் அல்ல. எவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அடைந்திட அதிக கவனம் செலுத்துகின்றோம் என்பதே முக்கியம். கடவுள் எல்லாவற்றையும் விட நம்மிடம் உள்ள குணங்களும் நாம் பின்பற்றி போகிற பாதைகளும் நம்முடைய வாழ்வின் நோக்கங்களும் தான் நம்முடைய சந்தோஷத்தை நிர்ணயிக்கின்றது என்ற உண்மையை கூறுகின்றார். நாம் அதனை நம்பி அவற்றிற்கு முதற்கவனம் செலுத்தினால் அங்கே நாம் சந்தோஷத்தை காண்போம்.

    “ நல்லதை பிறரிடம் கண்டால் உன்னிடம் அதை காண விரும்பு

    தீயதைக்கண்டாலோ உன்னிடம் அது காணாதபடி பார்த்துக்கொள்”

    - சாம்சன் பால்
    Next Story
    ×