search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூண்டி மாதா பேராலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பூண்டி மாதா பேராலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

    பூண்டிமாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா தேர்பவனி

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெரு விழா தேர் பவனி நடைபெற்றது.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மரியாள் பிறப்பு பெருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறு சப்பர பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நேற்று மாலை மரியா-விடியற்காலத்தின் நட்சத்திரம் என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, அந்தோணிஜோசப், பூண்டி மாதாபேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ் மற்றும் சுற்று வட்டார பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு 10.05 மணிக்கு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னை மரியாளின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகள் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். அப்போது ஆலய மணிகள் ஒலித்தன. சிறப்பு வாணவேடிக்கை நடைபெற்றது. தேர்பவனியின் போது திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அன்னை மரியாவை வழிபட்டனர். இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு மரியா- புதுமையின் அன்னை என்ற பொருளில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    தேர்பவனியையொட்டி பூண்டி மாதா பேராலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×