search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
    X
    வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா இன்று நிறைவு பெறுகிறது

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியிறக்கத்துடன் நிறைவுபெறுகிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. கிறிஸ்தவ ஆலயத்திற்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா‘ என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணியும் ஒன்று என்பது சிறப்பாகும்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் அன்னை மரியாவின் பிறந்தநாள் விழா ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. தேர்பவனியையொட்டி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை, வாகனங்கள் மூலம் வந்துள்ளனர். இதனால் வேளாங் கண்ணி பக்தர்களின் கடலில் தத்தளித்தது. அதைதொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மாறை மாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதைதொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்படுகிறது. பின்னர் 6.15 மணிக்கு பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி வேளாங்கண்ணியில்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×