search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூய இருதய ஆண்டவர் பசிலிகா ஆண்டு பெருவிழாவில் தேர்பவனி நடந்த போது எடுத்த படம். (உள்படம்: தூய இருதய ஆண்டவர்)
    X
    தூய இருதய ஆண்டவர் பசிலிகா ஆண்டு பெருவிழாவில் தேர்பவனி நடந்த போது எடுத்த படம். (உள்படம்: தூய இருதய ஆண்டவர்)

    தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேர்பவனி

    புதுவை ரெயில் நிலையம் அருகே பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    புதுவை ரெயில் நிலையம் அருகே பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய நாள் முதல் தினமும் திருப்பலிகள் நடைபெற்று வந்தன.

    பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று மாலை நடந்தது. இதையொட்டி நேற்று பிற்பகலில் புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து மாலையில் நடந்த தேர்பவனியை கோவை ரெக்டர் தன்சுராஜ் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. ஆண்டு பெருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×