search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியும், வேண்டுதல் சப்பரபவனியும், வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் ஆடம்பர சப்பர தேர்பவனி நடைபெற்றது.
    புள்ளம்பாடியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித அன்னாள் ஆலய திருவிழா, கடந்த 17-ந் தேதி பங்குத்தந்தை சூசைமாணிக்கம், உதவி பங்குத்தந்தை அருள்தொன்போஸ்கோ ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அருட்தந்தையர்கள் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்று, நவநாள் சப்பரம் ஆலயத்தை சுற்றி வலம்வந்தது.

    கடந்த 24-ந் தேதி சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியும், வேண்டுதல் சப்பரபவனியும், நேற்று முன்தினம் வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் ஆடம்பர சப்பர தேர்பவனி நடைபெற்றது. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக புனித அன்னாள் சிலை தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. தேரினை மறைவட்ட முதன்மை குரு பீட்டர்ஆரோக்கியதாஸ் புனிதப்படுத்தி தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி தலைவர் ஆலிஸ் செல்வராணி ஜோசப் செல்வராஜ், செயல் அலுவலர் ஜவஹர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அருட்தந்தையர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவில் ஆலயத்தை வந்தடைந்தது.
    நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த கருங்கண்ணியில் உள்ள பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த கருங்கண்ணியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலம் நடைபெற்றது. ஆலயத்தின் வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் உள்ளே மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தால் முடி சூட்டுவிழா நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை செயலாளர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதில் வேளாங்கண்ணி பேராலய உதவி பங்குதந்தை டேவிட்தன்ராஜ், கருங்கண்ணி பங்கு தந்தை சவரிமுத்து, திருப்பூண்டி பங்குதந்தை ஆரோஆரோக்கியசாமி மற்றும் அந்தோணிபெர்ணாடு, பிரான்சிஸ், விக்டர் பவுல்ராஜ் உள்ளிட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழா நாட்களில் நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, நற்கருணை ஆசிர், சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.
    புனித உபகார அன்னை ஆலய திருவிழாவில் தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் உறுதி பூசுதல், தேர்பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது.
    காவல்கிணறு இயேசுவின் திருஇருதய ஆலயம் புனித உபகார அன்னை ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் கொடியேற்றினார்.

    ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு திருயாத்திரை, திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 8-ம் திருவிழா அன்று காலை திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு நற்கருணை பவனியும் நடைபெற்றது. 9-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும் நடந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் உறுதி பூசுதல், மாலை 3 மணிக்கு தேர்பவனி, 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் திரளானவர்கள் பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள் ஆரோக்கிய ராஜ், வினித்ராஜா, பங்கு மேய்ப்பு பணி குழுவினர் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
    தேர் பவனியை அருட்தந்தை ஜார்ஜ் புனித நீரை கொண்டு மந்தரித்து தொடங்கி வைத்தார். இந்த தேர் பவனி பெரிய ஏரிக்கோடி கிராமங்கள் வழியாக வந்தது.
    கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் உள்ள புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட பூஜைகள் நிறைவேற்றப்பட்டன. நேற்று முன்தினம் இரவு புனித சூசையப்பர் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது.

    முன்னதாக, கோவை நல்லாயன் குருத்துவக்கல்லூரி பேராசிரியர் அந்தோணி மதலைமுத்து தலைமையில், ஆடம்பர கூட்டு திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித சூசையப்பர் தேர்பவனி நடைபெற்றது.

    தேர் பவனியை அருட்தந்தை ஜார்ஜ் புனித நீரை கொண்டு மந்தரித்து தொடங்கி வைத்தார். இந்த தேர் பவனி பெரிய ஏரிக்கோடி கிராமங்கள் வழியாக வந்தது. தேர்த்திருவிழாவில், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, தேரின் மீது உப்பு, மிளகு ஆகியவற்றை தூவினர்.
    ஆலயத்திற்கு வந்த சப்பரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் இட்டு சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    தாடிக்கொம்புவை அடுத்த மறவபட்டி புதூரில் பழமையான புனித சலேத் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 137-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. கடந்த 13-ந்தேதி நவநாள் நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி ஊர்வலமும், திருப்பலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    21-ந்தேதி புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருவிழாவில் புதுநன்மை திருப்பலி மறவபட்டி பங்குத்தந்தை லியோ ஜோசப் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் மின்ரத பவனி நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று நடந்த பகல் திருவிழாவில் புனித சலேத் மாதாவின் பெரிய சப்பர பவனி நடைபெற்றது. முடிவில் ஆலயத்திற்கு வந்த சப்பரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் இட்டு சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பெரிய தனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மா விளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், 26-ந் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    நாமக்கல் பிரதான சாலையில் பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேர்த்திருவிழா சுமார் 3 மாத காலம் விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் தேர்த்திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8-ந் தேதி பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு கோவில் வளாகத்தில் சக்தி அழைப்பு, கம்பம் நடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 9-ந் தேதி காலை 6 மணிக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 15-ந் தேதி மறுகாப்பு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் வடிசோறு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    நேற்று அதிகாலை அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் இரவு மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. நாமக்கல் சந்தை பேட்டை புதூர், ஆர்.பி.புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தூக்குத்தேரில் வைத்து மாரியம்மனை வீதி, வீதியாக தூக்கி சென்றனர்.

    பொதுமக்கள் ஆங்காங்கே கூடிநின்று மாரியம்மனை வழிபட்டனர். நகரம் முழுவதும் வாழை மரம், தோரணங்கள் கட்டப்பட்டு வாண வேடிக்கை, மேள தாளங்கள் முழங்க விழாக்கோலம் பூண்டு இருந்தது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மா விளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், 26-ந் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து தினசரி வருகிற ஜூலை மாதம் வரை காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நகரின் பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மிக்கேல் அதிதூதர், புனித வனத்து அந்தோணியார், அன்னை மரியாள், ஆரோக்கிய மாதா ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர்.
    திருவாடானை தாலுகா நகரிகாத்தான் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு பங்குத்தந்தை சூசை மைக்கேல் தலைமையில் அருட்தந்தையர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆலய திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.இதில் தினமும் நவநாள் திருப்பலி, சிறப்பு மறையுரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை பங்குத்தந்தை சூசை மைக்கேல் தலைமையில் அருட்தந்தையர்கள் அந்தோணி பாக்கியம், சவரிமுத்து, நிர்மல், பவுல்ராஜ் கஷ்மீர் ஆகியோர் நிறைவேற்றினர்.அதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மிக்கேல் அதிதூதர், புனித வனத்து அந்தோணியார், அன்னை மரியாள், ஆரோக்கிய மாதா ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர்.

    நேற்று காலை திருவிழா நிறைவு திருப்பலி, புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கொடி இறக்கமும் நடைபெற்றது.இதனையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    புனித அந்தோணியார், ஆரோக்கியமாதா, செபஸ்தியார் உருவம் தாங்கிய பெரியதேர் பவனி நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது. முன்னதாக கூட்டுப்பாடல் திருப்பலியும், நவநாள் திருப்பலியும் நடைபெற்றது.

    அதன் பின் புனித அந்தோணியார், ஆரோக்கியமாதா, செபஸ்தியார் உருவம் தாங்கிய பெரியதேர் பவனி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2 சப்பரங்கள் வந்தன. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று மாலை 5 மணியளவில் மீண்டும் தேர், சப்பர பவனி நடைபெற்றது. அதன் பின் இரவு 7 மணி அளவில் அருட்தந்தை அடைக்கலராஜ் தலைமையில் ஆலயத்தில் நவநாள் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.தொடர்ந்து இரவு 8 மணியளவில் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
    புதிய சகாய அன்னையின் உருவம் பொறித்த கொடியை பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி அதிபர் ஹென்றி ஜெரோம் ஏற்றினார்.
    கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் சகாய அன்னை ஆலயத்தின் 20-வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரம் அர்ச்சிக்கப்பட்டது. பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு புதிய கொடிமரத்தை அர்ச்சித்தார்.

    வட்டார அதிபர் அலோசியஸ் துரைராஜ் கல்வெட்டை திறந்து வைத்தார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியோடு தேர்பவனி நடந்தது. ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. புதிய சகாய அன்னையின் உருவம் பொறித்த கொடியை பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி அதிபர் ஹென்றி ஜெரோம் ஏற்றினார்.

    தொடர்ந்து திருவிழா திருப்பலி நடந்தது. விழாவில், கோவில்பட்டி வட்டார அதிபர் அலோசியஸ் துரைராஜ், அருட்தந்தைகள் அந்தோணிராஜ், ஆரோக்கியசாமி, பிராங்களின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை வேதராஜ் செய்திருந்தார்.
    இன்றும் நம்முடைய அனுதின ஜெபத்தின் வழியாக இறைவனிடம் பலவற்றை கேட்டு பெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.
    ‘கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்’ (லூக்கா 11:9) என்ற வசனமானது, இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கும் உறுதியான மற்றும் உண்மையான வாக்குத் தத்தங்களில் ஒன்றாகும். இந்த வசனத்திற்கு உதாரணமாக லூக்கா எழுதிய நற்செய்தியில் ‘கேட்ட’தால் ஒருவர் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதம் பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது.

    ஒருநாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திரளான மக்கள் இறைவார்த்தையை கேட்பதற்காக அவரிடம் வந்தனர். அந்த நேரத்தில் கரையோரமாக இரண்டு படகுகள் நின்று கொண்டிருந்தது. மீனவர்கள் சிலர் அந்த படகுகளில் இருந்து இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.

    அதைக் கண்ட இயேசு அருகிருந்த ஒரு படகில் ஏறி, அதைச் சற்றே தள்ளும்படி கூறினார். படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்கு இறைவார்த்தையை போதித்தார். அவர் அமர்ந்திருந்த அந்தப் படகு, சீமோன் என்பவருக்கு சொந்தமானது.

    இயேசு இறைவார்த்தையை போதித்த பின்னர், சீமோனை நோக்கி, ‘‘ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார்.

    உண்மையில் சீமோனும், அவரோடு இருந்தவர்களும் இரவு முழுவதும் மீன் பிடிக்க வலைகளை வீசியும், மீன்கள் ஒன்றும் வலையில் சிக்காமல் வெறுமையாய் திரும்பியிருந்தனர். இயேசு ‘உங்கள் வலைகளைப் போடுங்கள்’ என்று சொன்னதும், சீமோன் “ஐயா.. இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.

    அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்கு சைகை காட்டி துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன. (லூக்கா 5:1-7)

    சீமோனுக்கு கடலும் புதிதல்ல, வலைவீசி மீன் பிடிப்பதும் புதிய விஷயமல்ல. ஆனாலும் அனுபவம் இல்லாத ஒருவர் (இயேசு), ‘மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்’ என்று சொன்ன உடன், அவரின் வார்த்தையை கேட்டு சீமோன் ‘உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’ என்று சொல்லி வலைகளை வீசினார். அந்நேரத்தில் சீமோன் தன்னுடைய பல வருட மீன்பிடிக்கும் அனுபவத்தை பற்றியோ, திறமையை பற்றியோ சிந்திக்கவில்லை. அவர் செய்தது ஒன்றே ஒன்று தான்.

    இயேசு சொன்னார்.. அதை அப்படியே சீமோன் கேட்டார். அந்த வார்த்தைகளின் படியே சீமோன் செயல்பட்டாா்.

    ஆம், இயேசு சொன்ன வார்த்தைகளை கேட்டு, சீமோன் வலையை வீசினபடியால், இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் கிடைக்காத மீன்கள், சில நொடி பொழுதில் அவருடைய வலையில் வந்து சிக்கின. ஒரு படகில் இருந்த வலையின் மூலம் அவர் இரு படகுகள் நிறைய, அதுவும் அந்த படகுகள் மூழ்கும் நிலைக்கு வரத்தக்க வகையில் மீன்கள் கிடைக்கப் பெற்றார்.

    இரவு முழுவதும் பாடுபட்டு வெறும் வலையோடு திரும்பிய சீமோன், இயேசுவிடம் ‘மீன் கிடைக்க அருள் செய்யும்’ என்று கேட்கவில்லை. ஆனால் இயேசு கூறியதை கேட்டு அதன்படி செய்ததால்தான் நிறைவுக்கும் மேலான அற்புதத்தை பெற்றுக் கொண்டார். இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்ததால்தான் சீமோனின் வெறுமை, வளமையாய் மாறியது.

    இன்றும் நம்முடைய அனுதின ஜெபத்தின் வழியாக இறைவனிடம் பலவற்றை கேட்டு பெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். சீமோனை பின்பற்றி, நாமும் விவிலியத்தின் வழியாக இயேசு கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து நடந்தால், சீமோன் போலவே நாமும் வாய் திறக்காமலேயே, நம்முடைய எதிர்பார்ப்புக்கும், நிறைவுக்கும் மேலான, நிரம்பத்தக்க ஆசீர்வாதங்களை நம் வாழ்வில் பெற்றுக்கொள்ளலாம். தன்னுடைய செவிகளால் இயேசு சொன்னதை ‘கேட்ட’ சீமோன், தனது நாவினால் இயேசுவிடம் தனது தேவையை குறித்து எதுவும் ‘கேட்க’வில்லை. எனவே நீங்களும் கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர் (லூக்கா 11:10).


    சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழாவில் சவேரியார், செபஸ்தியார், அந்தோணியார் தேர் பவனி நடந்தது.
    சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில், புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி கடந்த 2 நாட்கள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து சவேரியார், செபஸ்தியார், அந்தோணியார் தேர் பவனி நடந்தது.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
    வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலய விழாவில் வருகிற 24,25 ஆகிய தேதிகளில் இரவு வண்ண வாண வேடிக்கைகளுடன் மின்அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
    பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று மாலை திருக்கொடி பவனியுடன் தொடங்கியது. தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடியேற்றமும், பின்னர் கூட்டுப்பாடல் திருப்பலியும் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழாவில் வருகிற 24,25 ஆகிய தேதிகளில் இரவு வண்ண வாண வேடிக்கைகளுடன் மின்அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை ஜோசப்குழந்தை, வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி கிராம நிர்வாகம் மற்றும் கிராம பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    ×