iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • காஷ்மீரில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: மூடப்பட்ட கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு
  • அமைச்சர்கள் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்: கே.பி.முனுசாமி
  • ஒரு சில தலைவர்கள் அவர்களின் விருப்பப்படி கருத்து கூறுகிறார்கள்: கே.பி.முனுசாமி
  • சசிகலா தரப்பினர் குழப்பமான நிலையில் கருத்துக்களை சொல்லி வருகிறார் : கே.பி.முனுசாமி
  • தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ஆப்கானிஸ்தான் ராணுவ மந்திரி- தளபதி ராஜினாமா

காஷ்மீரில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: மூடப்பட்ட கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு | அமைச்சர்கள் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்: கே.பி.முனுசாமி | ஒரு சில தலைவர்கள் அவர்களின் விருப்பப்படி கருத்து கூறுகிறார்கள்: கே.பி.முனுசாமி | சசிகலா தரப்பினர் குழப்பமான நிலையில் கருத்துக்களை சொல்லி வருகிறார் : கே.பி.முனுசாமி | தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ஆப்கானிஸ்தான் ராணுவ மந்திரி- தளபதி ராஜினாமா

கன்னி

இன்றைய ராசி பலன்கள்

ட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். பயணங்களில் உறவி னர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வரன்கள் வாயில்தேடி வந்து சேரும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு.

வார பலன்கள்

ஏப்ரல் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை:-

ராசிநாதன் புதன் எட்டில் மறைந்து பலவீனமானாலும் இரண்டு சுப கிரகங்களான குருவும், சுக்கிரனும் ராசியோடு சம்பந்தப்படுவதால், ஆரம்பத்தில் நிதானமான பலன்கள் நடக்கும் வாரமாக இது இருந்தாலும் வாரத்தின் பிற்பகுதியில் தடைகள் நீங்கி நீங்கள் சுறுசுறுப்பாக சாதிக்கும் வாரமாக இது இருக்கும். வாரம் முழுவதும் சந்திரன் நல்ல நிலைமையில் இருப்பதால் வீடு, வாகனம் போன்ற வி‌ஷயங்களில் நன்மைகள் உண்டு. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அது வாங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகளும் மனதில் அது சம்பந்தப்பட்ட எண்ணங்களும் இருக்கும்.

ஆறாமிடத்தில் கேதுபகவான் சுபத்துவமாக இருப்பதால் சிலர் ஆன்மீக வி‌ஷயத்தில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பக்தி இயக்கங்களில் ஈடுபாடு வரும் சிலர் புதிதாக சில கோவில்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து போவதற்கு ஆர்வம் கொள்வீர்கள். சிவபக்தி மேன்மை தரும். முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் அமைந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும்.

சுக்கிரன் உச்சமாக இருப்பதால் உங்கள் அந்தஸ்து, கவுரவம் உயரும். எட்டு, பனிரெண்டாமிடங்கள் வலுப் பெறுவதால் செலவு வி‌ஷயத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டிய வாரம் இது. பண வரவுகள் கண்டிப்பாக தடைபடாது என்றாலும் தேவையற்ற வி‌ஷயங்களில் விரையங்கள் இருக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள்.

'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி          செல்:8870998888

தமிழ் மாத ஜோதிடம்

சித்திரை மாத பலன்கள் (14.4.2017 முதல் 14.5.2017 வரை)

பொறுமையைக் கடைப்பிடித்தால் பெருமை வந்து சேரும் என்று சொல்லும் கன்னி ராசி அன்பர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன், மாதத் தொடக்கத்திலேயே பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான், புதன் வீட்டில் வக்ரம் பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் குரு வீட்டில் புதன் வக்ரம் பெற்றிருக்கிறார். புதனோடு தனாதிபதியாகவும், பிதுர்ரார்ஜித ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் உச்சம் பெற்றுக் கூடியிருக்கிறார். இந்தப் புத- சுக்ர யோகம் ஒரு பொன்னான யோகமாகும். கசந்த காலங்கள் மாறி, வசந்த காலங்கள் வரப் போகிறது.

பார்க்கும் குருவால் பணவரவு திருப்தியாகும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவர். தொழில் முன்னேற்றத்திலேயே குறியாக இருப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். பொருளாதாரத்தில் தன்னிறைவு கிடைக்கும். கல்யாணக் கனவு கைகூடும்.

குருவின் பார்வை 5,7,9 ஆகிய இடங்களில் பதிகிறது. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். பட்டப்படிப்பை முடித்த உங்கள் பிள்ளைகள், மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல ஆசைப்பட்டால், அந்த முயற்சி வெற்றி பெறும். தாய்வழி ஆதரவு பெருகும்.

பன்னிரண்டில் சஞ்சரிக்கும் ராகுவால், பயணங்கள் உறுதியாகலாம். வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரலாம். கண்ணியம் மிக்க மனிதர் ஒருவர் உங்கள் கடமை செவ்வனே நடக்க உறுதுணையாக இருப்பார். சொத்துகளால் லாபமும், சொந்தங்களால் மேன்மையும் வந்து சேரும். 6-ல் கேது இருப்பதால் எதிரிகளின் பலம் குறையும். புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் மும்முரம் காட்டுவீர்கள். ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருப்பதால், அவருக்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொள்வது நல்லது. புதனுக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவதன் மூலம் புதிய திருப்பங்கள் காணலாம்.

சுக்ரனின் வக்ர நிவர்த்தி காலம்

உங்கள் ராசிக்கு 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும். ஆனால் 19-ந் தேதி (புதன்கிழமை) சுக்ரன் வக்ர நிவர்த்தியாகிறார். இது மிக, மிக யோகம் தரும் நேரமாகும். சுக்ரன் வக்ர நிவர்த்தியானவுடன் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். தக்க விதத்தில் தன லாபமும் வந்து சேரும். பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தில் உள்ளவர் களின் குறைகளைத் தீர்த்து வைப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

புதனின் வக்ர நிவர்த்தி காலம்

உங்கள் ராசிக்கு அதிபதியான புதன், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்குகிறார். அவர் மாதத் தொடக்கத்தில் வக்ரம் பெற்றும், நீச்சம் பெற்றும் இருக்கிறார். 24-ந் தேதி (திங்கட்கிழமை) வக்ர நிவர்த்தியாகி வளர்ச்சியைக் கூடுதலாகக் கொடுக்கப் போகிறார். தொழிலில் நிறைந்த தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் மாற்றங்கள் வந்து சேரும். உறவினர் பகை அகலும். ஊர்மாற்றம், இடமாற்றம் உறுதியாகலாம். பழைய பணியாளர்கள் விலகினாலும், புதிய பணியாளர்களை சேர்த்துக் கொள்வீர்கள். ஆரோக்கிய தொல்லை அகலும்.

மேஷ புதனின் சஞ்சாரம்

மே 8-ந் தேதி மேஷ ராசிக்குப் புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். மங்கள ஓசையும், மழலை ஓசையும் இல்லத்தில் கேட்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் தென்முகக் கடவுளை வழிபடுவது நல்லது. அமாவாசையில் முன்னோர் வழிபாட்டையும், பவுர்ணமியில் முருகப்பெருமானையும் வழிபடுங்கள்.

பெண்களுக்கு...

எதிர்பார்ப்புகள் நிறைவேறி இனிமை சேர்க்கும் மாதம் இது. புதிய பாதை புலப்படும். புகழ் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தகராறுகள் தானாக விலகும். பெற்றோரின் ஒத்துழைப்பு தக்க சமயத்தில் கிடைக்கும். உடன் பிறந்தவர்களாலும் கூடுதல் நன்மை உண்டு. கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் திருமணப் பேச்சு நல்ல முடிவிற்கு வரும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவர். சலுகைகள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். திருப்பணிகளுக்கு பொருள் கொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் துளசி வைத்து வழிபடுவது நல்லது. சித்ரா பவுர்ணமியன்று மலைவலம் வருவதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.

ஆண்டு பலன் - 2017

கன்னி ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டான 2017-ம் வருடம் சென்ற வருடத்தை விட மிகவும் நல்ல பலன்கள் கொடுக்கின்ற வருடமாக இருக்கும்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வருட ஆரம்பத்தை விட ஆண்டின் பிற்பகுதியில் கிரக அமைப்புகள் நல்லமுறையில் அமைந்திருப்பதால் உங்களுடைய தொழில்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்ற வருடமாக இது அமையும்.

ஆகஸ்ட் மாதம் 18 ம்தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகு பகவான் மிகவும் நல்லபலன்களை தரக்கூடிய பதினொன்றாமிடத்திற்கு மாறுவது கன்னி ராசிக்கு ஒரு மிகச்சிறந்த அமைப்பு. குறிப்பாக இம்முறை ராகு தனக்கு மிகவும் பிடித்த வீடான கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

கடகத்தில் ராகு மூன்று, பதினொன்றாமிடங்களாக அமரும் நிலையில் மிகப்பெரிய லாபங்களை தருவார் என்பது ஜோதிட விதி. அதன்படி பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை வருகின்ற வாய்ப்பான ஒரு நல்ல கோட்சார நிலை உங்களுக்கு இன்னும் சில மாதங்களில் வர இருகிறது.

இந்த ஆண்டின் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் அபரிமிதமான தொழில் முன்னேற்றங்களையும், பொருளாதார லாபங்களையும், பணவரவுகளையும் கன்னிராசிக்காரர்கள் எதிர்கொண்டு சந்தோஷப்படுவீர்கள்.

உங்களில் சிலருக்கு இந்தவருடம் மேற்கு நாடுகளுக்கு வேலை, தொழில் விஷயமாக பயணப்படுதலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வேலை அமைதலும் இருக்கும். இன்னும் சிலருக்கு முஸ்லிம், கிறித்துவ நண்பர்கள், அமைப்புகள், பங்குதாரர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பிறப்பால் முஸ்லிம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதத்தினர் மூலம் நல்லவைகள் நடக்கும்.

ராகுபகவான் பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோகநிலையில் அமரும்போது மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைத் தந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவார். அதன்படி இம்முறை அவர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் கன்னி ராசிக்கு வர இருப்பதால் சாதுர்யமான வழிகளில் உங்களை ஈடுபடுத்தி தனலாபத்தைத் தருவார்.

ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம குருவாக நிலை கொண்டு தொழிலிடங்களில் உங்களுக்குத் தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் குருபகவானும் செப்டம்பர் மாதம் 12 ம் தேதி நடக்க இருக்கும் பெயர்ச்சியின் மூலம் பொருள்வரவையும், தனலாபத்தையும் தரும் இரண்டாமிடத்திற்கு மாற இருகிறார்.

இந்தக் குருப்பெயர்ச்சியால் கன்னிராசிக்காரர்களுக்கு பொருளாதார மேன்மை கிடைக்கும். இதுவரை திருமணம் நடைபெறாத இளைய பருவத்தினருக்கு குடும்பம் மற்றும் நல்ல வேலை அமைந்து வாழ்க்கையில் செட்டிலாவீர்கள். உங்களுக்கு நல்ல யோகம் தரும் குருப்பெயர்ச்சி இது.

வருடத்தின் இறுதியான அக்டோபர் 26 ம் தேதி நடக்க இருக்கின்ற குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலனைக் கொடுக்காது என்றாலும் குருவின் வீட்டில் சுபத்துவமாக அமரும் சனிபகவான் கண்டிப்பாக கெடுதல்களைத் தர மாட்டார். மேலும் உங்களின் ராசிக்கு சனி யோகாதிபதி என்பதால் எப்போதுமே கன்னியின் மேல் சனிக்கு ஒரு மென்மையான போக்கு சனிக்கு உண்டு.

ஆகவே இந்த வருடம் நடக்க இருக்கின்ற மிக முக்கியமான கிரகப்பெயர்ச்சிகளில் மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகள் கன்னி ராசிக்கு யோகம் தரும் அமைப்பில் இருப்பதால் பிறக்க இருக்கும் புத்தாண்டு உங்களுக்கு நன்மைகளையும், மேன்மைகளையும் மட்டுமே தரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

கிரகங்கள் சாதகமான அமைப்பில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் சிலர் இந்த வருடம் திடீர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் இந்த வருடம் உங்களால் சாதிக்க முடியும்.
நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு இந்த வருடம் மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.

இதுவரை பணவரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப்பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும்.

குடும்பம் உண்டாகாத இளையபருவத்தினருக்கு உடனடியாக வாழ்க்கைத் துணை அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை முரணாகிப் போனவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடந்து அந்த அமைப்பின் மூலம் நிம்மதியும், சந்தோஷமும் நீடித்து இருக்கும்.

நீண்ட நாட்களாக குழந்தைச்செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். இதுவரை குடும்பத்திற்கு வாங்க முடியாத அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு ஹவுசிங் லோன் போன்றவைகளின் மூலம் வீடுவாங்கும் அமைப்பு ஏற்பட இருக்கிறது. வங்கிக்கடன் ஏற்படும். ஏற்கனவே இருக்கின்ற வாகனத்தையோ, சொத்தையோ விற்றுவிட்டு மேற்கொண்டு கடன் வாங்கி அதை விட நல்ல வாகனமோ, சொத்தோ வாங்குவீர்கள்.

நடுத்தரவயது தாண்டிய கன்னி ராசிக்காரர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கபடும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

வருடத்தின் பிற்பகுதி மாதங்களில் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். குறிப்பிட்ட சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற அதிர்ஷ்ட விளைவுகளில் குறிப்பிட்டதக்க அளவிற்கு பணலாபம் கிடைக்கும். அதேநேரத்தில் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்தாது. ஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத கன்னி ராசிக்காரர்களுக்கு பங்கு சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால் இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வெளிநாட்டுக்கு போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

வருடம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

பெரும்பாலான ராஜகிரகங்கள் என்று சொல்லப்படும் முக்கியமான கிரகங்கள் அனைத்தும் தற்போது கன்னி ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

விவசாயிகளுக்கு இந்த வருடம் நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

ஹே விளம்பி வருட பலன்

கன்னிராசிகரர்களுக்கு கடந்து போன தமிழ்ப் புத்தாண்டை விட மேம்பட்ட ஒரு வருடமாக பிறக்க இருக்கும் புது வருடம் இருக்கும்.

குறிப்பாக இன்னும் நான்கு மாதங்களில் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் அபரிமிதமான நன்மைகளை கன்னி ராசிக்காரர்கள் பெறுவீர்கள் என்பதால் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு கன்னி ராசிக்கு சந்தோஷங்களை மட்டுமே தர இருக்கும் ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ராகுபகவான் நல்ல நன்மைகளைத் தரும் இடமாக 3, 6, 11-ம் இடங்கள் நம்முடைய கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் மிக முக்கிய பலனாக மேற்கண்ட பாவங்கள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் (ஆமேடம் எருது, சுறா, நண்டு, கன்னி) ஒன்றாக இருந்தால் இருந்தால் ராகுபகவான் இன்னும் அதிக சுபத்துவம் பெற்று கூடுதலான நன்மைகளைச் செய்வார் என்பது ஜோதிட விதி.

அந்த அமைப்பின் கீழ் இம்முறை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீடான கடகத்தில் அமர்வதால் இம்முறை கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில் விஷயங்களில் நற்பலன்களோடு மிகுந்த லாபங்களும் இருக்கும்.

இந்த அமைப்பின் மூலம் ராகுவின் சிறப்புக்களான வெளிமாநிலம், வெளிநாடு, இயங்கிக் கொண்டே இருக்கும் பொருட்கள், அந்நியமொழி, இன, மதம் போன்ற விஷயங்களில் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். இதுவரை உங்களுடைய தொழில் அமைப்புகளில் இருந்து வந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது.

ஒரு வியாபாரத்தையோ, தொழிலையோ ஆரம்பித்து காலுன்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள் இந்த புது வருடத்தில் தொழிலில் நிலைத்தன்மை பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் இருந்து வரும் தடைகளும், தாமதங்களும், மனக் குழப்பங்களும் இனிமேல் விலகும். சொந்த வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள், கருத்து வேறுபாடுகளால் வாழ்க்கைத்துணையைப் பிரிந்தவர்கள், ஏற்கனவே நடந்து முடிந்த திருமண உறவில் சிக்கல்களை சந்தித்து நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறிக்கொண்டிருப்பவர்கள் சாதகமான திருப்பங்களை இனிமேல் உணர்வீர்கள்.

ராகு கேதுப் பெயர்ச்சியை அடுத்து செப்டெம்பர் மாதம் 12 ம் தேதி நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும் மிகவும் நன்மைகளையும், பணவரவையும் தரக்கூடிய இரண்டாமிடத்தில் நடைபெறுவதால் பருத்தி புடவையாய்க் காய்த்தது போன்ற ஒரு அதிர்ஷ்ட நிலை கன்னிக்கு உருவாகிறது.

குருவை அடுத்து அக்டோபர் மாதம் 26 ம் நாள் நடைபெற இருக்கும் சனிப்பெயர்ச்சி நான்காமிடத்தில் அமைந்தாலும் சனிபகவான் உங்களுக்கு யோகாதிபதி என்பதால் கெடுதல்களைச் செய்ய மாட்டார்.

இதுவரை மனதில் இருந்துவந்த எதிர்மறைஎண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி இருக்காது.

உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும்.

பணவரவு மிகவும் நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்லநேரம். எந்தக்காரியமும் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும்.

வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான சூழல்கள் இருக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு அல்லது இரண்டும் இந்த வருடம் கண்டிப்பாக உண்டு. இந்த வருடம் உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் நல்ல நிலையில் இருக்கும்.

வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் இளைய வயதுக்காரர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.

இதுவரை தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மளமளவென தொழில் முன்னேற்றம் பெறுவதை கண்ணெதிரே காண்பீர்கள். அலுவலகங்களில் இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அவை அனைத்தும் மாறி உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வருடம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும்.

கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் வெகுவிரைவில் குணம் அடைவார்கள். மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் போக்குக்காட்டிக் கொண்டிருந்த வியாதிகள் இனிமேல் நல்ல பிள்ளையாக உங்களை விட்டு விலகும். கடந்த காலங்களில் மகன், மகள் விஷயத்தில் உங்களுக்கு கவலைகள் இருந்து வந்தன. சிலர் பிள்ளைகளுக்கு எத்தனையோ வரன் பார்த்தும் திருமணம் முடிக்க முடியாமல் இருந்தீர்கள். அவை அனைத்தும் இப்போது நீங்கி பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை இந்த வருடம் சிறப்பாகச் செய்வீர்கள்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் தாத்தா, பாட்டியாக பதவிஉயர்வு பெறுவீர்கள். இதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு ஒழுங்காக செல்லாமல் கெட்டபெயர் எடுத்து உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கிய பிள்ளை இப்போது ஒழுங்காக சென்று உங்களை சந்தோஷப்படுத்துவார்.

சரக்கு வாகனங்கள், பெட்ரோல்பங்க், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.
 
கடந்த வருடங்களில் வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக இதுவரை இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள், பங்காளித் தகராறு போன்றவைகள் இந்த வருடம் சுமுகமாக உங்களுக்கு லாபகரமாக முடிவுக்கு வரும்.

நேர்த்திக்கடன்களை செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக நல்லபடியாக நிறைவேற்றலாம். குலதெய்வவழிபாடு சரிவரச் செய்யாதவர்கள் உடனே அதைச் செய்யும்படி இருக்கும். வருட ஆரம்பத்தில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்து சுபவிரயங்கள் இருக்கும். திருமணம், கிரகப்பிரவேசம், பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற மங்கள நிகழ்ச்சிகளை வருட முற்பகுதியில் செய்வீர்கள்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் போன்றவைகளில் பிரச்னை எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு இந்த வருடம் லாபம் வரும். அரசு, தனியார்துறை பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இந்த வருடம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைப்பதால் இந்த வருடம் நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெற்று உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு வருடமாக இது அமையும்.

சில நிலைகளில் பணத்திற்காக பொய்பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள்.

பெண்களுக்கு இனிமேல் யோக காலம்தான். இதுவரை வெளியே சொல்ல முடியாமல் நீங்கள் பட்ட துயரங்கள் மிக அதிகம். கடவுள் உங்களை ஒருபோதும் கை விடமாட்டார். வீட்டிலும் அலுவலத்திலும் இனிமேல் உங்களுக்கு எந்தப் பிரச்னைகளும் இருக்காது.

பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள்.

மொத்தத்தில் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு கன்னிக்கு கவலைகளைப் போக்கும் ஒரு ஆண்டாக இருக்கும்.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி ராசிக்கு இது வரை ஏழரைச் சனியாக செயல்பட்டு இளைய பருவத்தினரை வாழ்க்கையில் செட்டிலாக விடாமலும் நடுத்தர வயதுக்காரர்களுக்கு பொருளாதாரச் சிக்கல்களை உண்டு பண்ணியும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கி வந்த சனிபகவான் இப்போது மூன்றாமிடத்திற்கு பெயர்ச்சியாகி கெடுதல்கள் தரும் நிலை மாறுகிறார். சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன். கன்னிராசிக்கு இப்போது வளர்பிறை ஆரம்பம்.

இந்த மூன்று வருடங்களும் மற்ற ராஜகிரகங்களும் சாதகமான அமைப்பில் இருப்பதால் வரும் காலங்கள் பொற்காலமாக கன்னிராசிக்கு அமைந்து மிகவும் நல்ல சிறப்புகளையும், மதிப்பு மரியாதைகளையும் பெறப்போகிறீர்கள் என்பது உறுதி. ஏழரைச்சனி விலகுவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும்.

இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது. இந்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது.

அடுத்தவர்களால் கௌரமாக நடத்தப்படுவீர்கள். உங்களில் சிலர் உங்கள் மொத்த வாழ்க்கைக்கும் தேவையானதை இந்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சம்பாதித்து வாழ்கையில் செட்டிலாகப் போகிறீர்கள் என்று கிரக நிலைமைகள் காட்டுகின்றன. கோட்சார நிலைமையில் ராஜகிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமான நிலையில் வலுவாக உள்ளதால் நீங்கள் தொட்டது அனைத்தும் துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது.

மேலும், பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசாபுக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி. எந்த ஒரு காரியத்தையும் சாதித்தே ஆகவேண்டும் என்றும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடனும் இப்போது நிறைவேற்றிக் காட்டுவீர்கள். அதேபோல உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப்போடுதல் இருக்காது.

இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் விஷயங்கள் அனைத்திலும் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும். தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழிலதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள்.

இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத்தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கன்னிராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். சுயதொழில் செய்வர்கள் மிக சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது.

புதிய தொழில் ஆரம்பிக்கவோ கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறி தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றி கொடி நாட்டலாம். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வரும்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக் கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான காலகட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்டவர்கள், கறுப்புநிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ஆலைத்தொழிலாளர்கள், கிராமங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கும் மிகவும் நல்ல வருமானங்களும், மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகளும் இனிமேல் இருக்கும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும்.

சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு உடன டியாக நல்ல முறையில் குழந்தை பிறக்கும். இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். கடந்த ஏழரைச்சனியில் திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட்டு விவாகரத்தானவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். இந்த வாழ்க்கை நீடித்தும் நிம்மதியாகவும் இருக்கும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி கொண்டி ருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும்.

சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம். இதுவரை உடல்நிலை சரி இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தள்ளிப் போயிருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கூடி வரும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்சனை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும். உங்களைப் பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள்.

நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். அதிக முனைப்பு இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் பெரிய லாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் `லம்ப்'பாக கிடைக்கும். பங்குச் சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டு மனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்வீர்கள். கன்னிராசிப் பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் பெயர்ச்சியாகும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும். தொலைக்காட்சி சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல்துறையினர், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த சனிப்பெயர்ச்சி மேன்மைகளைத் தரும்.

 

குருப்பெயர்ச்சி பலன்கள்

(உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை, 1, 2ம் பாதங்கள் மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

கன்னிராசிக்கு தற்போது விரையங்களை தரும் இடத்தில் இருக்கும் பனிரெண்டாமிட குருபகவான் அதிலிருந்து மாறி ஜென்மகுருவாக ராசியில் அமர்கிறார். பொதுவாக ஜென்மகுரு பெரிய நற்பலன்களைத் தருவதில்லை என்றாலும் ஏற்கனவே ராகுவுடன் இணைந்து வலிமை இழந்திருந்த நிலை இப்போது குருவிற்கு நீங்கப் பெறுவதால் கன்னிக்கு சுபத்துவ அமைப்புகளைத் தருவார் என்பது உறுதி.
இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்து விரயங்களையும் செலவுகளையும் கொடுத்து வந்த குருபகவான் இந்த முறை உங்களுக்கு தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளை அளிப்பார். சென்ற வருடத்தை விட இந்த வருடம் உங்களுக்கு வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும்.

மேலும் எந்த ஒரு அமைப்பிலோ, அல்லது நிர்வாகத்திலோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஜன்மகுரு நன்மைகளைச் செய்வது இல்லை. அதாவது பெரிய தலைவர்கள், ஒரு பெரும் நிறுவனத்தை வழி நடத்துபவர்கள் போன்றவர்களுக்குத்தான் சில அனுபவங்களை ஜன்மகுரு தரும். மற்றவர்களுக்கு தீயபலன்கள் இருக்காது.

ராசியில் ஜன்மகுரு இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் எந்த நேரமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் குருப்பெயர்ச்சியால் இருக்கும்.

ஜன்மகுரு என்பதால் அடிக்கடி ஞாபகமறதி வரும். எனவே கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருந்தாலும் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.

அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வருடம் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும்.

பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். சிலருக்கு வீடுமாற்றம் தொழில்மாற்றம் வேலை மாற்றம் போன்றவைகள் இப்போது நடக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்.

தற்போது ராகுவிடமிருந்து விலகி வலிமையடைந்துள்ள குருபகவான் தனது மதிப்பு மிக்க பார்வையால் உங்களுடைய ஐந்து ஏழு ஒன்பதாம் இடங்களை பார்வையிட்டு அந்த இடங்களை புனிதப்படுத்துவார் என்பதால் அந்த பாவங்களின் மூலமாக உங்களுக்கு நல்ல பலன்களையும் குரு பகவான் தருவார் என்பதால் இந்த குருப்பெயர்ச்சியில் கவலைகளுக்கு இடமில்லை.

குருவின் ஏழாமிட பார்வையால் இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்சனைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை குரு பகவானால் இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியில் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்துவதற்கு குரு பகவான் அருள் புரிவார். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும். குருபகவானின் அருளினால் எதையும் சமாளிப்பீர்கள்.

ஒன்பதாம் வீட்டை குரு பார்ப்பதால் கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திரு இடம் போன்ற புனிதத் தலங்களுக்கு போக முடியும்.

குழந்தைகளால் பெருமைப் படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.

புத்திர தோஷத்தினால் நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் கூடி வந்து விட்டது. குருபகவான் புத்திர காரகன் என்பதால் அவர் ஐந்தாமிடத்தைப் பார்க்கும் இந்த நேரத்தில் எப்பேர்பட்ட தோஷம் இருந்தாலும் அதை நீக்கி குழந்தை பாக்கியம் அருளுவார்.

போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பணிபுரிபவர்களுக்கு நெடுநாட்களாக தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும் சம்பள உயர்வும் இப்பொழுது கிடைக்கும்.

இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தர்மகாரியங்கள் மற்றும் அறப்பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் உங்களை ஆலயத் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும்.

பரிகாரங்கள்:

சென்னையில் இருப்பவர்கள் ஸ்ரீலஸ்ரீ பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி, மற்றும் பட்டினத்தார் சுவாமிகளின் ஜீவசமாதி, சைதாப்பேட்டை ரயில்நிலையம் எதிரில் உள்ள மகான் ஸ்ரீ குருலிங்கசுவாமிகளின் ஜீவசமாதி போன்ற இடங்களுக்கு சென்று குருவருள் பெறலாம். வெளிமாவட்டத்தவர்கள் தங்களின் அருகாமையில் உள்ள சித்தர்கள் ஞானிகள் அடங்கிய திருவிடங்களுக்கு சென்று அங்கே தியானம் அல்லது பக்தர்களுக்கு பணிவிடை செய்வது போன்ற தொண்டுகள் மூலம் ஜன்மகுருவை மகிழ்வித்து நன்மை பெறலாம்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

அனுபவ அறிவால் பிறரை கவரும் கன்னி ராசி நேயர்களே!

நவக்கிரகங்களில் ‘கல்விக்கிரகம்’ என்று போற்றப்படும் புதன் உங்கள் ராசிநாதனாக விளங்குகிறார். எனவே கல்வியில் தேர்ச்சி பெற்றவர் களாக விளங்குவீர்கள். புதன் வலிமை இழந்திருப்பவர்கள் கல்வியறிவைக் காட்டிலும் அனுபவ அறிவு மிக்கவர்களாக விளங்குவர்.

‘சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்’ என்ற வைர வரிகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர் நீங்கள். எந்தக் காரியத்தையும் கடைசிவரை இருந்து முடித்துக் கொடுக்கும் கடமை உணர்வைப் பெற்றிருப்பீர்கள். எப்படியும் வாழலாம் என்று வாழ்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.

பழைய சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்ட உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

கொடுக்கல்–வாங்கல்களை ஒழுங்கு செய்யும் கோதண்ட ராகு!
ஆற்றலைப் பளிச்சிட வைக்கும் ஆறாமிட கேது!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும், தனது வான்வெளிப் பயணத்தில் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிசெய்யப் போகிறார்கள்.

பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, பயணங்களால் பலன் கிடைக்கச் செய்யும். தூர தேசத்தில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வந்து சேரலாம். சுய ஜாதகத்தை ஆராய்ந்து அந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் வரும் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ளுங்கள்.

காது குத்து முதல் கல்யாண வாய்ப்பு வரை சுபகாரியங்கள் வந்து அலைமோதும். தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ உகந்த நேரமிது. நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதில் உங்கள் திறமையைக் காட்டிப் பெருமை பெறப்போகிறீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அருகில் இருப்பவர்களால் ஏற்பட்ட ஆபத்துக்கள் அகலும். அதிகாரிகளிடம் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீடு கட்டும் முயற்சியில் அல்லது வாங்கும் முயற்சியிலும், பிள்ளைகளின் கல்வி நலன் கருதியும் விரயங்களைச் செய்யலாம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

வெற்றி உங்கள் வீடு தேடிவரும். தேக நிலை சீராகும். தெய்வ அருள் கிடைக்கும். மக்கள் செல்வாக்கு மேலோங்கி மகத்தான வாழ்வை அமைத்துக் கொள்வீர்கள். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். வி.ஐ.பி.க்கள் தினமும் வீடு தேடி வருவர்.

வாகன யோகம் முதல் வளர்ச்சி தரும் அத்தனை யோகங்களும் கிடைப்பதற்கான வாய்ப்பை இந்த ராகு வழங்குவார். குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நாடாளும் நபர்களின் நட்பால் நன்மைகள் வந்து சேரும். ‘ராகுவைப்போல கொடுப்பானுமில்லை’ என்பது பழமொழி. பொதுவாழ்வில் புகழ் சேரவும், தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரவும் வழிவகுக்கும் கேதுவையும், கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் ராகுவையும் வழிபாடு செய்து வந்தால் வளர்ச்சி மீது வளர்ச்சி ஏற்படும். நாகநாதர் தான் உங்களுக்கு யோக நாதர், சர்ப்ப கிரகங்கள் தான் சந்தோஷம் தரும் கிரகம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஆதாயம் தரும் ஆறாமிடத்து கேது!

சப்தம ஸ்தானத்தில் இதுவரை சஞ்சரித்து வந்த கேது இப்பொழுது ஆறாமிடத்தில் அடியெடுத்து வைக்கப் போகின்றது. எனவே எதிரிகள் உதிரியாவர். இதுவரை இருந்த குடும்பப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடியும். சகோதர ஒற்றுமை பலப்படும். தக்க விதத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

ஆரோக்கியம் சம்பந்தமாக இருந்த குறைபாடுகள் அகல மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. உடனடி நிவாரணம் உங்களுக்கு கிடைக்கும். பூமி சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள். புதிய மனைகட்டிக் குடியேறும் ஆசை மனதில் நீண்டநாட்களாக இருக்கலாம். அவை செயல்படும் நேரம் இப்பொழுதுதான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு எப்பொழுதும் முன்னேற்றம் காண வழிபிறக்கும். இதைக்காட்டிலும் நல்ல வேலை கிடைக்குமா? என்று காத்திருந்தவர் களுக்கு தற்போது பணிபுரியும் இடத்திலேயே உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழப்போகிறீர்கள். உயர் அதிகாரிகளும், மேலிடமும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் தான் எங்கள் கம்பெனி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எதை கேட்டாலும் தருகிறோம் என்று சொல்லி கம்பெனி முதலாளிகள் கைகோர்த்துக் கொள்வர். கேது பலத்தால் வி.ஐ.பி.க்களாகவும், வி.வி.ஐ.பி.க்களாகவும் மாறப்போகிறீர்கள். ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்ற கண்ணதாசனின் வைர வரிகள் இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் நடக்கப் போகின்றது.

அஞ்சல் வழியில் நெஞ்சம் மகிழும் தகவல்கள் வரும்

கொஞ்சிப்பேசும் குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுக்க வழி பிறக்கும். மணமாலை சூடும் வாய்ப்பும், மங்கல நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பும் கேது பலத்தால் உருவாகப் போகின்றது.

கேதுவின் பலத்தால் கடன் சுமை கூடலாம். இருப்பினும், புதிய கடன் களும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும் என்றாலும், ஒருவருக்கேனும் கடன் பாக்கி வைத்திருப்பீர்கள். எதிரிகளின் பலம் கூடும் என்பதால் இந்த நேரத்தில் நண்பர்கள் உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பார்களா? என்பது சந்தேகம் தான். பகை நட்பாக விநாயகப் பெருமான் வழிபாடு அவசியம் தேவை.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!

ராகு பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகக் கிடைக்கும். திடீர் இடமாற்றங்கள் திக்குமுக்காடச் செய்யும். ஆரோக்கியத் தொல்லைக்காகவும் ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று புனிதப்படுத்திக் கொள்வதன் மூலமே எண்ணிய காரியங்கள் எளிதில் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு மாறுதல் கிடைத்து மகிழ்ச்சிக் குறைவை உருவாக்கும். இதுபோன்ற காலங்களில் வீண் செலவுகள் ஏற்படாமலிருக்க வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது நல்லது.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): பற்றாக்குறை அகலும். தங்கம், வெள்ளி மற்றும் ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உடன்பிறப்புகளின் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். இதுவரை பாசம் காட்டாத பெற்றோர்கள் இனி பாசமும், நேசமும் காட்டுவர். தக்க சமயத்தில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. தொழிலில் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். நட்பு பகையாக மாறவும் வாய்ப்பு உண்டு. புது முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எனவே, உங்களுக்கு கிடைக்க வேண்டிய உத்தியோக உயர்வு உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு கிடைத்து விடலாம். இட மாற்றம் செய்யலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். இனம்புரியாத கவலை மேலோங்கும் இந்த நேரத்தில் வடக்கு நோக்கிய விநாயகரையும், மேற்கு நோக்கிய துர்க்கையையும் வழிபட்டு வருவது நல்லது.

பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!

கேது பகவான் குரு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலம் உண்டு. நீண்ட நாளைய பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உதவிகளும் கிடைக்கும். லாபமும் வந்து சேரும். வாழ்க்கைத் துணையின் வேலைவாய்ப்பிற்காக ஏற்பாடு செய்திருந்தால் அது கிடைக்கும். அதன் மூலம் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.

கேது பகவான் ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): உடல் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு குடும்பத்தில் வந்துகொண்டிருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். இடையூறுகள் ஏற்பட்டு பல பணிகள் பாதியிலேயே நிற்கும். செலவு கூடும். குடும்பச்சுமையும் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டு முயற்சிகளிலும் தடை ஏற்படலாம். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): வீண் பிரச்சினைகள் அலைமோதும். உடன்பிறப்புகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். அரசு வழித்தொல்லைக்கு ஒருசிலர் ஆட்பட நேரிடலாம். உறவினர்கள் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கூட்டுத் தொழிலில் பிரச்சினைகள் உருவாகி பிரிவு ஏற்படலாம். விற்ற சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதே என்று சொல்லி மீண்டும் பிரச்சினைகள் தலைதூக்கலாம். எதையும் யோசித்துச்செய்ய வேண்டிய நேரமிது. அங்காரக வழிபாட்டைச் செய்தால் அல்லல்கள் தீர்ந்து ஆனந்தம் பெருகும்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

பனிரெண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பணிகளில் தொய்வு ஏற்படாதிருக்கவும், ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் அல்லல்கள் அகலவும், வாரம் தோறும் சனிக்கிழமை அன்று சனீஸ்வர வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. மேலும் புதன்கிழமை விரதமிருந்து அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.