iFLICKS தொடர்புக்கு: 8754422764
தனுசு

இன்றைய ராசி பலன்கள்

வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்த நடந்து கொள்வர். பூர்வீக சொத்துப்பிரச்சினை அகலும்.

வார பலன்கள்

மார்ச் 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை:-

செவ்வாயின் ஆட்சிபலத்தாலும், குரு, புதன் பரிவர்த்தனையினாலும் எதிரிகளை உங்களால் ஜெயிக்க முடியும் என்பது உறுதி. வேலை, வியாபாரம் போன்றவற்றில் இருந்த சிக்கல்கள் இப்போது தீரும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும்.

அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வார ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புரு‌ஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. உங்கள் மனதைரியம் குறையும் சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது.

குருபகவானின் ஆறாமிடத்துப் பார்வையால் நீங்கள் தொழில் ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கும். தேவையில்லாத வி‌ஷயத்திற்கு கூட கடன் வாங்கும்படி குருபகவான் செய்வார் என்பதால் ஆடம்பரங்களுக்காக கடன் வாங்காதீர்கள். பெண்களால் வீண்பழி வந்து சேரும். பெண்களிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். பெண்களால் செலவுகளும், மனவேதனைகளும் இருக்கும்.

தமிழ் மாத ஜோதிடம்

மார்ச் 14-ந்தேதி முதல் ஏப்ரல் 13-ந்தேதி வரை

பங்குனிமாதம் ராசியின் கேந்திராதிபதிகள் புதனும் குருவும் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதும் இதில் நாலாமிடத்திற்குரியவரான குருபகவானே ராசிநாதன் என்பதாலும் தனுசுராசிக்கு யோக அமைப்புகள் உண்டாகிறது. இந்த மாதம் உங்களுக்கு பணவரவும் தொழில் வேலை மேன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். அதேநேரம் ஆறாமிட அதிபதி சுக்கிரன் உச்ச வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம்..

தாயார் வழியில் நன்மைகள் நடக்கும் மாதம் இது. வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் இருக்கும்.

ராசியின் எதிரியான சுக்கிரன் வலுப்பெறுவதால் இந்த மாதம் தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். செவ்வாய் வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே எனவே வருமானமும் இந்தமாதம் தாராளமாகவே இருக்கும்.

ஆண்டு பலன் - 2017

தனுசு ராசிக்கு 2017-ம் வருடம் மாற்றங்கள் உள்ள வருடமாக இருக்கும். அந்த மாற்றங்கள் உங்களின் எதிர்காலத்திற்கு நன்மைகளைச் செய்வதாக அமையும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு ஏற்றங்களைத் தருவதற்கான வாய்ப்புகள் அமையும் வருடம் இது.

வருடத்தின் பிற்பகுதியில் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியில் ராகுபகவான் எட்டாமிடத்திற்கும் கேது இரண்டாமிடத்திற்கும் மாறுகிறார். இந்தப் பெயர்ச்சியினால் உங்களின் வேலை, தொழில், வீடு, அலுவலகம் போன்றவைகளில் உங்களுக்கு மாறுதல்கள் இருக்கும்.

நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களும், எட்டாமிடமும் ஜோதிடத்தில் மாறுதல்களைக் குறிப்பவை. அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டில் வரும் சாயாக் கிரகங்களால் ஒருவருக்கு அனைத்து நிலைகளிலும் மாற்றங்கள் இருக்கும். இந்த அமைப்பால் உங்களில் சிலர் வேலை அல்லது தொழில் விஷயமாகவோ திருமண அமைப்பாலோ இருக்கும் இடத்தை விட்டு தூர இடங்களுக்குச் செல்வீர்கள்.

செப்டம்பர் மாதம் 12-ம் தேதியன்று நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிநாதன் குருபகவான் மிகவும் யோகம் தரும் பதினொன்றாம் வீட்டிற்கு மாறுவதால் பொருளாதார பிரச்சினைகளை வருடப் பிற்பகுதியில் சுலபமாக கையாள முடியும். இந்தப் பெயர்ச்சியின் மூலம் இதுவரையில் உங்கள் வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் இருந்து வந்த பின்னடைவுகள், வருமானக் குறைவு இனிமேல் இருக்காது. குருவின் மாறுதலால் அவரவரின் தகுதிநிலைக்கேற்பவும் இருக்கும் இடத்தைப் பொருத்தும் பணவரவு உண்டு.

எனவே வருடத்தின் பிற்பகுதியில் தாராள வருமானம் இருக்கும் என்பதால் புத்தாண்டின் ஆரம்பத்திலேயே இதுவரை உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கி வரும் பிரச்சினைகள் படிப்படியாகவும் நல்லபடியாகவும் முடிவுக்கு வரும். முக்கியமான ஒரு கருத்தாக தனுசுக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது.

சனிபகவான் இப்போது விரயச்சனியாக, பனிரெண்டாமிடத்தில், கேட்டை நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால் உங்களுக்கு முந்தைய ராசியான விருச்சிகத்தினர் சனியின் பாதிப்புகளை அதிகமாக அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இன்னும் ஏழரைச்சனியின் பாதிப்புகளை உணராமல் இருக்கிறீர்கள்.
அக்டோபர் 26-ந்தேதி நடக்க இருக்கும் பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் தனுசுவிற்கு ஜென்மச்சனியாக மாறுகிறார். அதுமுதல் உங்களுக்கு தொழில் குழப்பங்களையும், வேலைப் பிரச்சினைகளையும் தருவார் என்பதால் வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் இளைய பருவத்தினர் கவனமாக இருக்க வேண்டிய வருடம் இது. அதேநேரம் நடுத்தர வயதுக்காரர்களுக்கு பாதிப்புகள் இருக்காது.

சனியின் வேலையே ஆசை காட்டி மோசம் செய்வதுதான் என்பதால் யாராவது ஒருவரை அறிமுகப்படுத்தியோ அல்லது ஒரு தொழில் துவங்க ஆர்வம் கொடுத்தோ, அல்லது ஒரு லட்சம் போட்டால் பத்து லட்சம் எடுத்து விடலாம் என்று தவறான ஆலோசனை சொல்லியோ, உங்களை ஏதாவது தொழில் விஷயத்தில் இழுத்து விட்டு தலைவலிகளை ஏற்படுத்துவார்.

இந்த வருடம் செய்யப்போகும் ஒரு காரியத்தால் தனுசு ராசியினர் புலிவாலை பிடித்த நிலைமை உண்டாகி, அதை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலுக்கு உள்ளாவீர்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்தை செயல்படுத்தும் முன்பும், தொழில் தொடங்கும் முன்பும், வேலை மாறும் முன்பும், ஒன்றுக்கு நூறுமுறை நீங்கள் யோசிக்க வேண்டிய வருடம் இது.

அதேநேரத்தில் இந்தக் காலகட்டத்தில் எதிலும் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். முதலீடு செய்து தொழில் செய்ய வேண்டாம். தொழில் விரிவாக்கங்களும் கூடாது. அடுத்தவர்களையோ, வேலைக்காரர்களையோ, பங்குதாரர்களையோ முழுக்க நம்ப வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

எல்லா விஷயங்களிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வும் நிதானமும் அடக்கமும் கொண்டு செயலாற்றினால் நிச்சயம் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

யாரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். பொருட்கள் திருட்டு போவதற்கோ நீங்கள் கை மறதியாக எங்காவது வைத்த பிறகு தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது. கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அலுவலகத்திலோ, தொழில் இடங்களிலோ உங்கள் கூடவே இருக்கும் நெருங்கிய ஒருவர் உங்களை சரியாக புரிந்து கொள்ளாமலோ அல்லது அவரசப்பட்டு நீங்கள் செய்யும் ஒரு தவறாலோ இந்த வருடம் உங்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரை எதிரியாக தள்ளி வைக்க முடியாமலும் நண்பராக சேர்த்து கொள்ள முடியாமலும் திணறுவீர்கள் என்பதால் மறைமுக எதிர்ப்புகளில் கவனமாக இருங்கள்.

தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருந்தாலும் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். எதிலும் அகலக்கால் வைத்து விட வேண்டாம். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.

அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. அரசுப் பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வருடம் சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை செய்ய முடியும்.

பெண்களுக்கு இந்த வருடம் நன்மைகள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்துவதற்கு பரம்பொருள் அருள் புரிவார். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும். குலதெய்வ அருளினால் எதையும் சமாளிப்பீர்கள். பொதுவாக தனுசு ராசிக்கு நிறைகளைத் தரும் வருடம் இது.

துன்முகி வருடம்

(மூலம், பூராடம், உத்திராடம் 1,ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

தனுசுராசிக்காரர்களுக்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் நன்மைகளை நீட்டித்து தரும் புதுவருடமாக வர இருக்கின்ற தமிழ்ப்புத்தாண்டான துன்முகி ஆண்டு இருக்கும். குறிப்பாக ஏழரைச்சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் தனுசு ராசி இளைய பருவத்தினருக்கு சனியின் பாதிப்பைக் குறைத்து எதிர்காலத்திற்கான நல்ல மாற்றங்களை தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் இந்த வருடம் தரும்.

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மாற்றம், ஊர் மாற்றம், வீடுமாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அதே நேரத்தில் அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும். புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை உடனடியாக கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும்.

அரசு, தனியார்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கப் பெறும். சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் மந்த நிலை விலகி தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி, மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும். வியாபாரிகள் தொழில் இடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம்.

அரசு, தனியார்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கப் பெறும். சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இப்போது இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இருக்கும்.

அடிக்கடி ஞாபகமறதி வரும். எனவே கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை நம்ப வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் உங்களுக்கு நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கு தடைகள் உண்டு. எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும்.

பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு துறை சார்ந்த நெருக்கடிகள் இருக்கும். மேலதிகாரிகளிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். செய்யாத தவறுக்கு வீண்பழி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெளிநாடு சம்பந்தப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி, அவுட்சோர்சிங் போன்ற தொழில்கள் நடத்துபவர்களுக்கும், அதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் இதுவரை இருந்துவந்த தடைகள் விலகும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவீர்கள்.

இளைய பருவத்தினருக்கு தடைகள் விலகி திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.
கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இந்த ஆண்டு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்த சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். பெற்றோருடன் கருத்து வேற்றுமை வரலாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது. எவரையும் நம்ப வேண்டாம்.

சர்க்கரை, ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக இந்த தமிழ்ப் புத்தாண்டு நன்மைகளை மட்டுமே தரும் என்றாலும் நாற்பது வயதுக்குட்பட்டவர்கள் ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் புதிய தொழில் முயற்சிகள் எதையும் செய்யாமல் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.

 

சனிப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மூலம் ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. கடந்த காலங்களில் பதினொராம் இடத்தில் இருந்து மிகப்பெரிய நன்மைகளை உங்களுக்குத் தந்து கொண்டிருந்த சனிபகவான் தற்போது ராசிக்கு மாறி ஏழரைச் சனியாக மாறுகிறார். ஏழரைச்சனி என்றவுடன் முதலில் கலக்கம்தான் எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் இம்முறை தனுசுராசிக்காரர்கள் பயப்படுவதற்கோ, கலங்குவதற்கோ அவசியமே இல்லை.

ஏனென்றால் ராசிநாதனும் ராசியும் வலுவாக இல்லாமல் இருந்தால்தான் ஏழரைச்சனி அஷ்டமச்சனிக்காலங்களில் கெடுபலன் அதிகமாக நடக்கும். கடந்தமுறை மீனராசிக்கு அஷ்டமச்சனி நடந்தபோது கெடுபலன் அதிகமாக இருந்ததற்கு ராசிநாதனான குருபகவான் அந்த நேரத்தில் மூன்று, நான்கு என வலுவில்லாத இடத்தில் இருந்ததே முக்கிய காரணம். ஆனால் தற்போது தனுசுராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பித்தாலும் தொடக்கத்திலேயே சனிபகவான் உங்கள் ராசிநாதனான உச்சகுருவின் பார்வைக்குள் வருகிறார். அடுத்து ராசிநாதன் குருபகவானும் தற்போது உச்சபலன் பெற்று இருக்கிறார்.

மேலும் வருகின்ற குருப்பெயர்ச்சியில் குருபகவான் அவருக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடான சிம்மத்திற்கு ஒன்பதாமிடத்தில் மாறுவார். இந்த ஒன்பதாமிடமும், சிம்மராசியும் குருபகவானுக்கு வலுப்பெற்ற இடங்கள் என்பதோடு ஒன்பதிற்கு வரும் குருபகவான் ராசியை பார்த்து வலுப்படுத்துவார் என்பதால் கிட்டத்தட்ட இரண்டு வருட காலங்களுக்கு மேலாக சனியால் தன் கெடுபலன்களை தரமுடியாது என்பதால் அவர் ஏழரைச்சனியாக செயல்பட மாட்டார்.

எனவே சனியை நினைத்து தனுசுராசிக்காரர்கள் தற்போது கலக்கப்படத் தேவையில்லை. அடுத்த சனிப்பெயர்ச்சியில் அவர் ஜென்மச்சனியாக வரும் பொழுது கவலைப்பட்டுக் கொள்ளலாம். இப்போது நிம்மதியாக வேலையை பார்க்கலாம். அடுத்து முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த சனி சில மாறுபட்ட அமைப்புகளை தந்தே தீரும். அவர்களுக்கு வாழ்க்கையின் பரிமாணங்களையும், சிக்கல்களையும் புரியவைப்பதற்காகவும் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கான அனுபவங்கள் கிடைப்பதற்காகவும் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை புரிய வைப்பதற்காகவும் சில எதிர்மறை அனுபவங்களை சனி தருவார்.

அந்த அனுபவங்கள் எதிர்கால நல்வாழ்க்கைக்குத் தேவை என்பதால் இளைஞர்களுக்கு சில முக்கிய அனுபவங்கள் தற்போது இருக்கும். இளைய பருவத்தினர்கள் தற்போது தங்களுடைய வேலை, கல்வி ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தி வேறுபக்கம் கவனத்தை சிதறவிடாமல் முக்கியமாக தேவையற்ற ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க, வழக்கங்கள் மற்றும் காதல் போன்றவைகளில் திசை திரும்பி விடாமல் தங்களுடைய ஆக்க சக்தியை வீணடிக்காமல் கவனமாக இருந்தால் ஏழரைச் சனி உங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை.

இந்த ஏழரைச் சனியால் இளைஞர்களுக்கு இதுவரை இல்லாத சோம்பல் வரும். படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாது. மாணவர்களுக்கு படிப்பது மறந்து போகும். எதிலும் விட்டேத்தியாக இருப்பார்கள். விரக்தி வரும். எனவே பெற்றோர்கள் அவர்களை அரவணைத்து அக்கறை காட்டி வாழ்க்கையைப் புரிய வைத்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் அனைத்து விஷயங் களிலும் கவனமுடன் வேலை செய்ய வேண்டியது அவசியம்.

இந்த காலகட்டத்தில் உடன் பணிபுரிபவர்கள் எவரையும் நம்ப வேண்டாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் உங்களுக்கு கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். மேலதிகாரிகளிடம் மோதல் வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தரங்கமான விஷயங்களை அனாவசியமாக யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

உயரதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. சம்பளம் தவிர்த்த `இதர' வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கிய வராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்புவது இந்த சனிப்பெயர்ச்சியில் சரிபட்டு வராது. பொதுவாக தனுசு ராசிக்காரர்கள் நடுநிலை தவறாதவர்களாகவும் நல்ல நீதிமான்களாகவும் இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டீகள். எதற்கும் விலை போக மாட்டீர்கள்.

உண்மையான அன்புக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். பணம் வேண்டுமா புகழ் வேண்டுமா எனக் கேட்டால் புகழைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் நீங்கள். பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். அங்கே அப்படி தாங்க முடியாத பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அடி முதல் நுனிவரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும்.

எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும் என்பதால் யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த காலகட்டத்தில் எவருமே உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள்.

குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள்.

பொருட்கள் தொலையவோ, வீணாகவோ, திருடு போவதற்கோ வாய்ப்பு இருக்கிறது. சுய தொழில் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் வரும். அரசாங்க உதவிகள் கிடைப்பது கடினம். தொழில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை இதைச் செய்து முடிக்க முடியுமா என்று யோசனை செய்வது நல்லது. சம்பந்தமில்லாத இடத்தில் இருந்து தொழிலுக்கு இடையூறுகள் வரக்கூடும். வியாபாரிகள் கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும். இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப்படுத்த வேண்டாம். சிலருக்கு காதல் அனுபவங்கள் இந்த வருடம் ஏற்படலாம். அதனால் சில கசப்பான அனுபவங்களும் படிப்பினைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவது போன்ற முறைகேடான வழிகளில் செல்லும்போது உஷாராக இருங்கள். வேலை வாங்கித் தருவதாக சொல்பவரிடம் முன்கூட்டியே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம்.

பின்னால் சிக்கல்கள் வரும். மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.

தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம். பூர்வீகச் சொத்தில் தகராறுகளோ வழக்கு விவகாரங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்சனைகளாலும் கோர்ட் போலீஸ் என அலைய நேரிடலாம். ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்கு இருப்பவர்கள் தீர்ப்பு வரும் நாள் பக்கத்தில் இருந்தால் அதைக் கொஞ்சம் தள்ளிப் போட முயற்சிப்பது நல்லது. போலீஸ், கோர்ட் வழக்கு போன்றவை இப்போது சாதகமாக இருக்காது.

அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக் கொள்வதற்கான அனுபவங்களையும் படிப்பினைகளையும் தரும் என்பதால் கவலைப்படுவதற்கு நிச்சயமாக ஒன்றும் இல்லை.

குருப்பெயர்ச்சி பலன்கள்

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

தனுசு ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் சிறப்பான இடமாகவும், பத்தாமிடம் கேந்திர வீடு என்பதால் குருபகவானுக்கு சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

பத்தில் குரு பதவியைப் பறிப்பான் என்பது கோட்சாரக் குருவிற்கு சொல்லப்படும் ஒரு பழமொழி. ஆயினும் குருபகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் உங்களுக்கு இது பொருந்தாது. அதேநேரத்தில் தற்போது தனுசு ராசிக்கு ஏழரைச் சனியின் முதல் கட்டம் நடந்து வருவதால் தொழில் வேலை வியாபாரம் போன்ற நிலைகளில் உங்களுக்கு அலைச்சல்கள் இருக்கும்.

இதுவரை ஏழரைச்சனியின் கடுமைகளை உணராமல் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு அடுத்தவருடம் முதல் பாதிப்புக்கள் இருக்கும் என்பதால் இப்போதிலிருந்தே வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.
அரசு தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் வேலை செய்ய வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் உடன் பணிபுரிபவர்கள் எவரையும் நம்ப வேண்டாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் உங்களுக்கு கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.

மேலதிகாரிகளிடம் மோதல் வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தரங்கமான விஷயங்களை அனாவசியமாக யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உயரதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது.

சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்புவது இந்த குருப்பெயர்ச்சியில் சரிபட்டு வராது.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். பொருட்கள் தொலையவோ, வீணாகவோ, திருடு போவதற்கோ வாய்ப்பு இருக்கிறது.

சுய தொழில் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் வரும். அரசாங்க உதவிகள் கிடைப்பது கடினம். தொழில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை இதைச் செய்து முடிக்க முடியுமா என்று யோசனை செய்வது நல்லது.

சம்பந்தமில்லாத இடத்தில் இருந்து தொழிலுக்கு இடையூறுகள் வரக்கூடும். வியாபாரிகள் கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும்.

பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் ஒரு முட்டாள்தனமான மேலதிகாரியோடு நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். அங்கே அப்படி தாங்க முடியாத பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அடி முதல் நுனிவரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும்.

கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள்.

இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப் படுத்த வேண்டாம்.

சிலருக்கு காதல் அனுபவங்கள் இந்த வருடம் ஏற்படலாம். அதனால் சில கசப்பான அனுபவங்களும் படிப்பினைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவது போன்ற முறைகேடான வழிகளில் செல்லும்போது உஷாராக இருங்கள். வேலை வாங்கித் தருவதாக சொல்பவரிடம் முன்கூட்டியே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.

பத்தாமிடத்திற்கு மாறும் குருபகவான் தனது புனிதப்பார்வையால் இரண்டு நான்கு ஆறு ஆகிய இடங்களைப் பார்த்து பலப்படுத்துவார் என்பதால் மேற்கண்ட பாவங்களின் தன்மைகள் பலப்படும்.

குரு பகவானின் பார்வை இரண்டாமிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் குடும்பத்தில் சந்தோஷமும் மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தனகாரகனான குரு தனஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். உங்கள் வாக்குப் பலிக்கும்.

குருவின் நான்காமிடப் பார்வையால் நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து உங்களின் வீட்டுக்கனவு நனவாகும். அம்மா வழி உறவினர்களுடன் நல்ல சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார்வழி சொத்துகள் தற்போது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இருக்கும் பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு.

குருபகவான் நான்காமிடத்தை பார்க்கப் போவதால் மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். தெரிந்த கேள்விதான் கேட்பார்கள் என்பதால் பரீட்சை எழுதுவற்கு சுலபமாக இருக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.
குருவின் பார்வை ஆறாமிடத்தில் பதிவதால் தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரியங்களுக்காகவோ கடன் வாங்க நேரிடும்.

ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும். குருபகவானின் ஆறாமிடப் பார்வையால் மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம்.

பூர்வீகச் சொத்தில் தகராறுகளோ வழக்கு விவகாரங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்சனைகளாலும் கோர்ட் போலீஸ் என அலைய நேரிடலாம். ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்கு இருப்பவர்கள் தீர்ப்பு வரும் நாள் பக்கத்தில் இருந்தால் அதைக் கொஞ்சம் தள்ளிப் போட முயற்சிப்பது நல்லது. போலீஸ், கோர்ட் வழக்கு போன்றவை இன்னும் சில மாதங்களுக்கு உங்களுக்கு சாதகமாக இருக்காது.

அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம்.
வயதானவர்கள் உடல் நலத்தில் கண்டிப்பாக அக்கறை வைக்க வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கலைஞர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சில நல்ல முன்னேற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏதேனும் ஒரு செயல் அல்லது நிகழ்ச்சியால் நீங்கள் புகழ் அடைவீர்கள். யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த குருப்பெயர்ச்சியால் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும்.

யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சகோதர சகோதரிகளுக்கு இந்த வருடம் உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு. என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் கூறுவதையும் கேட்க வேண்டியிருக்கும்.

பரிகாரங்கள்:

ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில் இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று அவரின் அருள் பெறுவதும் துன்பங்களைக் குறைக்கும்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

இரக்க சிந்தனையால் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் தனுசு ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் குரு, ‘புத்ரகாரகன்’ என்று வர்ணிக்கப்படுபவர். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்ற பழமொழிக்கு இலக்கணமாக விளங்கும் குரு, உங்கள் ராசிக்கே அதிபதியாக இருக்கிறார். எனவே, உங்களால் நன்மைகளை பெறுபவர்கள் ஏராளமானவர்கள். ஆனால், நன்மையை பெற்றுக் கொண்டவர்கள் உங்களுக்கு நன்றி காட்டுவார்களா? என்பது சந்தேகம் தான்.

உடல் கம்பீரத்தை விட உள்ளத்தில் காணப்படும் உறுதி உங்களுக்கு அதிகம். எதைச்செய்தாலும், சிந்தித்துச் செய்ய வேண்டும். சிறந்த மனிதர்களிடம் யோசனை கேட்டுச் செய்ய வேண்டும் என்று சொல்வீர்கள். சாமர்த்தியமாகப்பேசி சமாளிப்பது உங்களுக்கு கை வந்த கலை.

சேமிப்பதையே அக்கறையாக கொண்டாலும், செலவழிக்க யோசிக்க மாட்டீர்கள். மதி வளம் அதிகம் உங்களிடம் இருப்பதால் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெறுவீர்கள். இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொடுக்கும் என்தைப் பற்றி பார்ப்போம்.

ஒளிமயமான வாழ்வு தரும் ஒன்பதாமிடத்து ராகு!
உடன்பிறப்புகளின் உறவை பலப்படுத்தும் மூன்றாமிடத்து கேது!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் 8–1–2016 அன்று தனது வான்வெளி பயணத்தில் பின்னோக்கி சென்று பிரச்சினைகளை தீர்க்க நல்ல வழி வகுத்துக் கொடுக்கப் போகிறார்கள்.

ஒன்பதாமிடத்து ராகு உங்களுக்கு ஒப்பற்ற பலன்களை வாரி வழங்கப் போகிறது. முன்பு செய்த காரியங்களில் முற்றுப்பெறாத காரியங்கள் அனைத்தும், இப்பொழுது முற்றுப் பெறும். அன்பு நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கும். பண்புடையவர்களின் தொடர்பால் பல நல்ல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.

பக்தி மார்க்கம் அதிகரிக்கும். பகல், இரவாக பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று நினைத்தவர்கள் முகமலர்ச்சி அடைவர். வியர்வை சிந்தாமலேயே வீடு தேடி காசு வரும். எப்பொழுது நல்ல நேரம் வரும் என்று கேட்ட உங்களுக்கு இப்பொழுது பதில் கிடைக்கப் போகிறது.

ஒன்பதாம் இடத்து ராகுவால் பொன், பொருள் குவியும். மனக் குமுறல் மாறும். மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடும். தந்தை வழியில் இருந்த தகராறுகள் அகலும். வந்த வாய்ப்புகளில் எல்லாம் கையெழுத்திட்டு வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பங்காளிப் பகை மாற எடுத்த முடிவில் திசை திருப்பம் ஏற்படும். உடன்பிறப்புகளின் கல்யாணத்தை நடத்திப்பார்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். அதன்மூலம் அபரிமிதமான லாபங்கள் கிடைக் கும்.

முன்னேற்றம் தருமா மூன்றாமிடத்து கேது?

இதுவரை சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது பகவான் இப் பொழுது மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். மூன்றாமிடம் ஒரு முக்கியமான இடமாகும். அதில் அரவு கிரகம் சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளின் வழியில் சில விரயங்களைச் செய்ய நேரிடும். உடன் பிறந்தவர்களால் மனக்கசப்பு ஏற்படாமல் இருக்கவும், சகோதர வழியில் சச்சரவு ஏற்படாமல் இருக்கவும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

முன்கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவதன் மூலம் முக்கிய தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ள இயலும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வாய்தாக்கள் வாங்குவதும் நீடிக்கும். கிழக்கு, மேற்கு பார்த்த வீட்டில் இருக்கலாமா? அல்லது வடக்கு தெற்கு பார்த்த வீட்டில் இருக்கலாமா? என்று சிந்தித்து, வீடு கட்டும் முயற்சி யில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அங்ஙனம் வீடு கட்டத் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் குடும்ப உறுப்பினர்களில் யாருடைய ஜாதகத்தில் செவ்வாயின் பலம் அதிகம் இருக்கிறது என்பதை கண்டு கொள்ளுங்கள். அதன் பிறகு அவர்கள் பெயரில் கட்டத் தொடங்கினால் துரிதமாக நடைபெறும்.

பணியாளர்கள் உங்களை விட்டு விலக நேரிடலாம். எனவே, உங்களின் அனுசரிப்பும், அன்பும் தான் உங்களோடு அவர்களை நிலைக்க வைக்கும். வியாபாரத்தில் விரோதங்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக சகோதர வழியில் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு மன அமைதி குறைவு ஏற்படலாம்.

நல்ல லாபம் வந்தும் நமக்கு போதுமான தொகையை தரவில்லை என்று சகோதரர்கள் முறையிடுவர். எவ்வளவு செய்தாலும் இவர்களுக்கு நன்றி இல்லையே என்று நீங்கள் நினைப்பீர்கள். இதுவரை ஒத்துப்போன சகோதர, சகோதரிகளின் குணம் இப்பொழுது கொஞ்சம், கொஞ்சமாக மாறலாம். பெற்றோர்கள் உங்களிடம் தான் பிரியமானவர்களாக இருக்கிறார்களே என்று அவர்கள் நினைப்பார்கள்.

எனவே, நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தில் தான் நன்மையும், தீமையும் இருக்கிறது. எனவே, இதுபோன்ற காலங்களில் உடன்பிறப்புகள் சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது நல்லது. கணக்குகளும், பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க பிரபலஸ்தர்கள் பின்னணியாக இருந்து உங்களுக்கு யோசனைகளை அள்ளி வழங்குவர்.

பாகப்பிரிவினையில் கூட விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அண்ணன், தம்பிகள் தானே, எடுத்துக் கொண்டு போகட்டும், நமக்கு உள்ளது ஓரளவு கிடைத்தால் போதும். பெற்றோர்களின் ஆசியால் நாம் முன்னேற்றம் காண இயலும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். குடும்ப விஷயங்களில் மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. திசை மாறிய விநாயகப் பெருமானையும், திசை மாறிய தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பாத சார அடிப்படையில் ராகு தரும் பலன்கள்

ராகு பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புகழ் கூடும். புதிய வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அஞ்சல் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். ஒப்பந்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து உள்ளத்தை மகிழ்விக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு அதிக பொறுப்புகள் வந்து சேரும். மேலதிகாரிகளின் ஆதரவோடு சில காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். அரசு வழி அனுகூலம் உண்டு. தந்தை வழியில் எதிர்பார்த்த வரவு கிடைக்கும்.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். குறுக்கீடு சக்திகள் கூடுதலாக இருக்கும். இந்த நேரத்தில் நெருக்கடிகளும் உண்டு. நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. பாசம் காட்டிய வர்களின் வேஷம் கலையும். பக்கத்தில் இருப்பவர்களால் உத்தியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். செல்வாக்கு மிக்கவர்களாக நீங்கள் இருப்பதால் கேட்கும் இடத்தில் உங்களுக்கு கடன் கிடைக்கும். என்றாலும், கடன் மிக அதிகமாக போய்விட்டதே என்றும் கவலைப்படுவீர்கள்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): உடன் பிறப்புகளால் உபத்திரவங்கள் ஏற்படும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் குறையும். படபடப்பாக பேசி பல காரியங்களை பாதியிலேயே விட்டுவிடுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்கள் உங்களை விட்டு விலகலாம். தாழ்வு மனப்பான்மை வந்து கொண்டே இருக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று ஒரு சிலர் வருத்தப்படுவர். இக்காலத்தில் தசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

பாதசாரப்படி கேது தரும் பலன்கள்

கேது பகவான் குரு சஞ்சாரத்தில் சஞ்சரிக்கும்பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): ஆரோக்கிய தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் வந்து சேரும். தாயின் உடல் நலம் சீராகும். வாங்கிய இடத்தை பதியாமல் இருக்கிறோமே என்று நினைத்தவர்கள், இப்பொழுது பத்திரப் பதிவு செய்து முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாறுதல் அல்லது அதைப்பெறும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கேது பகவான் ராகு காலத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): உறவினர் பகை அதிகரிக்கும். ஊர் மாற்றம், இட மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்திலும் விரும்பத்தகாத இடத்திற்கு மாறுதல் கிடைக்கலாம். பிறரை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. பொதுவாக இது போன்ற காலங்களில் ஆறுதல் அளிப்பது தெய்வ வழிபாடுகள்தான். எனவே குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

கேது செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): பிள்ளைகள் வழியில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும். அவர்களின் திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களை வாங்குவதில் மும்முரம் காட்டுவீர்கள். வெளிநாட்டு யோகம் சிலருக்கு வந்து சேரலாம். பூர்வீக சொத்துக் களை விற்றுவிட்டு புதிய சொத்துக் கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். முக்கிய புள்ளிகளை சந்தித்து முன்னேற்றம் கருதி முடிவெடுக்கும் நேரமிது. செலவு கூடினாலும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

ஒன்பதாமிடத்து ராகுவால் ஒளிமயமான எதிர்காலம் அமையவும், மூன்றாமிடத்து கேதுவால் முன்னேற்றம் அதிகரிக்கவும், ஆதியந்த பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நாயன்மார்களில் உங்களுக்கு உகந்த நாயன்மாரை தேர்ந்தெடுத்து வியாழன் தோறும் வழிபட்டு வாருங்கள் வெற்றிக் கனியை விரைவில் எட்டிப் பிடிக்க இயலும்.