iFLICKS தொடர்புக்கு: 8754422764
மீனம்

இன்றைய ராசி பலன்கள்

வார பலன்கள்

ஜூன் 19-6-2017 முதல் 25-6-2017 வரை:-

ஆறாமிடத்தில் இருக்கும் ராகுவால் எதிரிகளையும், எதிர்ப்புகளையும் நீங்கள் ஜெயிக்க முடியும். கடன்தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். இதுவரை பயமுறுத்திக் கொண்டிருந்த கடன்காரர்கள் இனிமேல் உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள். புதிய கடன் வாங்கி பழைய கடன்களை அடைக்க முடியும். ராசிநாதன் ராசியைப் பார்ப்பதால் சொந்தத்தொழில், வியாபாரம் போன்றவைகள் இப்போது நன்றாக நடக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு அனைத்து வி‌ஷயங்களும் கை கொடுக்கும்.

சிகப்பு நிற பொருட்களால் லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் உங்களின் பிடிவாத குணத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். கலைஞர்களுக்கு சிறப்புக்கள் சேரும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. வியாபாரிகளுக்கு கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வேலை மாற்றம் நல்லது பணி இடமாற்றம் இருக்கும்.

வெற்றித் திருமகன் முருகப் பெருமானின் பூரண அருளுடன் பிறந்த நீங்கள் எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்பதால் தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இந்த வாரம் முழுமையாகக் கிடைப்பதால் இப்போது நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். நம்பிக்கையை கை விடாதீர்கள். சிலருக்கு அதிகமான ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் நடக்கும். மொத்தத்தில் தொட்டது துலங்கும் வாரம் இது.

'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி          செல்:8870998888

தமிழ் மாத ஜோதிடம்

15.6.17 முதல் 13.7.17 வரை

“எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற மகாகவியின் சத்தியவார்த்தைகள் இப்பொழுது உங்களுக்கு பொருந்தும் என்பதால் அனைத்திலும் தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்ற முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம் வருமானம் உள்ள மாதம்தான்.

இந்த மாதம் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். சுக்கிரன் புதன் வலுப் பெறுவதால் இந்த மாதம் தாராளமான பணவரவு இருக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும்.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வரும். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடக்கலாம்.

'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி
செல்:8870998888

ஆண்டு பலன் - 2017

மீன ராசிக்கு 2017-ம் ஆண்டு நற்பலன்களை தருகின்ற ஆண்டாக இருக்கும். வருட ஆரம்பத்தில் ஏறத்தாழ செப்டம்பர் மாதம் 12-ம் தேதி வரை உங்கள் ராசிநாதன் ஏழாமிடத்தில் நிலை கொண்டு ராசியை பார்த்துக் கொண்டிருப்பது மிக சிறந்த அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு சிறப்புகளை சேர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏறத்தாழ வருடம் முழுவதும் ராசிநாதன் ராசியை பார்ப்பதால் இந்த வருடத்தில் உங்களுக்கு அந்தஸ்து, கவுரவம் கூடும்படியான அமைப்புகள் இருக்கும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நடக்கும். இளைய வயது காரர்களுக்கு அவரவர்கள் வயதுக்கேற்றப்படி படிப்பு, வேலை, திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவை கிடைக்கும் வருடம் இது.

நடுத்தர வயதுக்காரர்களை இதுவரை தொல்லைப் படுத்தி கொண்டு வந்த கடன் தொல்லைகள், குடும்பச் சிக்கல்கள், வழக்குகள் வருடத்தின் ஆரம்பத்திலேயே சாதகமான முடிவுக்கு வரும்.

ஆகஸ்ட் மாதம் 18 -ம் நாள் நடக்க இருக்கும் ராகு-கேதுப்பெயர்ச்சி மூலம் ராகு ஐந்தாமிடத்திற்கும் கேது பதினொன்றாமிடத்திற்கும் மாற இருக்கிறார்கள். பதினொன்றாமிடத்தில் சர்ப்பக்கிரகங்கள் இருப்பது எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தரும் என்பதால் ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு உங்களுடைய பொருளாதார உயர்வு மிகவும் நன்றாக இருக்கும்.

ராகு-கேதுக்கள் கடக, மகரத்தில் அமர்ந்து அந்த இடம் மூன்று பதினொன்றாக அமைந்தால் செல்வம் வரும் என்பது ஜோதிட விதி. இது பிறந்த ஜாதகத்திற்கும் கோட்சார அமைப்பிற்கும் பொருந்தும். அதன்படி வருடத்தின் பிற்பகுதியில் நடக்க இருக்கும் இந்தப் பெயர்ச்சியின் மூலம் மறைமுகமான வழியில் உங்களுக்கு பண வரவும், தனலாபங்களும் இருக்கும்.

மகர கேதுவால் இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு வெற்றிகள் இருக்கும். விரும்பிய தேசத்திற்குச் செல்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு வெளி மாநிலம் மற்றும் தூரமான இடங்களில் பணி அமையும். இன்னும் சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவு இடங்களுக்கு போய் வாரா வாரம் திரும்புவது போன்ற வேலைகள் கிடைக்கும்.

செப்டம்பர் 12-ம் தேதியன்று ராசிநாதன் குருபகவான் ஏழாமிடத்தில் இருந்து எட்டிற்கு மாறுகிறார். இது சாதகமற்ற நிலை என்பது போலத் தோன்றினாலும் எப்போதும் உபயராசிகளுக்கு குருபகவான் மறைவிடத்தில் நன்மைகளை மட்டுமே செய்வார் எனும்படி நல்ல பலன்களை மட்டுமே குரு மாற்றம் செய்யும். அதே நேரத்தில் எட்டாமிடம் என்பதால் எதிலும் அலைய வைத்தே பணம் தருவார்.

நிறைவாக வருடத்தின் இறுதியில் அக்டோபர் மாதம் 26 ம் நாள் சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. சனிபகவான் தற்போது இருக்கும் ஒன்பதாமிடத்திலிருந்து பத்தாமிடத்திற்கு மாறுகிறார். ஒரு பாபக்கிரகம் கேந்திர வீட்டிற்கு மாறுவது நன்மைகளைத் தரும் என்பதால் சனிப்பெயர்ச்சியின் மூலம் மீன ராசிக்காரர்களுக்கு கெடுபலன்கள் எதுவும் இல்லை.

எனவே பிறக்க இருக்கும் புத்தாண்டு மீன ராசிக் காரர்களுக்கு வாழ்க்கை, தொழில், வேலை, நட்பு, குடும்பம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்களைக் கொடுக்கும். ஆரம்பத்தில் அவை கஷ்டமாகத் தோன்றினாலும் வருடத்தின் இறுதிப் பகுதியில் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்பது உங்களுக்குத் தெரிய வரும்.
எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இந்த வருடம் இருக்காது என்பது உறுதி.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் உடனடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

இதுவரை சரியான வேலை, தொழில் அமைப்புகள் எதுவும் நடைபெறாத முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த வருடம் திருப்தியாக அனைத்தும் நடக்கும். தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு தற்பொழுது குருபலம் வந்து விட்டதால் செப்டம்பர் மாதத்திற்குள் நல்லபடியாக திருமணம் நடக்கும். மீனராசிக்காரர்கள் வீட்டில் நிச்சயமாக இந்த வருடம் ஒரு சுபகாரியம் உண்டு. இதுவரை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசு கிடைக்கும்.

முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய் துன்பத்தில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் இரண்டாவது வாழ்க்கை நல்லவிதமாக அமையும். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும்.

வயதான மீனராசிக்காரர்கள் தற்பொழுது தாத்தா, பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் பேச்சையும் கேட்டு நடந்து கொள்வார்கள். ஆரோக்கியக் குறைவுகள் கட்டுக்குள் இருக்கும். ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகள் குணமடையத் துவங்கும். புதிதாக எந்த வித மருத்துவச் செலவும் இந்த வருடம் இருக்காது.

செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்.

பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாபநிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு இருக்கப் போவது இல்லை.

குறிப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம் எண்ணப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிதள்ளி போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.

இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.

நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்த வருடம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்கும். மறைமுகமான வழிகளில் லாபம் கிடைக்கும்.
பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.

எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும். மீனத்திற்கு மேன்மை தரும் வருடம் இது.

ஹே விளம்பி வருட பலன்

மீன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு நிதானமான பலன்களை கொடுக்கின்ற ஆண்டாக இருக்கும். இந்த புத்தாண்டில் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு நடக்கபோவது இல்லை. அதே நேரத்தில் ஆஹா, ஓஹா என்ற நல்ல பலன்களும் நடந்து விடப் போவது இல்லை.

வருடத்தின் ஆரம்பத்தில் ஜூலை மாதம் 18-ந்தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகுபகவான் தற்போது இருக்கும் சாதகமான இடமான ஆறாமிடத்தில் இருந்து நிதானமான பலன்களை தரக்கூடிய 5-ம் இடத்திற்கு மாறுகிறார்.

ராகு சாதகமற்ற இடத்திற்கு மாறுவதாக தோன்றினாலும் அவரது எதிர்முனை கிரகமான கேது மிகவும் நன்மைகளை தரக்கூடிய பதினொன்றாம் இடத்திற்கு மாறுவது மீனராசிக்கு நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரக்கூடிய ஒரு நிகழ்வு என்பதால் இந்த வருட ஆரம்பமே மீன ராசிக்கு சந்தோஷங்களை தரக்கூடிய ஒன்றாக இருக்கும்.

ராகு-கேதுக்கள் இருவருக்கும் கடக, மகர வீடுகள் நல்லவைகளை தருகின்ற வீடுகள் என்பதாலும் வருடத்தின் ஆரம்பத்தில் மீனராசிக்கு நல்லவைகள் நடக்கின்ற ஒரு வருடமாகவே இந்த வருடம் ஆரம்பமாகிறது.

ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் இதுவரை மீனராசிக்காரர்களுக்கு தடங்கலாக இருந்து வந்த தொழில்முயற்சிகள், அலுவலக பின்னடைவுகள், வேலையில் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். பணிபுரியும் இடங்களில் இருந்து வந்த நிச்சயமற்ற நிலை, மறைமுக எதிர்ப்புகள், கூடவே இருந்து குழிபறிக்கும் தன்மை, பொறாமை, கண்திருஷ்டி போன்றவைகளும் விலகும்.

வேலை செய்யும் இடத்தில் இனிமேல் நிம்மதியான சூழல்கள் உருவாகும். சிலருக்கு பணி நிரந்தரமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு உதவிகளும், சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்து கிடைக்காமல் இருந்த ஆர்டர்களும் இனிமேல் கிடைக்கும். இதுவரை நடக்காமல் இருந்த தொழில் விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் போன்றவைகள் இனி நல்லபடியாக நடக்கும்.

செப்டம்பர் மாதம் 12-ம்தேதி நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியினால் உங்கள் ராசிநாதனான குருபகவான் இதுவரை நல்லபலன்களை கொடுத்து கொண்டிருக்கும் ஏழாமிடத்தில் இருந்து நற்பலன்களை கொடுக்க இயலாத எட்டாமிடத்திற்கு மாறுகிறார்.

இந்தப் பெயர்ச்சியின் மூலம் தற்போதிருக்கும் நிலைகளில் மீனத்தினர் சிலருக்கு மாற்றங்கள் உருவாகும். எனவே அனைத்து விஷயங் களிலும் நிதானமாகவும், கவனமாகவும் நடக்க வேண்டி இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை, மாற்றம் போன்றவைகள் நடக்கும்.

எட்டாமிடம் என்பது வெளிநாடு, வெளிமாநிலம் போன்றவைகளைக் குறிப்பது என்பதாலும் குருபகவான் மாற இருக்கின்ற துலாம் வீடானது சர ராசி எனப்படும் தூர இடங்களை குறிக்கின்ற ராசி என்பதாலும் இதுவரை வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவர்கள் தடைகள் நீங்கி வெளிநாடு செல்வீர்கள்.

இளைஞர்கள், மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்கவோ, கல்லூரி படிப்பிற்காகவோ வெளிமாநிலம் செல்லும் பலன்கள் உண்டு. ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில் செய்பவர்கள், வேலைவிஷயமாக தூரஇடங்களுக்கு பயணம் செல்பவர்கள், வாரம் அல்லது மாதம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்லும் அமைப்புகளில் வேலை செய்பவர்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி நல்ல பலன்களை தரும்.

அக்டோபர் மாதம் 26-ம்தேதி நடக்க இருக்கின்ற சனிப்பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் தற்போது அமர்ந்திருக்கும் சாதகமற்ற இடமான ஒன்பதாமிடத்தில் இருந்து மாறி நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய பத்தாமிடத்திற்கு மாறுகிறார். இந்தப் பெயர்ச்சி மீனராசிக்கு ஏற்கனெவே இருந்ததை விட நல்ல பலன்களை கொடுக்க கூடிய இடம் என்பதால் சனிபெயர்ச்சியின் மூலம் மீனத்திற்கு கூடுதலான நல்ல பலன்கள் கிடைக்கும்.

பாவ கிரகமான சனிபகவான் திரிகோண வீட்டில் இருந்து கேந்திர வீடான பத்தாம் இடத்திற்கு மாறுவது நல்ல அமைப்பு என்பதால் இதுவரை வேலை, திருமணம், புத்திரபாக்கியம் போன்ற பாக்கியங்கள் கிடைக்கப் பெறாமல் தடைகள் இருந்தவர்களுக்கு இனிமேல் அனைத்திலும் நன்மைகள் நடக்கும்.

வேலை, தொழில் அமைப்புகளில் எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப் படுத்த வேண்டாம்.

அரசு தனியார் துறை ஊழியர்கள் தங்களது வேலை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். மேலதிகாரிகளால் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. மனதில் உள்ளதை வெளிப்படையாக யாரிடமும் பேசவேண்டாம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும்.

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வருடம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த வருடம் அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இந்த வருடம் கூடுதல் சம்பளத்துடன் நிச்சயமாகக் கிடைக்கும்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும்.

பெண்களுக்கு இந்த வருடம் நல்ல வருடமாக இருக்கும். பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் உங்கள் பெயர் சிறக்கும். மாமியார் மெச்சிய மருமகளாய் இருப்பீர்கள். உங்கள் மருமகளையும் நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள்.

பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் முதலீடு செய்வதில் கவனம் தேவை. செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம். இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள்.

இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் நடக்கும். இதுவரை இருந்ததைவிட நல்ல வீட்டிற்கு இப்போது மாறுவீர்கள். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.

அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.

ஏற்கனவே திருமணமாகி முதல்வாழ்க்கை கோணலாகி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது நல்லபடியாக நடந்து அந்த வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும்.

கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். கையை மீறிப்போகும் அளவிற்கு கெடுதலான விஷயங்கள் எதுவும் ஒருபோதும் நடக்காது

எப்படிப் பார்த்தாலும் இந்த வருடம் மீனராசிக்கு நற்பலன்களை மட்டுமே கூடுதலாகத் தரும் என்பதால் இந்தப் புத்தாண்டை மீனராசிக்காரர்கள் மனதார வரவேற்பீர்கள்.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மீனராசிக்கு "அதோ வருகிறது நல்லகாலம் இதோ வருகிறது நல்லகாலம்'' என்று புலிவரும் கதையாக நான் சொல்லிக் கொண்டிருந்த சனிப்பெயர்ச்சி இந்த மாதம் நடந்தேறி இதுவரை உங்களை பிடித்திருந்த அஷ்டமச்சனி விலகுகிறது. குறிப்பாக முப்பது வயதுகளில் இருப்பவர்கள், முதல்முறையாக அஷ்டமச் சனியின் கொடுமைகளை அனுபவித்தவர்கள் இந்த மாதத்திலிருந்து மிகப் பெரிய மாற்றங்களை கண்கூடாகக் காண்பீர்கள் என்பது உறுதி.

இப்போது சனிபகவான் மாறப்போகும் ஒன்பதாமிடம் ஒன்றும் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் இடமாக நமது மூலநூல்கள் சொல்லவில்லை. ஆனால் சனியினால் இதுவரை உங்களுக்கு நடந்து கொண்டிருந்த கெடுதல்கள் இனிமேல் உங்களுக்கு நடக்காது என்பதால் இனிமேல் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இருக்கும். மேலும் ஏழரைச்சனி அஷ்டமச்சனி முடிந்த பிறகு வாழ்க்கை நல்லபடியாக செட்டில் ஆகும் என்பது ஜோதிட விதி.

எனவே இனி உங்களால் வாழ்வில் நல்லபடியாக செட்டிலாக முடியும். சனியின் தாக்கத்தினால் வாழ்க்கையை இழந்தவர்கள், வேலையைப் பறிகொடுத்தவர்கள், தூக்கம் தொலைத்தவர்கள், கடன்தொல்லையில் அவஸ்தைப்பட்டவர்கள், உடல்நலம் கெட்டவர்கள் இன்னும் சில சொல்ல முடியாத பிரச்சனைகளில் சிக்கியவர்கள் அனைவரும் இனிமேல் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமைந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள்.

மீனராசிக்காரர்கள் சிலர் இப்போது நடந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு எனக்கு நல்ல பலன்களைத்தான் எழுதுகிறீர்கள் ஆனால் ஒன்றும் நடக்கவில்லையே என்று என்னிடம் குறைப்பட்டுக் கொண்டார்கள். ராசிபலன் என்பது பொதுவான ஒன்றுதான். அதிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக திக்குத் தெரியாத காட்டில் அலைந்து கொண்டிருந்த மீனராசிக்காரர்கள் சிலர் மட்டுமாவது என்னுடைய நம்பிக்கை ஊட்டும் ராசி பலன்களைப் படித்து தன்னம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்.

சிக்கலில் தவிக்கும் ஒரு ஆத்மாவை இன்னும் கொஞ்ச காலத்தில் உனக்கு நல்லகாலம் பிறக்க இருக்கிறது கவலைப்படாதே என்று தேற்றுவதுதான் ராசிபலனின் வேலை. அதுவே ஒரு நல்ல ஜோதிடரின் கடமை. அந்தவகையில் எனது கடமையை நான் மீனராசிக்கும் விருச்சிகராசிக்கும் சரியாகச் செய்திருக்கிறேன் என்பதற்கு என்னுடைய பேஸ்புக்கிலும் இணையதளத்திலும் இருக்கும் வாசகர்களின் கமெண்டுகளே சாட்சி.

இளையபருவத்தினர் இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற பயஉணர்வுகளும் கலக்கமான மனநிலையும் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள்.

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றபடி நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்சனையால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப்பளுவும் இனிமேல் நீங்கி உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் `கடுகடு' வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும்.

பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்சனைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும். இதுவரை மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக் கவலைகள் தீரப் போகிறது. வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும்.

தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்துவதற்கு பரம்பொருள் அருள் புரிவார். காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். அஷ்டமச் சனியின் தாக்கத்தினால் விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது திருமண அமைப்பு இனிமேல் கூடி வரும்.

அந்த திருமண வாழ்க்கை நீடித்தும் நல்லவிதமாகவும் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். நீண்ட காலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் கூடி வந்து விட்டது. ஒரு சிலர் உங்களை ஆலயத் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் இதுவரை இருந்துவந்த வில்லங்கம் விலகும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். தந்தையிடம் இருந்து உதவிகளோ பொருள் வரவுகளோ இருக்கும்.

வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக் கும். இது வரை வெளிநாடு செல் லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும். பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்ப வர்கள், அன் றாடத் தொழில் செய்ப வர்களுக்கு இனி மேல் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது நன்மை தரும் காலம்.

விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும். இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர், இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் முன்னேற்றம் காணுவீர்கள்.

குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்தக் சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது. நீண்ட நாட்களாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும்.

வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். வங்கிக்கடன் வாங்கி வீடு கட்டவோ நல்ல பிளாட் வாங்கவோ முடியும். இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகன யோகம் வந்து விட்டதால் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த அதே மாடலில் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

 

குருப்பெயர்ச்சி பலன்கள்

(பூரட்டாதி 4ம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தி, து, ஸ, ச, த, தே, தோ, ச, சி ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

மீனராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் இருந்து உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் தடைகள் தாமதங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த குருபகவான் தற்போது மிகவும் நற்பலன்களைத் தரக்கூடிய இடமான ஏழாமிடத்திற்கு மாறி நன்மைகளைத் தரப்போகிறார்.
கடந்த சிலவருடங்களாகவே பெரும்பாலான மீனராசிக்காரர்களுக்கு எல்லாவற்றிலும் சறுக்கல்கள்தான் இருந்து வந்தன.

குறிப்பாக மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதைப் போல அஷ்டமச்சனி முடிந்தும் உங்களுக்கு நல்லவைகள் நடக்கவில்லை. இந்த நிலைமை மாறி இனிமேல் ஏற்றஇறக்கங்கள் இல்லாத ஒரு சீரான நல்ல அமைப்புள்ள வாழ்க்கையினை மீனத்தினர் அனுபவிப்பீர்கள். இதுவரை இருந்து வந்த நிலை இந்தக் குருப்பெயர்ச்சி முதல் மாறுகிறது.

குருபகவான் இந்தப்பெயர்ச்சியால் உங்கள் ராசியைப் பார்க்கப் போவதால் குருபார்க்க கோடி நன்மை எனும் பழமொழி உங்கள் விஷயத்தில் நிரூபணமாகி இந்தப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு அனைத்து மேன்மைகளும் கிடைக்க இருக்கிறது.

இன்னொரு துணுக்கமாக குரு ராசியை பார்ப்பது நன்மைதான் என்றாலும் அவர் எத்தகைய நிலையில் இருந்து ராசியை பார்க்கிறார் என்பது முக்கியம் என்பதாலும் உங்களுக்கு அவர் ராசிநாதன் என்ற நிலையில் இருந்து ராசியை பார்க்க போவதாலும் மீனராசிக்கு சிறந்த மேன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.

குருபகவான் ராசியை பார்க்கப் போவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.

இந்தக் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தொல்லை கொடுத்த மேல் அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் அங்கே வருவார்கள். இதுவரை தடைப்பட்ட பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும்.

இளைய பருவத்தினருக்கு நல்லவேலை கிடைத்து திருமணமும் நடக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நீங்கள் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மணவாழ்வில் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அது தீரும். சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை அமையும்.

போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும்.

வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

சில தொழில்முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும்பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த நல்ல மாற்றங்களை உணர்வார்கள். தொழில் சீர்படும். லாபம் தரும். வரும் லாபத்தை சேமிக்க முடியும். செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது.
வியாபாரிகளுக்கு வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். எந்த ஒரு விஷயமும் வெற்றி தரும். ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்சனை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்சனை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். அருமையான புதிய வீடு கட்டுவீர்கள். பெருநகரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் சொந்தமாக டீலக்ஸ் பிளாட் அமையும்.

பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களை அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் அடைந்து நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும்.
மீனராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும் என்பதால் இப்போது ஏற்படும் நன்மைகளால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

பரிகாரங்கள்:

ஜென்மநட்சத்திரம் அன்று குடும்பத்துடன் கும்பகோணம் அருகில் உள்ள புகழ்பெற்ற குருபகவானின் திருத்தலமான ஆலங்குடி சென்று சிறப்பு ஆராதனைகளை செய்யுங்கள். மேலும் ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குரு ஹோரையில் ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவு என்ன என்று அதன் பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு உணவிடுவது குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை கூட்டித் நன்மை தரும்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

கெட்டிக்காரர்களாக இருந்தாலும் தவறு செய்தவர்களைத் தட்டிக்கேட்கும் மீன ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் குரு ‘புத்திரகாரகன்’ என்றும், ‘பொன்னவன்’ என்றும் வர்ணிக்கப்படுகிறார். மனதில் பட்டதை மறைக்காமல் சொல்பவர்கள் நீங்கள். மற்றவர்களுக்கு வலியச் சென்று உதவுகிற எண்ணம் உங்களுக்கு உண்டு. பேச்சாற்றல் மிக்க நீங்கள் எதிரிகளைக்கூட நண்பர்களாக மாற்றிவிடுவீர்கள்.

ராசியில் கடைசி ராசியாக இருந்தாலும், வளர்ச்சியில் முதல் ராசியாகக் காட்சியளிப்பீர்கள். பண பலத்தால் மற்றவர்கள் சாதிக்க முடியாததை, நீங்கள் பக்கபலமாக இருக்கும் நண்பர் களால் சாதித்துக் காட்டுவீர்கள். நாகரிகப் பொருட்களின் மீது மோகம் கொள்வீர்கள்.

எந்த ஒரு செயலுக்கும் காரணம் உண்டு என்று சொல்லும் நீங்கள், அரசியல்வாதிகளின் நட்பை அதிகம் பெற்றிருப்பீர்கள். வாகனங்களை அடிக்கடி மாற்றம் செய்வீர்கள். உறுதியான மனமே உங்கள் மூலதனமாக இருப்பதால் இறுதியாக நீங்கள் எடுக்கும் முடிவே எல்லோரும் ஒத்துக்கொள்வதாக இருக்கும்.

அஷ்ட லட்சுமி யோகம் தரும் ஆறாமிடத்து ராகு!
அலைச்சலைக் கூட்டும் பனிரெண்டாமிடத்து கேது!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வெளிப் பயணத்தில் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிவகுத்துக் கொடுக்கப் போகிறார்கள். ஜென்ம கேது விலகுவது என்பது யோகம் தான். பாம்பு கிரகங்கள் விலகுவதால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக நடைபெறாத செயல்பாடுகள் யாவும் இப்பொழுது துரிதமாக நடைபெறப்போகின்றது.

ஆனால் அதற்கு அடித்தளமாக யோகமான நாளில் சர்ப்ப சாந்தியை செய்து கொள்ள வேண்டியது அவசிய மாகும். அதிலும் ராகு 6–ல் வந்து அஷ்ட லட்சுமி யோகத்தை வழங்கப் போவதால் சிறப்புப் பரிகாரங்களைச் செய்வதன் மூலம் செல்வ வளத்தை மேலும் பெருக்கிக் கொள்ள இயலும். எட்டு வகை லட்சுமியின் அருளும் உங்கள் இல்லத்திற்கு வந்து சேரப் போகின்றது.

பண வரவு பெருகும். சேமிப்பு உயரும். செல்வாக்கு மேலோங்கும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தொடர்ந்து வெற்றி கிடைக்கும். ஒருசிலர் பழைய தொழிலை மூடிவிட்டுப் புதிய தொழில் தொடங்க முயற்சிப்பர். அந்த முயற்சியும் கைகூடும். பல வருடங்களாக பதவி உயர்வு கிடைக்காமல் ஏக்கப்பெருமூச்சு விட்ட உத்தியோகஸ்தர்களுக்கு இப்பொழுது ஆச்சரியப்படும் விதத்தில் பதவி உயர்வு கிடைக்கப்போகிறது.

உயர் அதிகாரிகளின் தொல்லைகளை தாக்குப்பிடிக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது. மேலதிகாரிகள் மாற்றலாகிச் செல்வர். உங்களுக்குரிய வேலை உறுதியாகும்.

பொதுவாக எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் இடம் ஆறாமிடாகும். அந்த இடத்தில் வலிமையான கிரகமான பாம்புக் கிரகங்கள் சஞ்சரித்து நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படும் குருவும் கூடியிருந்தால் எதிரிகள் உதிரிகளாவர். எல்லோரும் இணைந்து செயல்படுவர். மனக் கசப்புகள் மாறும். உற்றார், உறவினர்பகை மறையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். பொருளாதார நிலை உயரும். மதிப்பும், மரியாதையும் கூடும்.

நீண்ட நாட்களாக உடலில் இணைந்திருந்த நோய்கள், உட்கொண்ட மருந்தாலும் குணமாகாதிருக்கலாம். இனி சாதாரண மருத்துவத்திலேயே நோய்கள் சரியாகிவிடும். சக பணியாளர் களால் ஏற்பட்ட பிரச்சினை மாறும். கொடுத்த கடன் வசூலாகவில்லையே, வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டவர்கள் இப்பொழுது நிம்மதி காண்பர். வாங்கல் – கொடுக்கல்களில் இருந்த பிரச்சினை தீரும்.

பயணங்களால் பலன் கொடுக்கும் பனிரெண்டாமிடத்து கேது!

பனிரெண்டாமிடத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது விரயங்களைச் சுபவிரயமாக மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. மனைவி, மக்கள் வழியில் வேண்டிய ஆடை, ஆபரணங்களை வாங்கிக் கொடுக்கலாம். கட்டிடங்களைக் கட்டி வாடகைக்கு விடலாம்.

பிள்ளைகளின் கல்யாண முயற்சிக்கும் கைகொடுத்து உதவ முன் வருவீர்கள். பழைய வீட்டைப் புதுப்பித்து புதிய வீடாக்கும் பணி வெற்றி தரும். நாகரிகமான முறையில் வீடு கட்ட வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

உறவினர்களின் இல்லங்களில் நடைபெறும் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்வீர்கள். வெளிநாட்டுப் பயணம் விரும்பும் விதத்தில் அமையும். மனைவி, மக்கள் வழியில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மாறும். அரசியல் துறையில் ஈடுபட்டவர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர். மற்றவர்கள் உங்களை நம்பி ஒப்படைத்த முக்கியப் பொறுப்புகளை முடித்துக் கொடுத்து உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள்.

அடகு வைத்த நகைகள் அனைத்தையும் மீட்டுக் கொண்டு வந்து அலமாரியை அலங்கரித்து வைப்பீர்கள். அடிமனதில் இருந்த பயம் நீங்கும். வெளிநாட்டுத்தொடர்பும், எண்ணிய விதத்தில் அமையும்.

ராகு–கேதுக்கள் சுய பலம் அற்ற கிரகம் என்பதால் அவை இருக்கும் வீட்டிற்கு அதிபதியின் பலத்தைப் பொறுத்தும், யார் காலில் இருக்கின்றதோ, அவரின் ஆதிபத்யத்தைப் பொறுத்தும் பலன்களை வழங்குவார்.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!

ராகு பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாராட்டுக்களும், விருதுகளும் ஒருசிலருக்கு வந்து சேரும். இனத்தார் பகை மாறும். எதிரிகளைப் போல் உங்களைப் பார்த்தவர்கள் கூட இனிமேல் இனிமையாகப் பேசுவார்கள். பணிகளில் இருந்த தொய்வு அகலும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வருடக்கணக்கில் நடைபெற்ற வழக்கு இப்பொழுது உங்களுக்கு சாதகமாக அமையும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைத்து மகிழ்ச்சியடையப் போகிறீர்கள். உன்னத வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நேரமிது.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): இக்காலத்தில் எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் இழப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. ஊர் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் அடிக்கடி வரும். தங்கம், வெள்ளி ஆபரணங்களை அடகு வைத்து செலவிடும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படலாம். உடன் பிறப்புகளின் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத் தொல்லையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறுவதில் தாமதம் ஏற்படும்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): இக்காலத்தில் வீண் விரயங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் செலுத்துவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகவில்லையே என்று கவலைப்படுவீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும் என்று நம்பிச் செய்த முதலீட்டில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.

பாதசாரப்படி கேது தரும் பலன்கள்!

கேது பகவான் குரு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். ஆதாயம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார பற்றாக்குறை அகலும். இல்லத்தில் சுபகாரிய நிகழ்வுகள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். ஸ்தல யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகம், தொழிலில் உன்னத நிலை கிடைக்கும். வருமானம் பெருகுவதால் வாகனம் வாங்கும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

கேது பகவான் ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். நட்பு பகையாகலாம். உற்பத்தி செய்த பொருட்கள் தேங்கிக் கிடக்கிறதே என்று தொழில் அதிபர்கள் வருத்தப்படுவர். ஊர் மாற்றம், தொழில்மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். பணப்பொறுப்புகள் சொல்வதன் மூலம் பிரச்சினைகள் உருவாகலாம்.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): இக்காலம் ஒரு இனிய காலமாகும். சவாலான வேலைகளைக் கூட சாதாரணமாக முடித்துவிடுவீர்கள். பெரிய மனிதர் களின் தொடர்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். வீடு வாங்க வேண்டுமென்ற எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரம் வெற்றி நடைபோடும்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

ஆறில் சஞ்சரிக்கும் ராகு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கவும், 12–ல் சஞ்சரிக்கும் கேது பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வியாழன் தோறும் விரதமிருந்து தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்வதோடு, மேலும் 63 நாயன்மார்களில் உங்களுக்கு உகந்த நாயன்மாரின் நட்சத்திரத்தன்று விரதமிருந்து வழி பாடுகளை மேற்கொள்ளுங்கள். வருங்காலம் நன்றாக அமையும்.