iFLICKS தொடர்புக்கு: 8754422764
துலாம்

இன்றைய ராசி பலன்கள்

காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண் டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். 

வார பலன்கள்

ஜூன் 19-6-2017 முதல் 25-6-2017 வரை:-

பதினொன்றில் இருக்கும் ராகுவால் உங்களால் இப்போது எதையும் சாதித்துக் காட்ட முடியும். அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் சரியான நேரத்தில் நல்ல உதவிகளை செய்வார்கள். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களால் நன்மைகள் இருக்கும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாட்டு பயணங்களும், இட மாறுதல்களும் இருக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து சாதிப்பீர்கள். வெளிநாட்டில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி வரும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள். வாழ்க்கைத் துணைவர் மூலமும் இந்த வாரம் சந்தோ‌ஷமான நிகழ்ச்சிகள் இருக்கும் வாரமாக இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். மேல்அதிகாரியின் தொந்தரவு இருக்காது. நீண்ட நாட்களாக கேட்டு வந்த சம்பள உயர்வுக்கு முதலாளி இப்போது சம்மதிப்பார். பணவரவிற்கு குறையில்லை என்பதால் பற்றாக்குறை இருக்காது.

கடன் தொல்லைகளால் சிக்கல்களில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் கடனை தீர்ப்பதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். 21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 21ம்தேதி மாலை 6.48 மணி முதல் 23ம்தேதி மாலை 6.18 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் உச்சமாக குருபார்வையில் இருப்பதால் தொல்லைகள் எதுவும் இருக்காது. ஆயினும் மனம் ஒருநிலையில் இருக்காது என்பதால் புது முயற்சிகளைத் தவிர்க்கவும்.

'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி          செல்:8870998888

தமிழ் மாத ஜோதிடம்

15.6.17 முதல் 13.7.17 வரை

ஏழரைச் சனி முடியப் போவதால் விட்டுப் போயிருந்த சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் இனிமேல் உங்களை தேடிவந்து ஒட்டிக்கொள்ளும் நேரமிது. முயற்சி இல்லாமலேயே அதிர்ஷ்டத்தால் இனி எல்லா வேலைகளையும் சுலபமாக முடிப்பீர்கள். குறிப்பிட்ட சிலர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். ஆன்மிகத்துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத்தலங்களில் இருப்பவர்கள் உள்ளிட்ட சிலர் லாபங்களை அடைவீர்கள்.
 
சிலருக்கு மறைமுகமான வழியில் வெளியில் சொல்ல முடியாத வகையில் தனவரவுகளும் வருமானமும் இருக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட், சிகப்பு நிற பொருட்கள் சம்மந்தப்பட்டவர்கள், பில்டர்கள் போன்றோருக்கு “லம்ப்சமாக” ஒரு பெரிய தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதம் வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பண வரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும்.

ஆறாம் வீட்டு அதிபதி வலுவாக இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும். பெண்களுக்கு மிகவும் நல்ல மாதமாக இது அமையும். தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது செய்யவேண்டாம்.

'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி
செல்:8870998888

ஆண்டு பலன் - 2017

துலாம் ராசிக்காரர்களை கடந்த சில வருடங்களாக தொல்லைப் படுத்தி, வாட்டி வதைத்துக் கொண்டிருந்த ஏழரைச்சனி அமைப்பு 2017-ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 26 ம் தேதி விலக இருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே பிறக்க இருக்கும் புத்தாண்டினை நீங்கள் வரவேற்பீர்கள்.

கடந்த சில வருடங்களாக துலாம் ராசிக்காரர்கள் அனுபவித்த வேதனைகள் மிக அதிகம். தொழில்துறையில் சிக்கல்கள், வேலையில் பின்னடைவு, குடும்பத்தில் குழப்பம், கடன் தொல்லைகள், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்காதது, வாழ்க்கையில் இன்னும் செட்டிலாகாமல் இருப்பது போன்ற அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்துவிட்டீர்கள்.

துலாம் ராசி இளையபருவத்தினர் ஏழரைச் சனியினால் அடைந்த வேதனைகளுக்கு அளவே இல்லை. பிறந்த ஜாதகவலுவுள்ள மிகச்சிலர் மட்டும்தான் கஷ்டங்கள் இல்லாமல் இருந்தீர்கள். இந்த வருடத்துடன் உங்களின் அனைத்து பிரச்சினைகளும் விலகப் போகிறது என்பது உறுதி. எவ்வித கோட்சாரக் கிரகநிலைகள் உங்களுக்கு கைகொடுக்கா விட்டாலும் ஏழரைச்சனி விலகுகிறது என்பது இதுவரை உங்களுக்கு இருந்து வந்த எல்லா வித தடைகளையும் நீக்குகின்ற ஒரு அமைப்பு. சனி விலகியதும் வாழ்க்கை நல்லவிதமாக அமையும் என்பது ஜோதிடவிதி.

எனவே மற்ற ராகு,கேது மற்றும் குருப்பெயர்ச்சிகள் கை கொடுக்காவிட்டாலும் ஏழரைச்சனி முடியப் போவதால் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் துயரங்களில் இருந்து வெளியே வந்தே ஆக வேண்டும். அந்த வகையில் பிறக்க இருக்கும் புத்தாண்டான 2017-ம் ஆண்டு சந்தோஷங்களை மட்டுமே தருகின்ற வருடமாக இருக்கும்.

அதேநேரத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி நடக்க இருக்கின்ற ராகு-கேது பெயர்ச்சியும் ராகுபகவான் தற்போது இருக்கின்ற சாதகமான பதினொன்றாம் இடத்தை விடுத்து பத்தாம் வீட்டிற்குப் போவதைப் போலத் தோன்றினாலும் ராகுவிற்கு பிடித்த வீடான கடகராசிக்கு போவதால் சனிப்பெயர்ச்சி போலவே ராகு-கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மைகளையே தரும் என்பது உறுதி.

இன்னொரு முக்கிய பலனாக ஒரு ஜோதிடப் பொதுமேடையில் நான் எடுத்துரைத்ததைப் போல கடுமையான ஏழரைச்சனி நடக்கும்போது மற்ற கிரகப் பெயர்ச்சிகள் அதனுள் அடங்கி நன்மைகளைத் தராது. உதாரணமாக ஜென்மச் சனி நடக்கும்போது குரு சாதகமான வீட்டில் இருந்தாலும் பலன் தர மாட்டார். சனிக்கு அடங்கித்தான் குரு பலன் தருவார்.

ஏனெனில் சனி என்பது தண்டிக்கும் அதிகாரம் பெற்ற ஒரு கிரகம். அவர் தண்டனை தந்து கொண்டிருக்கும் போது குறுக்கே ஒருவர் புகுந்து ஜாமீனில் எடுப்பதோ விடுதலை வாங்கித் தருவதோ முடியாத காரியம். அதன்படி கடந்த முறை பதினொன்றில் அமர்ந்த ராகுவால் பெரிய நன்மைகள் எதுவும் துலாம் ராசிக்கு இல்லை. இனிமேல் அதுபோல இல்லாமல் தன் சுயபலனை ராகு தருவார்.

இன்னொரு முக்கிய நிகழ்வாக தற்போது பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து சிலருக்கு கடன் தொல்லைகளையும், ஆரோக்கியக் குறைவையும் கொடுத்துக் கொண்டிருக்கும் குருபகவானும் வரும் செப்டம்பர் மாதம் பனிரெண்டாம் தேதி மாறுகிறார் என்பதும் துலாம் ராசிக்கு நல்லபலன் தரும் அமைப்பு. இதன்மூலம் உங்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.

இந்தப் புது வருடம் நடுத்தர வயதினருக்கு மிகவும் மேன்மையான ஒரு காலமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த காலகட்டத்தில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளில் நல்ல பலன்கள் நடைபெறும்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீரும் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும்.
எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் அனைத்தும் நல்லபடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும்.

உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும். தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து உடனடியாக திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.

குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.

சொந்த வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும்.

கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.
புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட துறையினருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும் காலமாக இது இருக்கும். பிறந்தகால ஜாதக தசாபுக்தி அமைப்பு யோகமாக இருப்பவர்களுக்கு பருத்தி புடவையாய்க் காய்த்தது எனும் வகையில் இரட்டிப்பு நன்மைகள் இருக்கும்.

குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாக செய்ய முடியும். நீண்ட நாட்களாக தள்ளி போய் இருந்த குலதெய்வ தரிசனம் இப்போது பெற முடியும். இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரியும் சந்தர்ப்பம் வரும்.

ஞானிகள் மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.

தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.

பெண்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் என்பது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்ல படியாக உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.

எனவே எந்த நிலையில் பார்த்தாலும் பிறக்கப் போகும் புது ஆண்டு முதல் உங்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் என்பது உறுதி.

ஹே விளம்பி வருட பலன்

துலாம் ராசிக்காரர்களுக்கு சிறந்த நன்மைகளைத் தர இருக்கின்ற அமைப்பில் இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

ஒரு முக்கியமான பலனாக இந்த வருடத்துடன் துலாமிற்கு இதுவரை கடுமையான பலன்களைக் கொடுத்து உங்கள் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருந்த ஏழரைச்சனி அமைப்பு முடிய இருப்பதால் இனிமேல் துலாம் ராசிக்கு எவ்விதமான கெடுபலன்களும் சொல்வதற்கு இல்லை.

புது வருடத்தின் ஆரம்ப நாளிலேயே உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன் இருப்பதும், அவரை இன்னொரு சுபக்கிரகமான குருபகவான் பார்ப்பதும் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், மேன்மைகளையும் தரக்கூடிய அமைப்பு என்பதால் இந்த தமிழ் புதுவருடம் உங்கள் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றி அமைக்கக் கூடிய சம்பவங்கள் நடக்கும் வருடமாக இருக்கும்.

இதுவரை ஏழரைச்சனியின் தாக்கத்தினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள் இந்த வருடத்தில் இருந்து அவை நீங்கப் பெறுவீர்கள். புதிதாக தொழில், வியாபாரம் போன்றவைகளை ஆரம்பித்து லாபகரமாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து விடிவுகாலம் பிறந்து தொழில் நிலைமைகள் சீராகும்.

வேலை, தொழில் போன்ற விஷயங்களிலும், அலுவலகங்களிலும் நிம்மதியற்ற சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அனைத்தும் நல்லபடியாக மாறி பணிபுரியும் இடங்களில் ஒரு சந்தோஷமான சூழல் இருப்பதை உணர முடியும்.

எந்த ஒரு விஷயத்திலும் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, தன்னுடைய திறமைக்கு ஏற்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என்ற மனக்குறையில் இருந்தவர்கள் அவை நீங்கப்பெற்று ஒரு அதிர்ஷ்டமான காலத்தில் நுழைவீர்கள். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை விலகப் பெற்று தன்னம்பிக்கை கூடுதலாகும்.

மேம்போக்காகப் பார்க்கையில் புத்தாண்டின் ஆரம்பத்தில் ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கும் ராகுகேதுப் பெயர்ச்சி சாதகமற்ற அமைப்பைக் கொடுப்பது போலத் தோன்றினாலும் ராகுபகவான் தனக்கு மிகவும் பிடித்த வீடான கடகத்திற்கு மாறுவதால் உங்களுக்குக் கெடுதல்களைச் செய்ய மாட்டார்.

அதேநேரத்தில் இதன் பலனாக உங்களுக்கு தொழில் விஷயங்களில் அடிக்கடி தூர இடங்களுக்குப் பயணங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்பு இப்போது கிடைக்கும். இன்னும் சிலருக்கு வெளிமாநில வாய்ப்புகளும், வடக்கு நோக்கிய விஷயங்களும் இருக்கும்.

ராகுகேதுக்களை அடுத்து செப்டம்பர் மாதம் 12ம் நாள் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு நல்ல பலன்களை மட்டுமே தர இருக்கிறது. இதன் மூலம் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த வீண்செலவுகள் தடுக்கப்படும். விரயங்கள் நிற்கும். மருத்துவச் செலவுகளோ, கடன் தொல்லைகளோ இருக்காது.

குருப்பெயர்ச்சியின் மூலம் இளைய பருவத்தினர் சிலருக்கு இதுவரை அமையாத திருமணம், புத்திரபாக்கியம், நிரந்தர வேலை, தொழில் பாக்கியங்கள் கிடைக்கும். மிக உன்னத பலனாக சொல்லப்போனால் ஒரு பத்து வயது குறைந்தது போன்ற உடல்திறனையும், புத்துணர்ச்சியையும் இந்தப் புதுவருடம் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது.

குறிப்பாக முப்பது வயதுக்களில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லபடியாக அமைந்து இந்த வருடத்திலிருந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும். இனிமேல் பணத்தட்டுப்பாடு என்பது உங்களுக்கு இருக்காது.

திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.
முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.

பொதுவாக சொல்லப் போனால் இளையபருவத்தினருக்கு இந்த வருடத்தில் இருந்து வாழ்க்கையின் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் பெற்று நிம்மதியாக வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு கடந்த சில வருடங்களாக வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் மேன்மேலும் பெருகும்.

புதிதாக தொழில் தொடங்குவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும் என்பதால் உடனே தொழில் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் சரியின்றி இருந்தவர்களுக்கு இனி நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை விரிவு படுத்தவும், புதிய முயற்சிகள் எடுக்கவும் நல்லநேரம் இது. துணிந்து எதிலும் இறங்கி செயல்படுங்கள். ரிஸ்க் எடுத்தால்தான் வாழ்க்கையின் உயரத்திற்குச் செல்ல முடியும்.

குலதெய்வத்தின் அருள் பூரணமாக கிடைக்கும் வருடம் இது. நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்துவீர்கள். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்குவீர்கள்.. நகைகள் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி இன்னும் கட்டுவீர்கள்.

அரசு, தனியார்துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத்தரப்பு துலாம் ராசிக்காரர்களுக்கும் மிகவும் அதிர்ஷ்டத்தை தரப்போகும் வருடம் இது. எனவே இதை நன்கு பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள்.

கலைத்துறையினர், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். அதிர்ஷ்டம் இந்த வருடம் மிகவும்ன்றாக உங்களுக்கு கை கொடுக்கும். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் நிலைமை மாறி அனைத்தும் சாதகமாக நடப்பதை உணருவீர்கள்.

இதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உடல்நலத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும்.

வருமானம் மிகவும் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கூடுதல் சம்பளத்துடன் நிச்சயமாகக் கிடைக்கும்.

குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும் சேமிக்க முடியும். இதுவரை நகைகளை அடமானம் வைத்த நிலை மாறி அவற்றை மீட்பதோடு புதிதாக நகை வாங்கவும் முடியும். மூத்த சகோதரசகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

வருடம் பிறந்ததிலிருந்தே உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தாய்வழி உறவிலும் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும்.
மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய லாபம் அடைவீர்கள்.
பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை குடும்பத்தில் உள்ள ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றியைத் தரும். இனிமேல் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும்.

கடந்த காலங்களில் பெரும்பாலான துலாம் ராசிக்காரர்கள் மனக் கஷ்டங்களையும் வாழ்வில் தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இனிமேல் இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.

சுருக்கமாக சொன்னால் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்கள் எதையும் சாதிப்பீர்கள். உங்களைச் சுற்றி வெற்றி கொடியினை மட்டும் பறக்க விடுவீர்கள்.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை ஜென்மச்சனியாக ராசியிலேயே அமர்ந்திருந்த சனிபகவான் இப்போது இரண்டாம் இடத்திற்கு மாறி பாதச்சனியாக ஏழரைச்சனியின் கடைசி அமைப்பிற்கு வருகிறார். கடந்த சிலகாலமாக ஏழரைச்சனியில் அவதிப்பட்டுக் கொண் டிருந்த உங்களுக்கு இந்த இறுதிக்கட்ட மாறுதலில் சனிபகவான் எவ்வித தொல்லைகளையும் தரமாட்டார் என்பதும் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்த நன்மைகளையும் தரும் என்பது உறுதி.

ஆனாலும் ஏழரைச்சனி முழுவதுமாக முடியாமல் இறுதிப் பகுதியில் இருப்பதால் எதிலும் அவரப்படாமல் பொறுமை காத்து புது முயற்சிகள் எதையும் இப்போது செய்யாமலும் மிகப்பெரிய முடிவுகள் எதுவும் எடுக்காமலும் புதிதாக எதையும் தொடங்காமலும் காத்திருப்பது நல்லது. பொதுவாக துலாம்ராசிக்கு சனிபகவான் ராஜயோகாதிபதி என்பதால் மிகப்பெரிய கெடுபலன்கள் எதையும் உறுதியாக தரமாட்டார்.

அதே நேரத்தில் ஏழரைச்சனி என்பது அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு நீங்கள் சுகமாக வாழத் தேவையான அனுபவங்களைத் தரும் அமைப்பு என்பதாலும் அது உங்களுக்கு தேவை என்பதாலும் சனிபகவான் சில எதிர்மறை அனுபவங்களை உங்களுக்கு தந்தே தீருவார். இளைய பருவத்தினருக்கு இதுவரை வேலை விஷயங்களில் இருந்து வந்த இடையூறுகள் இப்போது நீங்கும். இதுவரை மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் தெளிவாக ஆரம்பிக்கும்.

எந்த பாதையில் செல்வது என தீர்மானிக்க முடியாமல் இருந்தவர்கள் இப்போது தெளிவாகி பாதையை தேர்ந்தெடுப்பீர்கள். உயிர் நண்பன் என்று சொல்லிக் கொண்டவர்களையும், உறவினர்களையும் சனி ஏற்கனவே புரியவும், பிரியவும் வைத்து விட்டபடியால் இனிமேல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாகவே வைப்பீர்கள் என்பதால் இனிமேல் துலாம் ராசிக்கு துயரங்கள் என்பதே இல்லை. நடுத்தரவயதில் உள்ளவர்களுக்கு இனிமேல் வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. இதுவரை இருந்து வந்த கஷ்டங்களும், நஷ்டங்களும் இனிமேல் தொடராது.

சனிபகவான் இப்போது உங்களைச் சற்று இளைப்பாற வைத்து மூச்சுவாங்க வைப்பார் என்பதால் இனிமேல் நிம்மதியாக இருக்கலாம். அதேநேரத்தில் ஏழரைச்சனி இன்னும் முடியவில்லை என்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். முதலீடு செய்து தொழில் செய்ய வேண்டாம். தொழில் விரிவாக்கங்களும் கூடாது. அடுத்தவர்களையோ, வேலைக்காரர்களையோ, பங்குதாரர்களையோ முழுக்க நம்ப வேண்டாம்.

அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை. அடுத்த வருட பிற்பகுதியில் இருந்து துலாம் ராசிக்கு நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடக்கும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு இந்த இப்போது திருமணம் நடைபெறும்.

நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கும். தாத்தா பாட்டிகள் வீட்டில் பேரக்குழந்தையின் மழலைச்சத்தத்தை கேட்கப் போகும் நேரம் வந்துவிட்டது.

குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடு, கணவன் மனைவி பிரிவினை, பங்குதாரர்களுடன் தகராறு, சொத்துப்பிரச்சனை, ஆரோக்கியக்குறைவு போன்ற எதிர்மறையான பலன்கள் அனைத் தும் இனிமேல் மாறி உங்களுக்கு சாதகமான விஷயங்கள் இனி நடக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்த வருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம்.

வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். கருப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இம்முறை நல்ல மேன்மையான பலன்கள் இருக்கும். அதுபோல ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும். செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும்.

காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இப்போது பதவி உயர்வு கண்டிப்பாக உண்டு. சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும். பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம்.

தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

பிரிந்து வாழும் தம்பதியர் சேரக்கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். வேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இந்தக் சனிப்பெயர்ச்சியால் ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வாரஇறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும்.

வாழ்க்கைத்துணை நலம் இனிமேல் சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்தவும் செய்வீர்கள். குறிப்பிட்ட சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத்துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும்.

காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். ஏழரைச் சனியின் காரணாமாக பெரிய பிரச்சனையாகி போலீஸ் கோர்ட் என்று போராடி விவாகரத்து ஆனவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை ஆரம்பமாவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்சனை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.

சொல்லிக்கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நன்மைகளைத் தரும். மேற்கண்ட துறைகளில் இருப்போரின் வாழ்க்கை லட்சியங்கள் இப்போது நிறைவேறும். ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.

ராகு பகவான் உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் நண்பர் புதனின் வீடான கன்னியில் ஸ்தானபலம் பெறுவதால் வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும்.

பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் இதைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.

குருப்பெயர்ச்சி பலன்கள்

(சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3ம் பாதங்கள் மற்றும் ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, தி, து, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) :

துலாம்ராசிக்கு ஏழரைச்சனியின் இறுதிப்பகுதியான பாதச்சனி நடந்து கொண்டிருக்கிறது. ஜென்மச்சனி நடந்தபோது கடுமையான பிரச்சினைகளையும், பொருளாதார குறைகளையும் சந்தித்து வந்த பெரும்பாலான துலாம் ராசிக்காரர்கள் ஓரளவிற்கு தற்போது பிரச்சினைகள் விலகி சற்று மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆயினும் இன்னும் சிலருக்கு ஏழரைச்சனியின் பாதிப்புகள் முழுவதுமாக விலகவில்லை. தற்போது நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் குருபகவான் மிகவும் நல்ல இடமாக நமது மூலநூல்களில் சொல்லப்படும் பதினொன்றாம் இடத்தில் இருந்து மாறி வீண் செலவுகள், விரையங்களை குறிக்கும். பனிரெண்டாமிடத்திற்கு மாறுகிறார்.

பொதுவாக பனிரெண்டாமிடத்து குரு நல்லநிலையாக நமது கிரந்தங்களில் சொல்லப்படவில்லை. ஆயினும் இதுவரை ஏழரைச்சனியினால் எந்தவித நன்மைகளையும் பெறாத துலாம் ராசிக்காரர்கள் தற்போது நடக்கும் குருப்பெயர்ச்சியில் செலவு செய்யவேண்டும் என்பதால் இதுவரை தடைப்பட்டிருந்த திருமணம், வீடு கட்டுதல் போன்ற சுபச்செலவுகளை மட்டுமே சந்தித்து வாழ்க்கை அமைப்புகளில் நிலைகொள்வீர்கள்.

சனியைத் தவிர பெரும்பாலான ராஜகிரகங்கள் என்று சொல்லப்படும் முக்கியமான கிரகங்கள் தற்போது சாதகமான நிலையில் இருப்பதால் துலாம் ராசியினர் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

அடுத்து சுபக்கிரகங்கள் விரயஸ்தானம் எனப்படும் பனிரெண்டாமிடத்தில் இருந்தால் சுபச்செலவுகள்தான் ஒருவருக்கு இருக்கும் என்பதாலும் செலவு செய்துதான் மனநிறைவை அனுபவிக்க முடியும் என்பதாலும் செலவு செய்தால்தான் ஒரு பொருளை வாங்க முடியும் என்பதாலும் குருவின் பனிரெண்டாமிடப் பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளையே செய்யும்.

செலவு செய்யப் போகிறீர்கள் என்றால் வருமானம் வரப்போகிறது என்று அர்த்தம். வரவு வந்தால்தானே தொடர்ந்து செலவு செய்ய முடியும். கடன் வாங்கி எந்தனை நாள் செலவு செய்ய முடியும். எனவே இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கு சுபச்செலவு செய்யப் போதுமான வருமானங்கள் இருக்கும்.

ஆகவே இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் துலாம் ராசிக்காரர்களின் குடும்பங்களில் திருமணம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல், பெண்களுக்கான பூப்புனித நீராட்டு விழா போன்ற மங்கள விழாக்கள் மற்றும் குடும்பத்தில் ஒரு புது ஜீவன் வருவதற்கான பிரசவச்செலவுகள் போன்ற சுபகாரியச் செலவுகள் இந்த வருடம் இருக்கும்.

அடுத்து குருபகவான் பார்க்கும் இடங்கள் வலுப்பெற்று பலன்களைச் செய்யும் என்பதால் குருபகவானின் பார்வையால் நான்கு, ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுப்பெற்று அந்த பாவங்களுக்குரிய விளைவுகளைச் செய்யும் என்பதன்படி நான்காமிட குருவின் பார்வையால் வீடு, வாகனம், தாயார், தன் சுகம், கல்வி ஆகிய விஷயங்களில் உங்களுக்கு மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கும்.

இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.
அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.

குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் ஆறாம் பாவம் வலுப்பெறும் என்பதால் மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன்யோசனை இல்லாத அவரசக் குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் எப்போதும் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

வம்பு வழக்கு வரும் நேரம் இது. தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள்.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள் வெளிநாட்டோடு வியாபாரத்தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு உடனே விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம்.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.

வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.

பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்தக் குருப்பெயர்ச்சியால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது.
கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தொழிலில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

வேலைக்காரர்கள் உள்ளிட்ட எவரையும் நம்ப வேண்டாம். தொழில் ரீதியான பயணங்கள் இனிமேல் அடிக்கடி இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.
பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம்.

குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் துலாம் ராசிக்காரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

சேக்கிழார் பெருமான் ஆயிரம் வருடங்களுக்கு முன் நிறுவிய வட ஆலங்குடி எனப்படும் போரூர் ஈஸ்வரன் கோவிலுக்கோ அல்லது குறுமுனி அகத்தியர் வந்து வழிபட்ட குருஸ்தலமான பாடி எனப்படும் திருவலிதாயம் ஈஸ்வரன் கோவிலுக்கோ சென்று வழிபடுவது நல்லது. வெளிமாவட்டத்தவர்கள் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள ஸ்ரீ தட்ஷிணாமூர்த்திப் பெருமானை ஆராதியுங்கள்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

இன்பங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறும் துலாம் ராசி நேயர்களே!

நவக்கிரகங்களில் ‘கலைஞன்’ என்று போற்றப்படும் சுக்ரன் உங்கள் ராசிநாதனாக இருப்பதால் கலை நுணுக்கங்களைக் கற்றறிந்தவர்களாக இருப்பீர்கள். கற்பனை சக்தி மிகுந்தவர்களாகவும் விளங்குவீர்கள். உங்களின் வசீகரத் தோற்றத்திற்கும், வார்த்தை ஜாலத்திற்கும் மயங்காதவர்கள் இல்லை. உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் கூட உங்களுடன் நட்பு வைத்துக் கொள்ளப் பிரியப்படுவர்.

சில முக்கிய விஷயங்களை மனதில் பதித்து வைத்திருப்பதால் சில நேரங்களில் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். மற்றவர்கள் நல்ல வாய்ப்புகளைத் தேடிச் செல்வர். ஆனால் நல்ல வாய்ப்பு கள் உங்களைத் தேடிவரும். மனதளவில் யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டீர்கள். கற்பனையை விற்பனையாக்குவதன் மூலம் கலைத்துறையில் பிரகாசிக்கும் உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படிப்பட்ட மாற்றங்களையும், ஏற்றங்களையும் கொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.

லாபத்தை தரும் பதினோறாமிடத்து ராகு!
வாரிசுகளை வளர்ச்சியடைய வைக்கும் ஐந்தாமிடத்து கேது!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிசெய்யப் போகிறார்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களுக்கு லாபத்தை அள்ளி வழங்கப் போகின்றார். எனவே இனி உங்களுக்கு சோகங்கள் மாறி சுகங்கள் கூடும். தேக நிலையிலும் தெளிவு பிறக்கும். உற்சாகத்தோடு பணியாற்றி ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக அமைய வழிவகுத்துக் கொள்வீர்கள். கடன் பிரச்சினையும், காண்பவர்களால் பிரச்சினையும், உடனிருப்பவர்களால் உபத்திரவமும், மறைமுக எதிர்ப்புகளும் உங்களை சூழ்ந்திருந்த நிலை மாறி மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடும்.

தொழிலை எப்படி விரிவுபடுத்துவது? என்று நினைத்திருந்த உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட முட்டுக் கட்டைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, உதிரி வருமானங்கள் போன்றவைகள் பெருகும். அதிகாரிகளால் ஏற்பட்ட அல்லல் அகலும்.

இதுவரை எண்ணற்ற வாய்ப்புகள் வந்தும் பயன்படுத்திக் கொள்ள இயல வில்லையே என்று ஏங்கியவர்கள் இப்பொழுது மகிழ்ச்சியடையும் விதத்தில் தாமதங்கள் அகலும். தடைகள் விலகும். பூமிப்பிரச்சினைகள் முதல் பிள்ளைகளின் பிரச்சினை வரை அத்தனையும் நீங்கி எதிர்பார்த்த நற்பலனைக் கொடுக்கும்.

சேமிப்பு உயரவும், சிறப்பான வாழ்க்கை அமையவும், உங்கள் சுய ஜாதகத்தில் ராகு–கேதுக்கள் இருக் கும் நிலையறிந்தும், பார்க்கும் கிரகத்தின் பலமறிந்தும், யோகபலம் பெற்ற நாளில் அதற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு முறைப்படி சர்ப்ப சாந்திகளைச் செய்துவந்தால் வளர்ச்சி மீது வளர்ச்சி கூடும்.

அனுபவங்களைக் கற்றுத் தரும் ஐந்தாமிடத்து கேது!

ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது வாரிசுகளால் நன்மைகளை உருவாக்கும். குழந்தைச் செல்வங்களின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களின் ருது சடங்குகள் முதல் கல்யாணக் கனவுகள் வரை அனைத்தும் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் சொல்கேட்டு நடக்க முன்வருவர். மண், பூமி வாங்க நினைத்தவர்கள் அவற்றை வாங்கி மகிழும் சூழ்நிலை உருவாகும். இந்த ராகு–கேது பெயர்ச்சியால் நன்மைகளையே நாளும் சந்திப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கூடும். கடன் சுமை படிப்படியாகக் குறையும். கலைத்துறை மற்றும் பத்திரிகை துறையைச் சார்ந்தவர்கள் வரலாறு காணாத அளவிற்கு வளர்ச்சி காண்பர். இலைபோட்டு உபசரிப்பதில் தேர்ச்சி பெற்ற நீங்கள் உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

பொதுவாகவே 5–ல் கேது சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். பிள்ளைகள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்களா? என்பது சந்தேகம் தான். எனவே முழுமையாக அவர்கள் மீது அன்பு செலுத்தி, அரவணைத்துச் செல்வதோடு, தக்க சமயத்தில் கண்காணித்துக் கொள்வதும் நன்மையைத் தரும்.

ஆன்மிக காரியங்களுக்கு அள்ளிக் கொடுப்பதன் மூலமும், அன்றாடம் சான்றோர்களின் ஆசியைப் பெறுவதன் மூலமும் மனநிம்மதியை அடையலாம். பெரிய முதலீடுகள் செய்யும் பொழுது உங்களுக்கு கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. மனச்சோர்வு மட்டும் இருக்கக்கூடாது. இதுவரை ஒத்துவராத சகோதரர்கள் இனி ஒத்து வருவர். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். பாசத்தைப் பொழிபவர்களைப் போல நடித்து மோசம் செய்தவர்கள் எல்லாம் இனி நேச மனதோடு நெருங்கி வந்து உறுதுணையாக இருப்பர். ஆசைப்படியே வீடு கட்டிக் குடியேறுவீர்கள். அடுத்தவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சிக்கும் ஆதாயம் கிடைக்கும்.

ஈசனை வணங்கி நீங்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி காண்பீர்கள். விக்னேஷ்வரரையும், சர்வேஸ்வரனையும் விடாது வழிபட்டு வாருங்கள். தக்கபலன் கிடைக்க கேது பிரீதியும் செய்து கொள்வது நல்லது. கிரக தானியத்தையும், கிரக வஸ்திரங்களையும் வழங்கி சாந்திப் பரிகாரங்களைச் செய்தால் கேது நல்ல பலன்களைக் கொடுப்பார். சோதனை காலம் முடிந்து சொந்தங்களும், சுற்றங்களும் உங்களை வாழ்த்தப் போகின்றனர்.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!

ராகு பகவான் சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): வசதி வாய்ப்புகள் பெருகும். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய தொழில் தொடங்க அரசுவழி ஒத்துழைப்பும், அருகில் இருப்பவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் மிச்சம் வைக்கமுடியவில்லையே என்று நினைப்பவர்கள், வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இக்காலத்தில் அந்நிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரப்போகின்றது. வருமானம் திருப்தி தரும்.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): அரைகுறையாக நின்ற பணிகள் விரைவில் முடிவடையும். ஆச்சரியப்படத்தக்க விதத்தில் சில சம்பவங்கள் நடைபெறும். தங்க நகைகள் வாங்கிச் சேர்க்க முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது மகிழ்ச்சி அடைவர். தங்கம், வெள்ளி தானாக வந்து சேரும் விதத்தில் வாங்குவதற்குரிய சூழ்நிலை எளிதில் வந்து சேரும். புதிதாகக் கட்டும் வீட்டைப் பிறர் அதிசயித்துப் பார்க்கும் விதம் நாகரிகமாகக் கட்ட வேண்டும் என்று விரும்புவீர்கள். பெண் வழிப்பிரச்சினைகள் அகலும். சொந்த, பந்தங்களின் ஒத்துழைப்போடு வாழ்க்கைப் பாதையை சீர் செய்து கொள்வீர்கள்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வந்த துயர் விலக வழிபாடுகளையும் மேற்கொள்ளுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் தடைபடலாம். வீண் பழிகளுக்கு ஒரு சிலர் ஆளாகவும் நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாகும் விதத்தில் நடந்து கொள்வது நல்லது.

பாதசாரப்படி கேது தரும் பலன்கள்!

கேது, குரு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): சகோதரத் தொல்லை அதிகரிக்கும். மனோபலத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. தன்னம்பிக்கையின் மூலமே எதையும் சாதிக்க இயலும். வழக்குகளில் மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகம் சம்பந்தமாக சிலருக்கு நீண்ட தூரத்திற்கு மாறுதல் கிடைக்கும். வேற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு உங்கள் முயற்சிகளில் வெற்றியை வரவழைத்துக் கொள்வீர்கள். உறவினர்களை அனுசரித்துக் கொள்ள வேண்டிய நேரமிது.

கேது பகவான், ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். கடமை தவறாமல் இருந்தாலும் வீண்பழிகள் அதிகரிக்கும். பிறருக்கு பணப்பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் உருவாகலாம். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். தற்போதுள்ள தொழில் மந்தமாக இருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். சேமிப்பு கரைகிறதே என்ற சிந்தனை அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பும் சூழ்நிலை ஒருசிலருக்கு உருவாகலாம்.

கேது, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): தனலாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் நல்ல நிலை உருவாகும். வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.

கல்யாணக் கனவுகள் நனவாகும். தூரதேசத்தில் இருந்து வரும் தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பங்குதாரர்கள் தகுந்த ஒத்துழைப்பு கொடுப்பர். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேர்ந்து உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடுவர். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் நேரமிது.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

லாப ஸ்தான ராகுவால் வருமானம் திருப்தியாக இருக்கவும், பஞ்சம ஸ்தான கேதுவால் பிள்ளைகள் வழியில் நல்ல காரியங்கள் நடைபெறவும், வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வதோடு, ஆதிரையன்று விரதமிருந்து நடராஜப் பெருமானை வழிபட்டால் நலங்கள் யாவும் வீடு வந்து சேரும்.