iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • பெசன்ட்நகர் மின் மயானத்தில் சோ உடலுக்கு இறுதிச்சடங்கு
  • 46 பயணிகளுடன் சென்ற பாகிஸ்தான் விமானத்தைக் காணவில்லை
  • தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு சித்தராமைய்யா வாழ்த்து

பெசன்ட்நகர் மின் மயானத்தில் சோ உடலுக்கு இறுதிச்சடங்கு | 46 பயணிகளுடன் சென்ற பாகிஸ்தான் விமானத்தைக் காணவில்லை | தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு சித்தராமைய்யா வாழ்த்து

கடகம்

இன்றைய ராசி பலன்கள்

யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். சில பிரச்சினைகளைக் கண்டும், காணாமலும் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையக்கூடிய அளவிற்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்.

வார பலன்கள்

டிசம்பர் 05-12-2016 முதல் 11-12-2016 வரை:-

வார ஆரம்பமே ராஜயோகாதிபதி செவ்வாய் சந்திரனுடன் இணைந்து ராசியை பார்க்கின்ற அமைப்பில் இருப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு சகோதர வி‌ஷயத்திலும், சிகப்பு நிறம் சம்பந்தபட்டவைகளிலும் நன்மைகள் நடக்கும் வாரம் இது. குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கை வி‌ஷயங்களிலோ, பண பரிவர்த்தனை எனும் செக்ரிட்டர்ன் வழக்குகளிலோ சிக்கி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான வி‌ஷயங்கள் நடக்கின்ற வாரமாக இது இருக்கும்.

வார ஆரம்பத்தில் தாய்வழி உறவில் முட்டல்களும் மோதல்களும் இருக்கும். தாயுடன் பிறந்தவர்கள் புரிந்து கொள்ளாமல் உங்களைப் பற்றி குறை சொல்வதோடு உங்களை மனக்கஷ்டத்திற்கும் ஆளாக்குவார்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். வார பிற்பகுதியில் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். 5ம் தேதி இரவு 11 மணி முதல் 8ம் தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை இந்த நாட்களில் தவிர்க்கவும். உங்களின் மனம் இப்போது ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் மேற்கண்ட நாட்களில் எடுக்காமல் இருப்பது நல்லது.

தமிழ் மாத ஜோதிடம்

நவம்பர் 16-ம்தேதி முதல் டிசம்பர் 15-ம்தேதி வரை

ராசியின் யோகர்கள் குருவும், செவ்வாயும் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தையும், ஒன்பதாமிடமான பாக்கியஸ்தானத்தையும் பார்ப்பதும் மிகவும் நல்ல அமைப்பு என்பதால் இந்த மாதம் கடகத்திற்கு நல்ல பலன்களை தரும் மாதமாக இருக்கும். கார்த்திகை முழுவதும் சுபநிகழ்ச்சிகளும், தூரஇடங்களில் இருந்து நல்லசெய்திகளும், பணவரவும் உள்ள மாதமாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் தொழில்துறையில் சாதனை படைப்பீர்கள்.

யோகக்கிரகங்கள் பலம் பெற்ற நிலையில் இருப்பதால் சிலருக்கு பொருள் சேர்க்கை இருக்கும். எதிலும் லாபம் வரும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் நினைத்தது போலவே நடக்கும். செவ்வாய் ராசியை வலுப்பெற்றுப் பார்ப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். நண்பர்களே உங்களின் கோபம் பிடிக்காமல் விலகிப் போக வாய்ப்பு இருக்கிறது.

கடக ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நிறைய மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் நடக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குறிப்பிட்ட சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை.

ஆண்டு பலன்

கடகராசிக்காரர் களுக்கு 2016ம் வருடத் தின் முதல்பகுதி மிகவும் நல்ல பலன் களையும் பிற்பகுதி மத்திம பலன்களையும் செய்யும். அதே நேரத்தில் கெடுபலன்கள் எதுவும் இந்தவருடம் நடக்க வாய்ப்பில்லை. வருடத்தின் ஆரம் பநாளிலும் வரு டம் முழுமையும் உங்க ளுக் கான கிரகநிலைமைக ளில் கெட்ட அமைப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் 2016 ஆம் வருடத்தை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள். அதேநேரம் குறிப்பிட்ட சிலருக்கு சிறிய வாழ்க்கை மாற்றங்களும் மிகச் சிலருக்கு அனைத்து அமைப்புகளிலும் தலைகீழ் மாற்றங்கள் உள்ள வருடமாகவும் இது இருக்கும்.

வருடத்தின் ஆரம்பத்தில் குடும்பபாவமான இரண்டாம் வீட்டில் குருபகவான் இருப்பதால் இளம்பருவத்தினருக்கு வருடம் முற்பகுதியில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் இருக்கும். இன்னும் சிலர் வருட ஆரம்பத்திலேயே எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்தித்து ஆகஸ்ட் மாதத்திற்குள் அவரை வாழ்க்கையில் இணைத்துக் கொள்வீர்கள். மேலும் இந்தவருடம் அனைத்து கடகராசியினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத்தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும் என்பது உறுதி.

மேலும் ஒரு சிறப்புபலனாக உங்களின் ராஜயோ காதிபதியான குருபகவானுடன் மறைமுகமான வகைகளில் பணத்தையும், லாபங்களையும் அள்ளி தரும் ராகு பகவான் முதல் ஆறுமாதங்கள் இணைவதால் குறிப்பிட்ட சிலருக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியே சொல்லமுடியாத அளவிற்கு மறைமுகமான வகைகளில் இந்தவருடம் பணலாபம் இருக்கும். வருடம் முழுவதும் இரண்டாம் பாவம் சுபத் துவ நிலைகளில் இருப்பதால் உங்களுடைய வாக்குறுதிகளை இந்தவருடம் உங்களால் காப்பாற்ற இயலும்.

குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்தமுடியும். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக்கொடுத்து இருந்தால் அதையும் பழுதின்றி நிறைவேற்றுவீர்கள். நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத் தவர்களாக பிறந்த வர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நல்ல செய்திகள் இருக்கும்.

குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடகராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங் கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கணவன் மனைவி உறவில் இது வரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும்.

வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணை யான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும். கடகராசி பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல் லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்பு கள் வரக்கூடிய காலகட்டம் இது.

அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள் தொழில்அதிபர்கள் வியாபாரிகள் ஆகியவர்களுக்கு தங்கள் தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங் கள் இருக்கும். சில தொழில்முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும்பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது.

விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம். விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது. பூர்வீக சொத்து விஷயத்தில் பாகப்பிரிவினை செய்வதற்கு இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில் அனைத்தும் நல்ல படியாக நடைபெறும். இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். வேலையில் இருப்பவர்களுக்கு தள்ளிப் போயிருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவை தாமதமின்றி கிடைக்கும். எல்லாவகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். ஆறாமிடத்தை குருபகவான் வலுப்பெற்றுப் பார்ப்பதால் தேவையற்ற விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று தேவையற்ற விரோதங்களை சம்பாதித்து கொள்வீர்கள் எனபதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப் பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவார்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

ஆனாலும் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனால் வீண் செலவு செய்வதை தவிருங்கள். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழாமிடத்தை சனி இருப்பதால் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமை கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எதிலும் அவசரப்பட வேண்டாம். யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

துன்முகி வருடம்

(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் மற்றும் ஹி, ஹீ, ஹ, ட, டு, டே, டோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

கடகராசிக்காரர்களுக்கு வர இருக்கின்ற தமிழ்ப்புத்தாண்டான துன்முகி வருடம் துயரங்கள் எதையும் தரப்போவது இல்லை. அதே நேரத்தில் இந்தப் புத்தாண்டு பலன்களை இரண்டு பிரிவுகளாக கடகராசிக்கு சொல்லலாம்.

துன்முகி ஆண்டில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி கடகத்திற்கு சுமாரான பலன்களையே தரும் என்பதாலும் மற்ற வருட கிரகங்களின் அமைப்பும் சுமாராகவே உள்ளதாலும் புத்தாண்டின் முதல்பகுதி நற்பலன்களை கொண்டதாகவும், பின்பகுதி சுமாரான பலன்களை கொண்டதாகவும் இருக்கும்.

இந்தப் புதுவருடத்தில் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும்.

அரசுத்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம் உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.
வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும்.

புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் சனி செவ்வாய் இணைந்து நீடித்திருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் கடகராசிக்காரர்கள் குழந்தைகளின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப் பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். நீங்கள் பிறந்த போது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும்போதே கர்ணனின் கவசகுண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உடல்நலத்தில் அதிக கவனமுடன் இருப்பது நல்லது. சிறிய விஷயமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அனைத்து மருத்துவ பரிசோதனையும் செய்து குணமாக்கிக் கொள்ளுங்கள். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் அடிக்கடி நோய் கட்டுக்குள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்பட வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள்.
ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடுகட்டும்.

வம்பு வழக்கு வரும் நேரம் இது. தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அடுத்த வருட ஆரம்பத்தில் அதனால் சிக்கல்கள் வரக்கூடும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது, பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.

வருடத்தின் பிற்பகுதியில் சிலர் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

 

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கடகராசிக்கு இது வரை நான்கா மிடத்தில் இருந்து ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தைப் பார்த்து உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் தொல்லைகளையும், சிக்கல்களையும், தடைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த சனிபகவான் தற்போது ஐந்தாம் இடத்திற்கு மாறுகிறார். ஒரு வகையில் கடகராசிக்கு தொழில் விஷயங்களில் இது நிம்மதியைத் தரும் ஒரு பெயர்ச்சிதான் என்பதால் சனியால் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த நிம்மதிக்குறைவு அகலும்.

இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக நல்லவேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அனைத்தும் ஓய்ந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். சனியின் பத்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தில் இருந்து விலகுவதால் தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் சூடுபிடித்து நாளுக்கு நாள் விருத்தி அடையும். இதுவரை இருந்து வந்த விரையங்கள் இனிமேல் இருக்காது.

சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடியும். எதிரிகள் ஒழிவார்கள். போட்டிகள் விலகும். கடந்த காலத்தில் உச்சமாக இருந்த சனியின் பார்வை ராசியில் இருந்தும் விலகுவதால் இதுவரை தாழ்வு மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப் பெறுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் இனிக் குறைந்து நல்லவைகளை சிந்திக்கவும், செயல்படுத்தவும் ஆரம்பிப்பீர்கள். இதுவரை இருந்து வந்த மனஅழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி வரும். எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை பிறக்கும் சம்பவங்கள் நடக்கும்.

அதற்கு உறுதுணையாக இருக்கக் கூடிய ஆட்களைச் சந்திப்பீர்கள். மொத்தத்தில் அர்த்தாஷ்டமச் சனி என்ற பெயரில் கடந்த மூன்று வருடங்களாக உங்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்த சனிபகவான் விலகுவதால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற்று எதிர்காலத்தை உங்களுடையதாக்கி கொள்வீர்கள். அதே நேரத்தில் சனிபகவான் ஐந்தாமிடத்திற்கு மாறுவது சாதகமான நிலை இல்லை என்பதால் இந்த பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் குடும்பத்தில் மகன், மகளுக்கு ஆகவேண்டிய திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடைகளை ஏற்படுத்துவார்.

பிள்ளைகள் விஷயத்தில் மனக்குறைகளையும், சங்கடங்களையும் ஏற்படுத்துவார் என்பதால் பருவவயதுக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் மேல் அக்கறை காட்டி அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதும், தெரிந்து கொள்வார்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.

இதுவரை உடல்நிலை சரி இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தள்ளிப் போயிருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கூடி வரும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்சனை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும். உங்களைப் பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள். சிலருக்கு காதல் அனுபவங்கள் இந்த வருடம் ஏற்படலாம்.

அதனால் சில கசப்பான அனுபவங்களும் படிப்பினைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவது போன்ற முறைகேடான வழிகளில் செல்லும்போது உஷாராக இருங்கள். வேலை வாங்கித் தருவதாக சொல்பவரிடம் முன்கூட்டியே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும்.

மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். இது வரை சனிபகவான் வீடு வாகனம் தாயார் ஆகியற்றை குறிக்கும் நான்காம் வீட்டில் இருந்ததால் மேற்கண்ட விஷயங்களில் இருந்த தடைகள் அனைத்தும் இப்போது விலகுகிறது.

சொந்த வீடு இல்லாதவர்கள் வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. பெருநகரங்களில் இருப்பவர்கள் அருமையான ஒரு பிளாட் வாங்குவீர்கள். வாகனமாற்றம் உண்டு. இதுவரை வாங்க முடியாத நீங்கள் விரும்பிய வாகனம் இப்போது வாங்க முடியும். தாயாருக்கு இருந்துவந்த உடல்நலக்குறைவு சரியாகும். அம்மாவைப் பற்றிக் கவலைப்பட அவசியம் இருக்காது.

குருப்பெயர்ச்சி பலன்கள்

(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் மற்றும் ஹி, ஹீ, ஹ, ட, டு, டே, டோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

கடகராசிக்கு கடந்த ஒருவருடமாக நல்லபலன்களைத் தரும் இடமாகச் சொல்லப்பட்ட இரண்டாம் வீட்டில் இருந்து தற்போது சாதகமற்ற பலன்களை தரும் இடமாகச் சொல்லப்படும் மூன்றாம் வீட்டிற்கு குருபகவான் மாறுகிறார். அதேநேரத்தில் சென்ற வருடம் சிறப்பாகச் சொல்லப்பட்ட இரண்டாம் வீட்டில் உள்ள குருவால் கடகராசிக்காரர்களுக்கு திருமணம், வேலை போன்ற நல்ல அமைப்புகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் சென்ற குருப்பெயர்ச்சி காலத்தின் பெரும்பகுதி குருபகவான் ராகுவுடன் இணைந்தும் வேறுவகையிலும் பலவீனமாக இருந்ததால் சென்ற வருடம் நற்பலன்கள் எதுவும் பெரும்பாலான கடகராசிக்கு நடக்கவில்லை.

இதுபோன்ற நல்லபலன்கள் நடக்காத கடகராசிக்காரர்களுக்கு தற்போது ராகுவின் பிடியில் இருந்து விலகி மூன்றாம் வீட்டில் அமரப் போகும் குருபகவான் பாக்கியாதிபதி பாக்கியத்தைப் பார்ப்பதால் நன்மை எனும் அடிப்படையில் வேலை, திருமணபாக்கியம், புத்திரபாக்கியம் போன்ற நல்லபலன்களை இந்த குருப் பெயர்ச்சியில் செய்வார்.

குருபகவான் இருக்கும் வீட்டை விட தான் பார்க்கும் வீட்டிற்கு நன்மைகளை அதிகம் செய்வார் என்ற விதிப்படி இந்தப் பெயர்ச்சியின் மூலம் கடகராசியின் ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பார் என்பதால் அந்த வீடுகள் வலுப்பெற்று நன்மைகளை செய்யும்.

குருவின் பார்வை ஏழாமிடத்தில் பதிவதால் இதுவரை திருமணமாகாத இளையவர்களுக்கு வரும் ஆகஸ்டு மாதத்திற்கு மேல் திருமணம் நல்லபடியாக முடியும். ஒருசிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களுடைய வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பீர்கள்.

ஏற்கனவே திருமணமாகி முதல்வாழ்க்கை கோணலாகி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது நல்லபடியாக நடந்து அந்த வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும். கூட்டு வியாபாரத்தில் குறைகளை கண்டவர்கள் இனிமேல் அவை நீங்கி மன ஒற்றுமை ஏற்பட்டு தொழில் முன்னேற்றம் காண்பார்கள்.

குருபகவானின் ஒன்பதாமிடத்துப் பார்வையால் பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் பாவம் வலுப்பெறுவதால் தந்தை மூலம் லாபமும், தந்தை வழி சொத்துக் கிடைத்தலும், பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கங்கள் விலகுவதும் பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாத நிலையில் இருந்து வந்த தடைகள் நீங்குவதுமான நல்ல பலன்கள் நடைபெறும்.

தகப்பனாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மகனுக்கு இடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிணக்குகள் நீங்கி தந்தையுடன் இணைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அப்பா நிறைவேற்றித் தருவார். நீங்களே ஒரு நல்ல தகப்பனாக உங்கள் குழந்தைகளுக்கு கேட்பதை செய்து தர முடியும்.

குறிப்பிட்ட சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிதிலமடைந்து ஊருக்கு வெளியே கவனிப்பாரின்றி கிடக்கும் சிவன் கோவிலை புணருத்தானம் செய்யும் பாக்கியமும் அதன் மூலம் புண்ணியமும் கிடைக்கும். சிவன் அருள் கிடைக்க பெறுவீர்கள்.

நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பெரியவர்கள், மதிப்புமிக்கவர்கள், அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அந்தஸ்து உயரும். அதிகாரமிக்க பதவிகள் கிடைக்கும். அரசியலில் ஏற்றங்கள் உண்டு.

குருபகவானின் பதினொன்றாமிடத்துப் பார்வையால் செய்யும் தொழிலில் ஏற்றமும், லாபமும் திருப்திகரமாக இருக்கும். இதுநாள்வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. குறைந்த வியாபாரம் நிறைந்த லாபம் என்ற முறையில் கடையை மூடி வீட்டுக்கு திரும்பும் பொழுது மனநிறைவுடன் வீட்டிற்கு செல்ல முடியும்.

பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த வருடம் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும். ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள். குறிப்பாக ஆன்மிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும். பாகப்பிரிவினை சம்பந்தமான முக்கியமான முடிவுகள் எடுப்பதை தற்போது தள்ளிப் போடுவது நல்லது.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.

ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் பிரச்சனைகளால் மனக் கலக்கம் வரலாம்.

பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு நன்மைகள் இருக்கும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வருடம் இது. யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.

யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு. என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் கூறுவார்கள்.

சரக்கு வாகனங்கள் இயக்குவோர், கூலியாட்களை வைத்து வேலை வாங்குவோர், மாற்றுத்திறனாளிகளை பராமரிப்போர், பெட்ரோல்பங்க், அநாதை விடுதிகளை நடத்துவோர், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், காலிமனை விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், காவல்பணி செய்வோர், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவீர்கள். நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

பொதுவாக இது முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். இந்தக் குருப்பெயர்ச்சியில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

பரிகாரங்கள்:

வியாழக்கிழமை தோறும் விரதமிருப்பதும், ஜன்மநட்சத்திரம் அன்று ஒருமுறை ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று குருபகவானை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களைத் தரும்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

கட்டளையிட்டால் செய்யக் காத்திருக்கும் பலபேரைக் கைக்குள் வைத்திருக்கும் கடக ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் வளர்ந்து தேயும் கிரகம். எனவே உங்களுக்கு வாழ்வில் வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். ‘மனதுகாரகன்’ என்று சந்திரன் வர்ணிக்கப்படுகிறார். எனவே சிந்தனை ஆற்றலால் நீங்கள் சிறப்பு களைப் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உடையவர்களாக விளங்குவீர்கள்.

சேவை மனப்பான்மை அதிகம் பெற்றவர்கள் நீங்கள். நினைத்ததை முடித்துக் காட்டுவதில் முதலிடம் பிடிப்பீர்கள். உங்கள் வேகத்திற்கும், விவேகத்திற்கும் ஈடுஇணை கிடையாது. நண்பர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மாற்றுக் கருத்துடையோரை மறுநிமிடமே மாற்றியமைத்து விடும் ஆற்றல் பெற்றவர் நீங்கள். யாரை எப்படி அணுகினால் காரியம் சாதிக்கலாம் என்ற கலையைக் கற்று வைத்திருப்பீர்கள். ஏற்ற, இறக்கம் வாய்ந்த வாழ்க்கையைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

தனவரவைக் கொடுக்கும் இரண்டாமிடத்து ராகு!
தக்கவிதத்தில் செலவிட வைக்கும் அஷ்டமத்து கேது!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும், தனது வான்வெளிப் பயணத்தில் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிசெய்யப் போகிறார்கள்.

இரண்டாமிடத்து ராகுவால் உங்கள் முன்னேற்றம் சிறப்பான விதத்தில் அமையப் போகின்றது. இருப்பினும் பணப்புழக்கம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் கடன்களைத் தீர்ப்பது நல்லது. நீண்டநாளைய ஆசைகள் நிறைவேறும். நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை பணம் வருவதில் இருந்த தடை அகலும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கையும் உயரும்.

உங்களின் சுய ஜாதகத்தின் அடிப்படையிலும், உங்கள் மனைவி, மக்கள் சுயஜாதகத்தின்அடிப்படையிலும் ராகு பலன்களைக் கொடுப்பார். எனவே ராகு எந்த நட்சத்திரக் காலில் இணைந்திருக்கிறார். எந்தெந்த கிரகங்கள் எல்லாம் பார்க்கின்றன என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப பலன்களை வாரிவழங்க, செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?, எந்த சிறப்பு ஸ்தலத்திற்கு சென்றால் நன்மைகிட்டும் என்பதைப் பற்றி அறிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் ஏராளமான இனிய சம்பவங்கள் நடைபெறும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிறைய நடைபெறும். மங்கல ஓசை கேட்கும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு அது கிடைத்து பணவரவு கூடும். எதிர்காலத்தை இனிமையாக்கிக் கொள்ள என்னவழி என்பதை நண்பர்கள் எடுத்துரைப்பர். கடை திறப்பு விழாக்களையும், கம்பெனி திறப்பு விழாக்களையும் காணும் நேரமிது.

தொழில் வளர்ச்சிக்கு மூலதனம் போட பணம் இல்லையே என்று ஏங் கியவர்களுக்கு கூட்டாளிகள் புதிதாக வந்திணைந்து உறுதுணை புரிவர். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டியவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். தாய்வழி ஆதரவு பெருகும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். வெளிநாட்டிலிருந்து ஆதரவுக் கரம் நீட்டுபவர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அஷ்டமத்து கேதுவால் ஆதாயம் உண்டா?

எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் அலைச்சல் அதிகரித்தாலும், ஆன்மிகத்திற்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி விரயங்களை சுபவிரயமாக்கிக் கொள்வது நல்லது.

வாகனங்களை மாற்றலாமா? என்ற சிந்தனையும், புதிய வாகனங்களை வாங்கலாமா? என்ற எண்ணமும் உருவாகும். உறவினர்களிடம் பழகும் பொழுது கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. எதிரிகளை உதிரியாக்குவது அன்பு ஒன்றுதான். எனவே அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயத்தை அதிகம் பெற முடியும்.

மாற்றங்கள் அதிகமாக வந்தாலும், வரும் மாற்றம் நல்ல மாற்றமா? என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். ஒவ்வொரு நாளும் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானம் அவசியம் தேவை. இல்லையேல் விவகாரங்களைச் சந்திக்க நேரிடும். பொருளாதாரத்தில் கண்ணும், கருத்துமாக இருப்பது நல்லது. வரவிற்கேற்ற செலவு வரும்.

இந்த நேரத்தில் கேதுவை மட்டும் வழிபட்டால் போதாது. அதன் வால் பகுதியாக இருக்கும் ராகுவையும் கட்டாயம் வழிபட வேண்டும். எனவே பூரணமாக சர்ப்ப சாந்திகளை மேற்கொள்வது நல்லது. 6, 8, 12 ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்கள் உலா வரும் பொழுது வழிபாடுகள் தான் உங்கள் வளர்ச்சியைக் கூட்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அஷ்டமத்து கேதுவால் அற்புதப் பலன்களைப் பெறவும், ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவும், மதிப்பு, மரிய£தை, மகிழ்ச்சி, மனஅமைதி போன்றவை கிடைக்கவும், உங்கள் சுய ஜாதகத்தில் ராகு–கேதுக் களின் நிலையறிந்து, அதற்கு ஏற்ற நாளில் வழிபாடுகளை மேற்கொண்டால் மேலும் நற்பலன்களைப் பெற இயலும்.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!

ராகு, சிம்ம ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது சூரியன், சுக்ரன், கேது ஆகிய மூன்றின் சாரத்திலும் சஞ்சரிக்கிறார். அதன் மூலமாக நமக்கு ஏற்படும் பலன்களை அறிந்து நாம் செயல்படுவது நன்மையை வழங்கும்.

சூரியன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மனதளவில் செய்ய நினைத்த காரியத்தை மறுநிமிடமே செய்து முடிப்பீர்கள். ஆயினும் பகை கிரகத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொடுக் கல் – வாங்கல்களில் உறவினர்களால் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். கடுமையாக முயற்சித்தும் கட்டிடப் பணி நிறைவேறவில்லையே என்று கவலைப்படுவீர்கள். வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றவர்கள் மீண்டும் திரும்பும் வாய்ப்பு கிட்டும். இக்காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பதோடு வடக்குநோக்கிய அம்பிகையையும் வழிபட்டு வருவது நல்லது.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): பயணங்களால் பலன் கிடைக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இட மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். மனக்கவலை மாற மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். பணப்புழக்கம் அதிகரிக்கும் விதத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): மிகமிக கவனம் தேவை. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. விரயங்கள் கூடும். தொழில் நடத்தும் சிலர் நெருக்கடி காரணமாக அதை மூடிவிடலாமா? என்று சிந்திப்பர். வீண் விவாதங்களால் உறவு பகையாகலாம். இக்காலத்தில் ராகு–கேது வழிபாடும், சர்ப்ப சாந்தியும் செய்வது நல்லது.

பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!

கேது, கும்ப ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது, குரு, ராகு, செவ்வாய் ஆகிய மூன்று சாரங்களிலும் சஞ்சரிக்கின்றார். அப்பொழுது எப்படிப்பட்ட பலன்களை வழங்குவார் என்பதை பார்ப்போம்.

குரு சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): பெற்றோர் வழி உறவில் பிரியம் கூடும். தொழில் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பிரியத்திற்கு ஆளாக நேரிடும். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரலாம்.

கேது, ராகு காலில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். ஆற்றல் மிக்கவர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வித்திடும். கூட்டு முயற்சியில் மாற்றம் ஏற்படும். கூட்டாளிகள் விலகுவர். தடைகளும், தாமதங்களும் ஆட்கொள்ளும் நேரம் இது என்பதால் திசாபுத்திக்கேற்ற வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

கேது செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் வெளிநாட்டு முயற்சிக்கு வித்திடுவீர்கள். பழைய நண்பர்களின் பழக்கத்தால் புதிய திருப்பங்கள் ஏற்படும். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு ஏராளமான நற்பலன்களை வழங்கவும், எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் வெற்றி வாய்ப்புகள் வீடு வந்து சேரவும் வாரம் தோறும் வாலில் மணிகட்டிய ஆஞ்ச நேயரை வழிபட்டு வாருங்கள். மேலும் பவுர்ணமி தோறும் விரதம்இருந்து நாராயணரை வழிபட்டால் நலமும் வளமும் கிடைக்கும்.