iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • பன்னீர்செல்வம் முதல்வரானவுடன் மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்: மதுசூதனன்
  • ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் பரப்புரை
  • மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 3-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

பன்னீர்செல்வம் முதல்வரானவுடன் மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்: மதுசூதனன் | ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் பரப்புரை | மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 3-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

மேஷம்

இன்றைய ராசி பலன்கள்

கிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனைகட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உடல் நலம் சீராகும். உடன்பணிபுரிபவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். தொழில் ரீதியான பயணமொன்று தாமதப்படலாம்.

வார பலன்கள்

மார்ச் 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை:-

மே‌ஷ ராசிக்காரர்களின் மன அழுத்தங்களுக்கு காரணமான பிரச்னைகள் அனைத்தும் தீர ஆரம்பிக்கும் வாரமாக இது இருக்கும். அஷ்டமச் சனியின் தாக்கம் இன்னும் கொஞ்சகாலத்திற்கு நீடிக்கும் என்பதால் மே‌ஷத்தினர் உடனே செய்யக்கூடிய எளிய பரிகாரமாக சிறிதளவு எள்ளை சனிக்கிழமை இரவு தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் புதிதாக வடித்த சாதத்தில் அதைக் கலந்து காகத்திற்கு உணவிடுங்கள். கறுப்புநிற நன்றியுள்ள பிராணிக்கு அன்புடன் விருப்பமான உணவு அளியுங்கள்.

பங்குச்சந்தை போன்ற யூகவணிகத்துறையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதாலும் ராகுபகவான் ஐந்தில் இருப்பதாலும் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். கடன் பெற்று வீடு வாங்கும் அமைப்பு உள்ளது. புதிய வாகனம் அமையும். இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும்.

இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்த வாரம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.

தமிழ் மாத ஜோதிடம்

மார்ச் 14-ந்தேதி முதல் ஏப்ரல் 13-ந்தேதி வரை

மாத ஆரம்பத்தில் ஆறு, பனிரெண்டுக்குடையவர்கள் பரிவர்த்தனை பெற்றாலும், ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருப்பதால் பங்குனி மாதம் மேஷத்திற்கு நல்ல விஷயங்களைச் செய்யும் மாதமாக இருக்கும். தொழில் விஷயங்களில் நல்ல பலன்கள் நடக்கும். பூர்வீக சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். பனிரெண்டாம் இடத்தில் குரு பரிவர்த்தனை வலுப்பெறுவதால் சிலர் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் அவற்றை முடிப்பீர்கள். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்கள் நன்கு பரீட்சை எழுதுவீர்கள். கலைஞர்களுக்கு இது சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. தந்தைவழி உறவினர்களிடமிருந்து உதவிகள் இருக்கும்.

ஆண்டு பலன் - 2017

மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் புதுவருடமான 2017-ம் ஆண்டின் பிற்பகுதி நிம்மதியைத் தருகின்ற வகையில் இருக்கும். அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான மேஷத்தினர் தற்போது சாதகமற்ற பலன்களை அனுபவித்து வருகிறீர்கள். முப்பது வயதுகளில் இருக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கடுமையான நெருக்கடிகளும், பணம் இல்லாத நிலைமையும் இருந்து வருகிறது.

எட்டில் இருக்கும் சனிபகவானால் பொருள் இழப்பு, நெருங்கியவர் மரணம், துயரம், கடுமையான மனஅழுத்தம், தூக்கமில்லாத நிலை, வாழ்க்கைச் சிக்கல்கள் போன்றவைகள் நடக்கும் என்பது ஜோதிடவிதி. பெரும்பாலான மேஷத்தினருக்கும் எதிர்மறையான பலன்களே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

நடுத்தர வயதுக்காரர்களுக்கு குடும்பப் பிரச்னை, தாங்க முடியாத இழப்புக்கள், ஆரோக்கிய குறைவு போன்ற பலன்கள் நடந்து வருகின்றன. பிறந்த ஜாதகவலு உள்ள சிலர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்களின் சங்கடங்கள் அனைத்தும் விலகும் வருடமாக புத்தாண்டு இருக்கும்.
மேஷத்தினர் வீட்டில் உடனிருப்பவர் யாராவது விருச்சிக ராசியாக இருந்தால் அஷ்டமச் சனியும், ஏழரைச்சனியும் சேர்ந்து மிகவும் கடுமையான பலன்கள் அந்தக் குடும்பத்திற்கு நடந்து வருகின்றன. இந்த ஆண்டு முதல் உங்களின் கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பதால் மேஷத்திற்கு புத்துணர்வு தரும் வருடம் இது.

குறிப்பாக தற்போது ஐந்தாமிடத்தில் அமர்ந்து உங்களில் அதிர்ஷ்டங்களைத் தடுத்து கொண்டிருக்கும் ராகு ஆகஸ்ட் 18 தேதி மாற இருக்கிறார். அதுபோலவே ஆறாமிடத்தில் அமர்ந்து ஒரு விஷயத்தையும் நடக்கவிடாமல் செய்து கொண்டிருக்கும் குருபகவான் செப்டம்பர் 12-ந்தேதி பெயர்ச்சியாக இருப்பதும் மேஷத்திற்கு ஒரு ஆறுதலான அமைப்பு.

பொதுவாக ராஜகிரகங்கள் எனப்படும் வருட கிரகங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே அதன் பலன்களைத் தந்துவிடும் என்பதால் இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இதுவரை உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் சாதகமற்ற பலன்கள் மாறி நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும் என்பது உறுதி.

கோட்சார அமைப்பில் மிகவும் கடுமையான கெடுபலன்களை தரும் அஷ்டமச்சனி அமைப்பு இந்த வருட இறுதியில் அக்டோபர் 26-ந்தேதி உங்களுக்கு முடிய இருக்கிறது. ஒருவருக்கு அஷ்டமச்சனி முடிந்த பிறகு வாழ்க்கை நல்ல விதமாக செட்டில் ஆகும் என்பதும் ஜோதிடப்படி உறுதியான ஒன்று.

மேலும் வருடப் பிற்பகுதியில் உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் ஏழாமிடத்திற்கு மாறி ராசியை பார்க்கப் போவதால் குருப்பெயர்ச்சி முதல் உங்கள் வாழ்க்கையின் நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும்.

எனவே எந்த ஒரு கோணத்தில் இருந்து பார்த்தாலும் 2017-ம் ஆண்டின் துவக்கத்தில் சுணக்கமான பலன்கள் மேஷத்திற்கு இருந்தாலும், வருடத்தின் பிற்பகுதியில் இருந்து மிகவும் நல்ல பலன்கள் நடந்து, தற்போது உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள் என்பது உறுதி.
இந்த வருடம் சிலருக்கு வெளிநாட்டுக் கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பு கிடைப்பதும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமைவதும், வெளிதேச நட்பு மூலம் தொழில் லாபங்கள் இருப்பதும் வடக்கு நோக்கிச் செல்வதும் நடக்கும். பணவரவில் தடைகளோ, பொருளாதார கஷ்டங்களோ இருக்காது. வருமானம் சீராக இருக்கும் என்பதால் எவ்வித கஷ்டங்களும் உங்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.

வாக்குஸ்தானம் வலுப்பெறுவதால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். வருடத்தின் பிற்பகுதியில் சிலருக்கு குடும்பம் அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள்.
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் வீடுமாற்றம், அலுவலக இட மாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கக் கூடிய கால கட்டம் இது.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.

குறிப்பாக பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள்.

தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைப்படாது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும்.

பெண்களுக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டுதான். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.

குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். மேலும் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக் கூடிய பெண் ஒருவர் இருக்கும் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் பெரிதாக வராது.

புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். குறுப்பிட்ட சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும். மகான்களின் கருணைப் பார்வை உங்கள் மீது விழும்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.

மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதம் இன்றி இனிமேல் செய்து கொடுக்க முடியும்.

என்ன இருந்தாலும் அஷ்டமச் சனி வருட இறுதியில்தான் விலகுவதால் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது.
 
மொத்தத்தில் இந்த ஆண்டு மேஷத்திற்கு எதிர்கால நன்மைகளைத் தரும் என்பதால் துளியும் கவலைகளுக்கு இடமில்லை.

துன்முகி வருடம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)

மேஷராசிக்காரர்களுக்கு புதிதாகப் பிறக்கும் துன்முகி ஆண்டு மாற்றங்களையும் படிப்பினைகளையும் தரும் ஆண்டாக இருக்கும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் தற்போது இருக்கும் நிலையில் இருந்து வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத மாற்றங்கள் வரும்.

இளையவர்களுக்கு வரப் போகும் மாற்றங்களினால் உங்களின் எதிர்காலத்திற்கான நன்மைகள் மட்டும்தான் இருக்கும் என்பதால் இளம்வயது மேஷராசிக்காரர்கள் இந்த தமிழ்ப் புத்தாண்டில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

நடுத்தர வயது மேஷராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு இப்போது ராசிக்கு இருக்கும் குருபார்வை விலகுவதாலும் குருபகவான் ஆறாமிடத்திற்கு மாறுவதாலும் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பின்னடைவுகள் ஏற்படும் என்பதால் அனைத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது.

இந்த தமிழ்ப் புத்தாண்டில் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும்.

இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சுயதொழில் நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும். ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு ஓரளவு நல்ல பலன்கள் உண்டு.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும்.

குறிப்பிட்ட சிலர் அஷ்டமச்சனியால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்.

சிலருக்கு மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இருக்கும். யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும்.

கம்ப்யூட்டர் சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும், மறதிகளும் ஏற்படும். பொறியியல் துறை மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டிய காலம் இது. பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும் எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும். நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள்.

அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம்.

குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது. பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வேலைத்திறன் முதலாளியாலோ அல்லது மேலதிகாரிகளாலோ மதிக்கப்படும்.

சுபக்கிரகமான குருபகவான் ஆறாமிடத்திற்கு மாறப் போவதால் சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம்.

பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். மொத்தத்தில் மேஷராசிக்காரர்கள் நிதானமாகவும் பொறுமையுடனும் இருக்க வேண்டிய ஆண்டு இது.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மேஷராசிக்காரர்களுக்கு சனிபகவான் ஏழாமிடத்திலிருந்து மாறி எட்டாம் இடத்திற்கு அஷ்டமச்சனியாக மாறுகிறார். சென்றமுறை ஏழாமிடத்தில் அவர் இருந்தபோது கணவன்மனைவிக்குள் பிரச்சனை, பொருளாதாரக்குறைவு, பங்குதாரர்களுக்குள் கருத்துவேறுபாடுகள், ஆரோக்கியக் குறைவு, மனச்சங்கடங்கள் போன்ற பலன்களைக் கொடுத்திருந்தார். இம்முறை அஷ்டமச்சனியாக அவர் வருவது நற்பலன்களைத் தராது என்றாலும் மனகலக்கம் எதுவும் தேவையில்லை.

ஏனென்றால் எப்போதுமே மேஷராசிக்கு மிகக் கடுமையான கெடுபலன்களை எட்டில் வரும் சனியால் செய்ய முடியாது. ஏனெனில் இப்போது சனிபகவான் எட்டாமிடமாக அமர்வதும் உங்கள் ராசிநாதன் செவ்வாயின் இன்னொரு வீடான விருச்சிகத்தில்தான் என்பதாலும் விருச்சிகத்தில் சனிபகவான் பகை நிலை பெற்று வலுக்குறைவதாலும் அவருடைய கொடிய பலன்களை மேஷராசிக்கு தரமாட்டார். இதற்கு உதாரணமாக சென்ற பெயர்ச்சியின் போது மீனராசிக்காரர்கள் பட்ட கடுமையான துன்பத்தைச் சொல்லலாம்.

சென்ற பெயர்ச்சியில் மீனராசிக் காரர்களின் ராசிநாதனான குருபகவானின் எதிர்க்கிரகமான அசுரகுரு சுக்கிரனின் வீட் டில் உச்சம் எனப்படும் மிக வலுநிலையைப் பெற்ற சனி மீனராசிக்காரர்களுக்கு கொடிய பலன்களைத் தந்தார். ஆனால் உங்கள் ராசிநாதனின் இன்னொரு வீட்டில் பகைபெற்று அமரும் சனி அதிகமான கெடுபலன் களை உங்களுக்குத் தரமாட்டார். மேலும் ஒரு துன்பம் வரும் பொழுது நம்முடைய ராசிநாதன் அல்லது ராசி வலுவாக இருந்தால் அதை சமாளிக்கக்கூடிய ஆற்றல் நமக்கு இருக்கும் என்பதால் அந்தக் கஷ்டம் பெரிதாக தெரியாது.

இம்றை சனிப்பெயர்ச்சி ஆனவுடன் 2015 ஜுலை வரை உங்கள் பாக்யாதிபதியும் உங்களுக்கு கெடுபலன்கள் நடக்க விடாமல் தடுப்பவருமான குருபகவானின் பார்வைக்குள் சனி வருவதால் ஆரம்பத்தில் உங்களுக்கு சனிபகவான் கெடுதல்களைத் தர முடியாது. அடுத்து 2015 ஜுலைக்குப் பிறகு நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியால் சனிக்கு குருவின் பார்வை விலகினாலும் குருபகவான் ஐந்தாமிடத்திற்கு மாறி உங்கள் ராசியைப் பார்க்கப் போவதால் உங்கள் ராசி வலுவாகும் என்பதால் 2016-ஜுன் வரை அஷ்டமச்சனியின் கெடுதல்கள் எதுவும் உங்களை பாதிக்காது.

2016 ஜுனுக்கு பிறகே அஷ்டமச் சனியின் பாதிப்புகளை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள் என்பதால் அதற்குப் பிறகு கண்டிப்பாக எந்த விஷயத்திலும் கவனமாகத்தான் இருக்க வேண்டும். அதேநேரத்தில் இன்னொரு பலனையும் சொல்கிறேன். அஷ்டமச் சனியின் பாதிப்புகள் முப்பதுவயதுகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிகமாக இருக்கும். அவர்களை தொழில், வேலை, திருமணம் போன்றவற்றில் செட்டில் ஆக விடாமல் தடுக்கும்.

அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய சில படிப்பினைகளைத் தரும். நடுத்தர வயதுக்காரர்களுக்கு நிச்சயமாக பெரிய கெடுதல்கள் எதுவும் கண்டிப்பாக இருக்காது. அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் வர வேண்டும் என்பதால் தொழில், வேலை விஷயங்களில் மட்டும் சில இடையூறுகளை சனிபகவான் தருவார். சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் ஜீவனஸ்தானத்தை பார்ப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கெடுதல்களை செய்வார்.

குறிப்பாக அஷ்டமச்சனி நேரத்தில் பணமின்றி நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதால் பணத்தைத் தரும் அமைப்புகளை சனிபகவான் பாதிப்பார். எனவே வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் இது. மேலதிகாரிகளிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம். அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. இந்த நேரத்தில்தான் பணசிக்கல்களும், கடன் தொல்லைகளும் வந்து முறைகேடான வருமானத்திற்கு ஆசைவரும் என்பதால் குறிப்பாக அரசுப்பணியாளர்கள் இதர வருமானங்கள் தரக் கூடிய நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வேலையிழப்பு, தற்காலிக பணிநீக்கம் போன்ற அபாயங்கள் இருப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் யாரையும் நம்ப வேண்டாம். சுவருக்குக்கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் சுமராகத்தான் இருக்கும். எதிரில் போட்டிக்கடை உருவாகும். இத்தனை காலம் உங்களிடம் வாடிக்கையாளராக இருந்தவர்கள் எதிர்க்கடைக்குச் சென்று உங்கள் வியாபாரத்தைக் குறைய வைப்பார்கள்.

எல்லாம் கொஞ்சகாலத்திற்குத்தான் என்பதை அறிந்து கொண்டு பொறுமையாக இருங்கள். இளையபருவத்தினருக்கு வேலை கிடைப்பது சிரமமாக இருக்கும். உங்களுடைய திறமைகளை பிறர் அறிய மாட்டார்கள். உங்களை விட திறமைக்குறைவான மேலதிகாரியுடன் வேண்டா வெறுப்பாக வேலை செய்ய வேண்டியிருக்கும். வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும். அதேநேரத்தில் வெளிநாட்டில் தனிமைத்துயரை அனுபவிப்பீர்கள்.

ஆனால் அது இங்கே குடும்பத்திற்கு தெரியக்கூடாது என்று தொலைபேசியில் பேசும்போது சந்தோஷமாக இருப்பதாக நடிப்பீர்கள். இந்த காலகட்டத்தில்தான் காதல் வரும். கூடவே காதல் தோல்வியும் வரும். எனவே காதல் கத்திரிக்காய் என்று உங்களின் மேலான ஆக்கசக்தியை வீணாக இழந்து மனஅழுத்தத்தில் தவிப்பதை தவிருங்கள். குடிப்பழக்கம் இருப்பவர்கள் அஷ்டமச்சனி முடியும் காலம்வரை அந்தப் பழக்கத்தை நிறுத்துவது நல்லது.

குறிப்பாக குடித்துவிட்டு வண்டி ஓட்டவே செய்யாதீர்கள். விபத்து நடக்கிறதோ இல்லையோ தெருமுனையில் போலீஸ்காரர் ஊதும் கருவியுடன் இருந்து உங்கள் பாக்கெட்டை காலி செய்வார். பாருக்குள் நுழைந்தால் உங்களிடம் சண்டைப் போடுவதற்கென்றே இன்னொரு நபர் காத்துக் கொண்டிருப்பார். வம்பு, வழக்குகள் வரும் நேரம் இது. போலீஸ் ஸ்டேஷன் போகாதவர்களையும் கோர்ட்டு என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் அஷ்டமச்சனி அங்கே போக வைத்துவிடும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் எவரிடமும் வேண்டாம். நண்பர்களும் இப்போது விரோதியாவர்கள் என்பதால் எச்சரிக்கையாக இருங் கள். நடுத்தர வயதுக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டும். ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மேஷராசி பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் வீட்டில் பிரச்சனை எதுவும் இருக்காது.

ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன் பிரச்சனைகளால் மனக்கலக்கம் வரலாம். அதிர்ஷ்டம் கை கொடுக்காத நேரம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம். யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)

மேஷராசிக்கு தற்போது அஷ்டமச்சனி நடந்து வருகிறது. ஏழரைச்சனி அஷ்டமச்சனி காலங்களில் ஒரு மனிதருக்கு நல்ல விஷயங்கள் நடப்பதற்கு தடை வரும் என்பது ஒரு ஜோதிட உண்மை. இதன்படி கடந்த ஒன்றரை வருட காலமாக மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று பின்னடைவான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதிலும் முப்பது வயதுகளில் இருக்கும் பெரும்பாலான இளையபருவத்தினருக்கு வாழ்க்கை மீது பிடிப்பில்லாத ஒரு நிலை வரும் அளவிற்கு எதுவும் சரியில்லாத போக்கு நடந்து வருகிறது.

தற்போதைய குருபெயர்ச்சியால் சாதகமற்ற இடமாக சொல்லப்படும் ஆறாமிடத்திற்கு குரு மாறுகிறார். ஏற்கெனவே நல்ல இடமாக சொல்லப்பட்ட ஐந்தாமிடத்தில் கடந்த ஒரு வருட காலமாக குருபகவான் இருந்தபோது பெரிய நன்மைகள் எதையும் மேஷ ராசிக்காரர்களுக்கு குரு செய்து விடவில்லை. எனவே தற்போது ஆறாமிடத்திற்கு வர இருக்கும் குருபகவானும் கெடுதல்கள் எதையும் உங்களுக்குத் தரமாட்டார்.

அதேநேரத்தில் எந்த ஒரு விஷயமும் கிணற்றில் போட்ட கல்லாகவே மேஷராசிக்கு இருந்து வரும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறு ஒன்றாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் நிம்மதி இருக்காது. வருமான குறைவு இருக்கும். பட்ஜெட்டில் துண்டு விழும். ஆனால் இவை அனைத்தும் தற்காலிகமானதுதான். இந்தப் பெயர்ச்சியின் முதல் ஆறுமாதங்களுக்கு மட்டுமே நான் சொன்ன பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

2017-ம் ஆண்டு ஆரம்பித்தவுடன் மேஷராசிக்கு இருந்து வரும் சிக்கல்கள் அனைத்தும் படிப்படியாக நீங்கி வழக்கமான, அதிர்ஷ்டமான நல்லபாதையில் நீங்கள் நடக்க ஆரம்பிப்பீர்கள் என்பதால் இந்த முறை பெரிதாக கவலைபடுவதற்கு ஒன்றுமில்லை. இன்னும் ஒரு கருத்தாக குருபகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களைத்தான் வலுப்படுத்துவார் என்பதால் இந்த முறை அவர் பார்க்கும் இடங்களான உங்கள் ராசிக்கு பத்து பனிரெண்டு மற்றும் இரண்டு ஆகிய ஸ்தானங்கள் வலுப்பெறுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

முதலாவதாக ஜீவனஸ்தானத்திற்கு குருவின் பார்வை இருப்பதால் உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை உடனடியாக விலகி தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும்.

அதேநேரத்தில் வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கொள் முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். அஷ்டமச்சனி நடப்பதால் ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் சிலருக்கு உருவாகும். முதலீடின்றி தனது புத்திசாலித்தனத்தை வைத்து சொந்ததொழில் செய்பவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சுயதொழிலர்கள், கடுமையான உழைப்பாளிகள், ஆலைத்தொழிலாளர்கள் விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வருமானம் மற்றும் பணவரவுகளுக்கு எந்தக் குறையும் இருக்காது.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு இனிமேல் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது நன்மை தரும் காலம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும்.

அரசு தனியார்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவிஉயர்வு சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கப் பெறும். சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்சனைகள் வரும்.

பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம்.

இதுவரை செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதை சற்று ஒத்தி வைப்பது நல்லது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது.

குருபகவான் ஆறாமிடத்தில் வலுப்பெறுவதால் கடன் நோய் எதிரிகளைக் குறிக்கும் ஆறாம்பாவம் வலுப்பெறுகிறது. இதனால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆகவேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்சனையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதிக வட்டிக்கு வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் தொல்லையில் கொண்டு போய் விடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

மேலும் கடன் வாங்குவதால் பிரச்சனைகள் தீராமல் இன்னும் அதிகமாகவே செய்யும். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவது சட்டியிலிருந்து தப்பித்து அடுப்பில் விழுந்த கதை ஆகிவிடும். சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் அதனை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை தாமதமாகி வந்த வங்கிக்கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார்.

ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட்கார்டு உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும். குறிப்பிட்ட சிலருக்கு நீண்டகால வீட்டுக்கடன் அமைந்து கடனாளி ஆனாலும் நல்ல வீடு அமையும் யோகத்தையும் குருபகவான் தருவார்.

யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆறாமிடத்துக் குரு நல்ல நண்பர்களையும் சிறு பிரச்சனைகளால் எதிரிகளாக மாற்றுவார் என்பதால் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.  

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்

பரிகாரங்கள்:


அஷ்டமச்சனி நடந்து கொண்டிருப்பதால் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். குருபகவானின் திருவருளை முழுமையாகப் பெற உங்களின் ஜென்ம நட்சத்திரத் தினமன்று குருஸ்தலமான ஆலங்குடிக்கு சென்று வழிபடுங்கள். தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு வியாழக்கிழமை செந்திலாண்டவனை தரிசியுங்கள்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

பெருந்தன்மையும், பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மையும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

நவக்கிரகங்களில் மிகுந்த பலம் பெற்ற கிரகமாக விளங்குவது உங்கள் ராசிநாதன் செவ்வாய் தான். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் உங்கள் உயிர்மூச்சாக இருக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் வரை உங்களுக்கு தூக்கம் வராது.

வம்பு, வழக்குகளில் சிக்குவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். வளைந்து கொடுத்துச் சென்றே காரியங்களைச் சாதிப்பதில் வல்லவர் நீங்கள். நெருக் கடிகளை கையாளும் கலை உங்களுக்கு அதிகம் இருக்கும். திடீர் என்று உணர்ச்சி வசப்படுவீர்கள். செல்லும் இடங்களில் எல்லாம் செல் வாக்குடன் திகழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.‘கணீர்’ குரலுக்கு சொந் தக்காரர்களாகவும், கடமை உணர்வு மிக்கவர்களாகவும் விளங்குவீர்கள்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படி இருக்கும்? என்ன மாற்றங்களை எல்லாம் கொடுக்கப் போகிறது? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பொதுவாக ஜாதகத்தில் 5, 9, 11 ஆகிய இடங்கள் பலம் பெற்றிருந்தால் பணப்பற்றாக்குறை ஏற்படாது. பொருளாதாரத்தில் போதுமான நிறைவு ஏற்படும். ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்’ என்பார்கள். அந்த அடிப்படையில் 5–ல் வரும் ராகு, செல்வ வளம் பெருக வழிவகுத்துக் கொடுக்கப் போகிறார். கேது, லாப ஸ்தானத்தில் வருவதால் பதினோராமிடம் புனிதமடைகின்றது. தேங்கிக் கிடக்கும் தொழிலை நடத்தி வைக்கும் ஆற்றல் சர்ப்ப கிரக ஆதிக்கத்திற்கு உண்டு. எனவே கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து தொழிலை விரிவு செய்யும் வாய்ப்பு உண்டு.

சொத்துக்களால் லாபம் பெறவைக்கும் ஐந்தாமிடத்து ராகு!
சொந்தங்களின் ஒத்துழைப்பை கூட்டும் லாப ஸ்தான கேது!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தங்களது வான்வெளிப் பயணத்தில் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிசெய்யப் போகிறார்கள்.

ஐந்தாமிடமான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும், பதினோறாமிடமான கும்ப ராசியில் சஞ்சரிக்கும் கேதுவும் பக்கபலமாக இருந்து உங்கள் சிக்கல்கள் தீர வழிகாட்டுவர். எனவே நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நம்பிக்கையோடு இருக்கலாம். புத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு பிள்ளைகள் வழியில் சுபவிரயங்களை உருவாக்கும். வாயில் தேடி வந்து வரன்கள் முடிவாகும். கோவில், கோவிலாகக் கும்பிட்டதற்குப் பலன் எப்பொழுது கிடைக்கும்? ஆயுள் நன்றாக இருக்குமா? ஆதாயம் போதிய அளவு கிடைக்குமா? என்றெல்லாம் சிந்தித்த உங்களுக்கு, இப்பொழுது சிறப்பான பலன்களை ராகு அள்ளி வழங்கப் போகிறார்.

பூர்வ புண்ணியத்தின் வலிமையால் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். திடீரென வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வீர்கள். ஸ்தல யாத்திரைகள் அதிகரிக்கும். வளர்ச்சிக்கு வித்திட்ட வர்களைச் சந்தித்து முக்கிய முடிவெடுப்பீர்கள். எண்ணங்கள் எளிதில் செயலாகும் இந்த நேரத்தில் எடுத்த காரியங்களை சுலபமாக முடிக்கும் வாய்ப்பு கிட்டும்.

மேலும் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும். தூர தேசத்திலிருந்து வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றலாகி வந்த இடமே நன்றாக உள்ளது என்று நிம்மதி அடைவீர்கள். பழைய கடன் களை அடைப்பதற்கான முயற்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

பஞ்சம ஸ்தான ராகுவால் அஞ்சாத வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் பெருகுவதும் இக்காலத்தில் தான். பிரச்சினைகளுக்கு மத்தியில் பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்திணைவர். ராகுவிற்கும், கேதுவிற்கும் அர்ச்சனைகளைச் செய்து, ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் நன்மையே நடக்கும். அனுகூலமான நாளில் சர்ப்ப சாந்தி செய்தால் பிள்ளைகளின் சுபகாரியம் எளிதாக முடியும்.

அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிகப் பொறுப்புகள் வந்து சேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். உங்கள் சுய ஜாதகத்தில் 2, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில் ராகு இருந்தால் முறையாக சர்ப்ப சாந்திகளைச் செய்து கொள்ளலாம். செல்வ நிலையில் ஏற்ற இறக்கம் இல்லாமல், நிலையான செல்வம் வந்து நிம்மதியைக் கொடுக்க ராகு–கேதுக்களின் வழிபாடுகள் தான் தேவை.

நன்மைகளை வழங்கும் லாப ஸ்தான கேது!

உங்கள் ராசிக்கு பதினோறாமிடமான கும்ப ராசியில் கேது சஞ்சரிப்பது யோகம் தான். லாப ஸ்தானம் புனித மடைகின்றது. ஞானகாரகன் கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆன்மிகத்திற்கு என்று ஒரு தொகையை ஒதுக்கும் பொழுது, குடும்ப வாழ்க்கையிலும், தொழிலிலும் லாபம் வந்து கொண்டே இருக்கும். தொழில் வளர்ச்சி கூடும். பணப்புழக்கம், வரவு–செலவு திருப்தி தரும்.

பொதுவாகவே பதினோறாமிடத்தில் கேது வந்தால் பல வழிகளிலும் வரவைக் கொடுத்து, செலவையும் கொடுக்கும் என்பார்கள். மூத்த சகோதரர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் அகலும். இளைய சகோதரர்கள் எப்பொழுதுமே உதவிக்கரம் நீட்டுவர். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொன் கொழிக் கும் நேரமாகும். எண்ணியபடியே வெளிநாட்டுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள். கண்ணியம் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். அனைவரும் உங்களைப் பார்த்துப் பாராட்டும் விதத்தில் வாழ்க்கை அமையப் போகின்றது.

வெளிநாடு செல்ல நினைப்பவர்கள், வீடு கட்ட நினைப்பவர்கள் சுய ஜாதகத்தைப் பரிசீலனை செய்து திசாபுத்தி பலமறிந்து செயல்படுவது நல்லது.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!

ராகு சிம்ம ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது சூரியன், சுக்ரன், கேது ஆகிய மூன்றின் சாரத்திலும் சஞ்சரிக்கிறார். அதன் மூலமாக ஏற்படும் பலன்களை அறிந்து நாம் செயல்படுவது நன்மையை வழங்கும்.

சூரியன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): பிள்ளைகள் வழியில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற் கான அறிகுறிகள் தென்படும். குறிப்பாக, சென்ற ராகு பெயர்ச்சியில் தாமதமாக இருந்த சுபகாரியப் பேச்சுக்கள் இப்போது துரிதமாக நடைபெறும். இதுவரை பல நூற்றுக்கணக்கான ஜாதகங்களை பரிசீலனை செய்தும் அது பொருந்தவில்லை என்று வருத்தமடைந்து வந்தவர்கள், இப்போது மகிழ்ச்சியடையும் விதத்தில் மங்கல ஓசை இல்லத்தில் கேட்கும் வாய்ப்பு உருவாகப் போகின்றது.

குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியிலும் பலன் கிடைக்கும். இதுவரை எத்தனையோ முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்கள் இப்போது தேர்வில் பெற்றி பெறுவர். வேலை வாய்ப்பும் தேடி வரலாம். அதன்மூலம் உதிரி வருமானமும் கிடைக்கும்.

 சுக்ர சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பலதரப்பட்ட வகைகளில் பணத்தேவைஏற்பட்டாலும் ஏதேனும் ஒரு முயற்சியின் மூலம் தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டே இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்கி அதில் வீடு கட்டிக் குடியேறலாமா? என்ற சிந்தனை ஒரு சிலருக்கு மேலோங்கும்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): பயணங்கள் அதிகரிக்கும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டுப் புதிய வாகனங் களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டு தொடர்பு எண்ணியபடியே வாய்க்கும் என்றாலும், எட்டில் சனி இருப்பதால் யோசித்தே ஏற்றுக்கொள்வது நல்லது.

பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!

கேது, கும்ப ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது குரு, ராகு, செவ்வாய் ஆகிய மூன்று சாரங்களிலும் சஞ்சரிக்கின்றார். அப்பொழுது எப்படிப்பட்ட பலன்களை நமக்கு வழங்குவார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

குரு சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட விரிசல் அகலும். இல்லத்தில் நீண்ட நாட்களாகத் தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். பங்காளிப் பகை மாறும். பாகப்பிரிவினை சம்பந்த மாக ஏற்பட்ட பஞ்சாயத்துக்களில் நல்ல முடிவு வரும். உடன்பிறப்புகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

கேது பகவான் ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். கூட்டாளிகளை மாற்றம் செய்ய முன்வருவீர்கள். உங்கள் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். அரசுவழிச் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்குத் தாமதம் ஏற்படும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். எந்த முயற்சியும் அதிகப் பிரயாசை எடுத்தே வெற்றி பெற இயலும்.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): உடல் ஆரோக் கியம் சீராக அமையும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்த இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வி.ஆர்.எஸ் பெற்றுக் கொண்டு சுயதொழில் செய்யும் அமைப்பு உருவாகலாம். எதிர்பார்த்தபடியே லாபம் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். இதுபோன்ற காலங்களில் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஒருசிலருக்கு கோவில் திருப்பணிகளை முன்னின்று நடத்தும் வாய்ப்புகள் உருவாகலாம்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

ஐந்தாமிடத்து ராகு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளி வழங்கவும், பதினோறாமிடத்து கேது பண வரவைப் பெருக்கிக் கொடுக்கவும் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று ஞாயிற்றுக்கிழமை தோறும் உமா மகேஸ்வரரையும், அம்பிகையையும் வழிபட்டு வருவதோடு, சஷ்டி விரதமிருந்து சண்முகநாதப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. சண்முகர் வழிபாடு சந்தோஷம் வழங்கும்.