iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ அறிக்கையி்ல் தகவல் | டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை

கும்பம்

இன்றைய ராசி பலன்கள்

ண்பர்களின் சந்திப்பால் நன்மைகள் ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மங்கலச் செய்திகள் மனைதேடி வந்து சேரும். தாய்வழி உறவினர்களின் வருகை உண்டு.

வார பலன்கள்

நவம்பர் 28-11-2016 முதல் டிசம்பர் 04-12-2016 வரை:-

ராசியில் கேது அமர்ந்து ராசிநாதன் சனி, சூரியனுடன் இணைவதால் குறிப்பிட்ட சில கும்பராசிக்காரர்களுக்கு ஆன்மீக ஈடுபாடும், சிவத்தொண்டு செய்யும் வாய்ப்பும் கிடைக்கும் வாரம் இது. எட்டாமிடத்தில் குரு அமர்ந்து பனிரெண்டில் உள்ள செவ்வாயை பார்ப்பதால் குறிப்பிட்ட சிலருக்கு தாய்வழி பெண் உறவினர் வகையில் விரையமும், செலவுகளும் உண்டு. வருமானமும் சிக்கனமாகத்தான் இருக்கும் என்பதால் எதிலும் கையைச் சுருக்க வேண்டிய வாரம் இது,

எதிர்பார்ப்புகள் அனைத்தும் தடைகளுடனும் தாமதங்களுடனும் நிறைவேறும் வாரமாக இது இருக்கும். கும்பத்திற்கு இது சுமாரான வாரம்தான். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். அப்பா வி‌ஷயத்திலும், தந்தைவழி உறவினர் வி‌ஷயத்திலும் சாதகமற்ற பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பூர்வீக சொத்தில் வில்லங்கங்களும் தந்தை வழி சொத்தை அனுபவிக்க முடியாமல் தடைகளும் வரும் வாரமாகவும் இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமையும். நீண்ட நாட்களாக உங்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். வீடோ நிலமோ விற்ற பணம் விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தமிழ் மாத ஜோதிடம்

நவம்பர் 16-ம்தேதி முதல் டிசம்பர் 15-ம்தேதி வரை

கும்ப ராசிக்கு ஏழில் ராகு, எட்டில் குரு, பத்தில் சனி என்ற கிரகநிலை இருப்பது சாதகமற்ற ஒரு கிரக அமைப்பு. இவைகளெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்களுக்குத்தான். ஜோதிடவிதிப்படி அஷ்டம குரு முடிந்த பிறகு வாழ்க்கை நல்லபடியாக செட்டில் ஆகும் என்பது உறுதி. அதேநேரத்தில் சினிமாவில்தான் கதாநாயகன் ஒரேபாட்டில் கோடீஸ்வரனாகி விடுவார். நிஜத்தில் நிதானமாகத்தான் எதுவும் நடக்கும். இனிமேல் கும்பத்திற்கு நிதானமாக நன்மைகள் நடக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிக்கனமாக இருக்க வேண்டிய மாதமிது. ஏழில் இருக்கும் ராகு பணவரவுகளையும், வர வேண்டிய வருமானங்களையும் கட்டுப்படுத்துவார் அல்லது தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.

பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வரும் குழப்பங்களுக்கு நீங்கள்தான் காரணம் என்று பழி சுமத்தப்படுவீர்கள். சிலருக்கு நண்பர்களே எதிரியாவார்கள். பழகியவர்களே உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் சுற்றியுள்ளவர்கள் உங்களை வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். காரணமின்றி உங்களுக்கு உங்கள் மீதே கோபம் வரும். எந்த ஒரு விஷயமானாலும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

ஆண்டு பலன்

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக கோட்சாரரீதியில் சாதகமற்ற நிலைமைகள் கும்பத்திற்கு இருந்து வந்த அமைப்பு மாறி 2016 முதல் எல்லா வகையிலும் மேம்பட்ட ஒரு கிரகநிலைகள் கும்பத்திற்கு உருவாவதால் புதுவருடம் கும்பத்திற்கு நல்ல வருடமே. குறிப்பாக இதுவரை இரண்டு, எட்டாமிடங்களில் இருந்து கொண்டு கும்பத்திற்கு பணப்பிரச்சினைகளையும், தொழில்சிக்கல்களையும் கொடுத்து வந்த ராகு-கேதுக்கள் இந்த வருட ஆரம்பத்தில் அங்கிருந்து மாறுவது கும்பராசிக்கு பணவரவில் மாற்றங்களைக் கொடுத்து எல்லாவகையிலும் பொருளாதார மேன்மையைத் தரும் என்பது உறுதி.

இதுவரை மனதில் இருந்துவந்த எதிர்மறைஎண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி இருக்காது. இதுவரை உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது.

புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். பணவரவு மிகவும் நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. சேமிப்பு என்பதை மனதில் இருத்தி கொஞ்சமாவது சேமித்தீர்களானால் வாழ்க்கையில் ஆனந்தம்தான்.

கும்பராசி தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்லநேரம். எந்தக்காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான சூழல்கள் இருக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு அல்லது இரண்டும் இந்த வருடம் கண்டிப்பாக உண்டு. இந்த வருடம் உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் நல்ல நிலையில் இருக்கும்.

வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் இளைய வயது கும்பராசிக்காரர்களுக்கு நல்லசம்பளத்தில் வேலை கிடைக்கும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் வெகுவிரைவில் குணம் அடைவார்கள்.

மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் போக்குக்காட்டிக் கொண்டிருந்த வியாதிகள் இனிமேல் நல்ல பிள்ளையாக உங்களை விட்டு விலகும். கடந்த காலங்களில் மகன், மகள் விஷயத்தில் உங்களுக்கு கவலைகள் இருந்து வந்தன. சிலர் பிள்ளைகளுக்கு எத்தனையோ வரன் பார்த்தும் திருமணம் முடிக்க முடியாமல் இருந்தீர்கள். அவை அனைத்தும் இப்போது நீங்கி பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை இந்த வருடம் சிறப்பாகச் செய்வீர்கள்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் இந்த வருடம் இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். சிலர் தாத்தா, பாட்டியாக பதவிஉயர்வு பெறுவீர்கள். இதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு ஒழுங்காக செல்லாமல் கெட்டபெயர் எடுத்து உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கிய பிள்ளை இப்போது ஒழுங்காக சென்று உங்களை சந்தோஷப்படுத்துவார். கடந்த வருடங்களில் வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள்.

பூர்வீக சொத்து சம்பந்தமாக இதுவரை இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள், பங்காளித் தகராறு போன்றவைகள் இந்த வருடம் சுமுகமாக உங்களுக்கு லாபகரமாக முடிவுக்கு வரும். நேர்த்திக்கடன்களை செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக நல்லபடியாக நிறைவேற்றலாம். குலதெய் வவழிபாடு சரிவரச் செய்யாதவர்கள் உடனே அதைச் செய்யும்படி இருக்கும். வருட ஆரம்பத்தில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்து சுபவிரயங்கள் இருக்கும்.

திருமணம், கிரகப்பிரவேசம், பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற மங்கள நிகழ்ச்சிகளை வருட முற்பகுதியில் செய்வீர்கள். சரக்கு வாகனங்கள் இயக்குவோர், கூலியாட்களை வைத்து வேலை வாங்குவோர், மாற்றுத்திறனாளிகளை பராமரிப்போர், பெட்ரோல்பங்க், அநாதை விடுதிகளை நடத்துவோர், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், காலிமனை விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், காவல்பணி செய்வோர், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் போன்றவைகளில் பிரச்னை எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு இந்த வருடம் லாபம் வரும். அரசு, தனியார்துறை பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும் வருடமாக இருக்கும்.

இதுவரை தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மளமளவென தொழில் முன்னேற்றம் பெறுவதை கண்ணெதிரே காண்பீர்கள். அலுவலகங்களில் இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அவை அனைத்தும் மாறி உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வருடம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள். சகோதரவிஷயத்தில் மனவருத்தங்களும், இழப்புக்களும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் கெடுதலாக ஒன்றும் நடக்காது. மொத்தத்தில் இந்தப் புதுவருடம் கும்பராசிக்கு நன்மைகளையும் மேன்மைகளையும் தரும் என்பதால் எல்லாவகையிலும் இதைப் பயன்படுத்தி நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள் என்பது உறுதி.

துன்முகி வருடம்

(அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி, 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸீ, ஸோ, த ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

கடந்தகாலங்களில் கஷ்டங்களைச் சந்தித்து வந்த பெரும்பாலான கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த சில மாதங்களாக துன்பங்கள் நீங்கி லேசாக நன்மைகள் எட்டிப் பார்த்தன. அந்த நிலைமை புதிதாக பிறக்க இருக்கும் துன்முகி ஆண்டிலும் நீடித்து இந்த வருடமும் எவ்வித கஷ்டமும் இன்றி இறைவனின் அருளால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் ஆண்டாக துன்முகி ஆண்டு இருக்கும்.

இந்த ஆண்டு ஆகஸ்டுமாதம் நடக்கப்போகும் குருப்பெயர்ச்சியில் குருபகவான் எட்டாமிடத்திற்கு மாறுகிறார். எட்டாமிடம் மாற்றங்களைக் குறிக்கும் என்பதால் கும்பராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலம் மாற்றங்கள் நிறைந்த காலமாக இருக்கும். இந்த மாறுதல்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நிலையைவிட உயர்ந்த நிலையைத்தான் தரும்.

கும்பராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித் தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது உங்களுக்கு புரியும்.
எனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் வீடுமாற்றம், அலுவலக இட மாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கக் கூடிய கால கட்டம் இது. அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பாக பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும்.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும்.

தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைப்படாது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஆண்டு நல்ல பலன்களையே தரும்.

பெண்களுக்கும் இப்போது நல்லபலன்கள் உண்டு. பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.

குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். மேலும் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக் கூடிய பெண் ஒருவர் இருக்கும் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் பெரிதாக வராது.
புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். குறுப்பிட்ட சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும். மகான்களின் கருணைப் பார்வை உங்கள் மீது விழும்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு. மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதம் இன்றி இனிமேல் செய்து கொடுக்க முடியும்.

எந்த ஒரு விஷயமும் முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் இந்த வருடம் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். உழைப்பிற்கு அஞ்சாத உங்களுக்கு இது நல்ல ஆண்டுதான்.

 

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கும்பராசிக்கு சனிபகவான் ஒன்பதாமிடத்தில் இருந்து பத்தாமிடத்திற்கு மாறுகிறார். ஒரு பாபக்கிரகம் ராசிநாதனாகி திரிகோண வீட்டில் இருப்பதைவிட கேந்திர வீடான பத்தாம் வீட்டில் இருப்பது நல்ல நிலை என்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் நன்மைகள் அதிகம் இருக்கும்.

மேலும் கடந்த ஜுன் மாதம் முதல் குருபகவானும் சாதகமற்ற பலனைத் தரும் ஆறாமிடத்தில் இருந்து கும்ப ராசிக்கு கடன், நோய், எதிலும் தடை எதிர்ப்புகள் போன்ற பலன்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது பத்தாமிடத்திற்கு ராசிநாதன் சனி மாறி உச்சகுருவின் பார்வைக்குள் வருவதும் ஜுலை மாதத்திற்கு மேல் குருபவான் ஏழாம் இடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கப் போவதும் கும்பத்திற்கு மிகவும் நல்ல அமைப்பு என்பதால் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும் என்பது உறுதி.

அரசு ஊழியர்களுக்கு இந்தப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும். குறிப்பாக பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும். இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும்.

வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். ஜுலைக்குப் பிறகு உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. தாராளமான பணப்புழக்கம் இருக்கும்.

கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சொன்ன சொல் தவறாது. செலவுகள் நிச்சயம் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் கண்டிப்பாக இருக்கும். பணம் இருந்தாலே பாதிப்பிரச்சனை தீர்ந்து விடும் என்பதால் பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போது வாங்க முடியும். பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மிஷின், செல்போன் போன்ற பொருட்களை வாங்குவீர்கள்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு ஜுலை மாதத்திற்குப் பிறகு திருமணம் கூடி வரும்.

குடும்பத்தில் திருமணம் பூப்புனித நீராட்டுவிழா குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்ற பெண் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சுபகாரியங்கள் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்கும். உடன்பிறந்த சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது.

இளைய பருவத்தினர் மற்றும் மாணவர்கள் படிப்பையும் தங்களுக்குண்டான வேலையையும் மட்டும் அக்கறையுடன் கவனிப்பது நன்மைகளைத் தரும். சிலருக்கு இந்த நேரத்தில் படிப்பதை தவிர மற்ற விஷயங்களில் ஆர்வம் வந்து முடிவில் துன்பத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதால் இது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு எதிர்காலம் நன்றாக இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் உங்கள் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி. குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும். சொத்துச் சேர்க்கை இருக்கும்.

நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும். பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியினால் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும்.

நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். கணவர் மூலமாக நன்மையை பெறுவீர்கள். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

எழுத்து சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள், அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித்துறையினர், செல்போன் போன்ற நூதன எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர், விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது. சனிபகவானின் பார்வை நான்காம் வீட்டில் விழுவதால் வீடு வாகனம் தாயார் தன் சுகம் உயர்கல்வி போன்ற விஷயங்களில் சில எதிர்மறைபலன்களும் சாதகமற்ற நிலைகளும் இருக்கும்.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள். இருக்கும் வீட்டை விற்று விட்டு புதிய வீடு வாங்குவது, வீட்டை இடித்துக் கட்டுவது, புதுவீடு வாங்குவது போன்ற விஷயங்களில் இப்போது அவசரம் காட்டவேண்டாம்.

நான்காமிடம் சனியின் பார்வையால் கெடுவதால் நிதானம் தேவை. இருக்கும் வீட்டை விற்று வீடு விற்ற பணம் வேறுவகையில் செலவாகி, இருந்த சொந்த வீடு போய் வாடகை வீட்டில் குடியிருக்கச் செய்வார் சனி என்பதால் கவனமுடன் இருங்கள். அவசரப்படாதீர்கள். அதேபோல வாகனமாற்றம், புதிய அதிகவிலை உள்ள வாகனம் வாங்குதல் போன்றவற்றிலும் நிதானத்துடன் செயல்படுங்கள். வயதான தாயாரினால் மருத்துவச் செலவுகள் வரும்.

தாயாரின் உடல்நலத்தில் அலட்சியம் வேண்டாம். அவருக்கு சிறு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும். ஆலயப்பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு. இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும்.

வெளிநாட்டுப் பயணத்திற்கு இது வரையிருந்து வந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு பங்குச்சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது. மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சியில் நன்மைகள்தான் இருக்கும் என்பது உறுதி.

 

குருப்பெயர்ச்சி பலன்கள்

(அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி, 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸீ, ஸோ, த ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

கும்பராசிக்கு இதுவரை ஏழாமிடத்தில் இருந்த குருபகவான் தற்போது மாற்றங்களைத் தரும் எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டமகுரு எனும் நிலை பெறுகிறார்.

அஷ்டமகுரு என்றவுடன் யாருக்கும் ஒருவிதமான கலக்கம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் சுபக்கிரகங்கள் மறைவுஸ்தானத்தில் வரும்போது எதிர்காலத்திற்கான நன்மைகளையே செய்யும் என்பதையும் பாவக்கிரகங்களைப் போல சுபர்கள் கடுமையான கெடுபலன்களை எப்போதுமே செய்வதில்லை என்பதையும் புரிந்து கொண்டால் இங்கே கலக்கத்திற்கு இடமில்லை.

அஷ்டமச்சனி செய்யும் கெடுதல்களுக்கும் அஷ்டமகுருவால் வரும் விளைவுகளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. மேலும் ஒரு கிரகம் அந்த ராசிக்கு யோகராக இருக்கும் நிலையில் மறைவு பெற்றால் மட்டுமே கெடுபலன் தரும். ஒரு ராசிக்கு பாவராக இருக்கும் கிரகம் வலு இழந்தால் தீமையில்லை எனும் விதிப்படி கும்பராசிக்கு குருபகவான் எட்டில் மறைவது ஒரு வகையில் நன்மையைத்தான் தரும்.

எட்டில் மறையும் குருவால் எதிர்கால மாற்றங்கள் தற்போது உங்களுக்கு நடைபெறும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு நீங்கள் எந்த விதத்தில் வாழ்க்கையில் நிலை பெற இருக்கிறீர்களோ அந்த இடத்தை நோக்கி உங்களை நகர்த்தும் வேலையை குருபகவான் செய்வார்.

மேலும் இது போன்று எட்டாமிடத்திற்குக் கிரகங்கள் வரும் போது உங்களில் ஒரு சிலர் இப்போது இருப்பதை விட எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டியவர்கள் என்பதை உணராமல் சோம்பலுடன் தற்போது இருக்கும் சுமாரான நிலையே போதும் என்று ஒரே இடத்தில் உழன்று கொண்டிருக்கும் நிலையில் உங்களின் நன்மைக்காக இருக்கும் வேலையை விட்டு அந்த இடத்தை விட்டு உங்களை எட்டாமிட கிரகம் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

அப்போதைக்கு அந்த வெளியேற்றம் உங்களுக்கு கெடுதலாக தோன்றினாலும் வாழ்க்கையே முடிந்து விட்டதாகத் தெரிந்தாலும் அதன் பிறகு ஏற்படும் வாய்ப்புகளினால் முன்பை விட நீங்கள் நன்றாக இருக்கும் போது எதற்காக இந்த வெளியேற்றுதல் நடந்தது என்பது உங்களுக்குப் புரிய வரும். இதுவே எட்டாமிட சுபக்கிரகங்களின் விளையாட்டு.

எனவே இந்த அஷ்டமகுரு அமைப்பு கும்பராசிக்கு எதிர்காலத்தில் நீங்கள் நன்றாக இருக்கவேண்டியதற்கான மாற்றங்களை தற்போது தரும். அது சில காலம் கசப்பாக இருந்தாலும் எதிர்காலம் இனிக்கும் என்பதால் மாற்றங்களை எதிர்கொள்ள கும்பத்தினர் தயாராகுங்கள்.
குருபகவானின் பார்வை பனிரெண்டு, இரண்டு, நான்கு ஆகிய ஸ்தானங்களில் விழுந்து அவை வலுப்பெறுவதால் பனிரெண்டாமிடத்தின் சுபகாரகத்துவமான வெளிமாநிலம், வெளிதேசம் போன்றவற்றில் பிழைக்கும் வாய்ப்பு சிலருக்கு இப்போது ஏற்பட்டு உள்நாட்டில் இருக்கும் வேலையை விட அதிக சம்பளத்தில் சிலர் வெளிநாடு செல்வீர்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாட்டுக் கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பு கிடைப்பதும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமைவதும், வெளிதேச நட்பு மூலம் தொழில் லாபங்கள் இருப்பதும் வடக்கு நோக்கிச் செல்வதும் இந்த குருப்பெயர்ச்சியால் நடக்கும்.

குருபகவான் தனம், வாக்கு, குடும்பஸ்தானம் எனும் இரண்டாமிடத்தை வலுப்பெற்றுப் பார்ப்பதால் இந்தக் குருப்பெயர்ச்சியினால் உங்களுக்கு பணவரவில் தடைகளோ, பொருளாதார கஷ்டங்களோ இருக்காது. வருமானம் சீராக இருக்கும் என்பதால் எவ்வித கஷ்டங்களும் உங்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.

அதேபோல வாக்குஸ்தானம் வலுப்பெறுவதால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். சிலருக்கு குடும்பம் அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் வீடுமாற்றம், அலுவலக இட மாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கக் கூடிய கால கட்டம் இது.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள்.

தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைப்படாது.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களையே தரும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.

குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். மேலும் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக் கூடிய பெண் ஒருவர் இருக்கும் குடும்பத்தில் பிரச்சனைகள் எதுவும் பெரிதாக வராது.
புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். குறுப்பிட்ட சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும். மகான்களின் கருணைப் பார்வை உங்கள் மீது விழும்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.
குருபகவான் முயற்சி ஸ்தானம் எனப்படும் மூன்றுக்குடையவராகி எட்டில் மறைவதால் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது

பரிகாரங்கள்:

ஏழில் ராகு எட்டில் குரு என்ற அமைப்பு இருப்பதால் வேலூர் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் கயிலை ஞானகுரு ஸ்ரீலஸ்ரீ முரளிதர சுவாமிகளால் ஒரே கல்லில் ஸ்தாபிக்கப்பட்ட ராகுகேதுக்களை வணங்கி முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். மேலும் அன்னை மீனாட்சியின் தவப்புதல்வர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் அருள் பொழியும் திருமுகத்தை தரிசியுங்கள். அனைத்து பிரச்சனைகளும் பஞ்சாய் பறந்து போகும்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

பெருந்தன்மை கொண்ட மனமும், பிறரைக் கவர்ந்திழுக்கும் பேச்சாற்றலும் பெற்ற கும்ப ராசி நேயர்களே!

பணபலத்தால் மற்றவர்கள் சாதிக்க முடியாத காரியத்தை நீங்கள் பக்கபலமாக இருக்கும் நண்பர்களால் சாதித்துக் காட்டுவீர்கள். அரசியல் முதல் ஆன்மிகம் வரை நீங்கள் அத்துப்படியாக வைத்திருந்தாலும், உங்களுக்கு உள்ளூர பயம் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் மனதில் உறுதி மட்டும் இருந்தால் மகத்தான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலும்.

பதுமையைப் போல வாழ உங்களுக்குப் பிடிக்காது. பம்பரமாய்ச் சுழன்று பணிபுரிவீர்கள். உங்களுக்கு முட்டுக்கட்டையாக முன்கோபம் இருக்கும். திட்டம் தீட்டுவதிலும் சமர்த்தர்கள் நீங்கள். அடுத்தவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயத்தைப் பெறமுடியும் என்பதை நடுத்தர வயதில் தான் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

‘சிக்கனத்தின் சிகரம்’ என்று கூட உங்களை வர்ணிக்கலாம். வீட்டில் பணத்தை வைத்துவிட்டுப் பழகியவர்களிடம் தக்க விதத்தில் கவர்ச்சியாகப் பேசிக் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள்.

எண்ணற்ற கருத்துக்களை இதயத்தில் பதித்து வைத்திருந்தாலும், எதுவும் தெரியாததைப் போல காட்சி தரும் உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சப்தம ராகுவால் சஞ்சலங்கள் கூடும்!
ஜென்ம கேதுவால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வெளிப் பயணத்தில் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்கப்போகிறார்கள்.

இருப்பினும் ஜென்மத்தில் கேதுவும், ஏழில் ராகுவும் வருவது அவ்வளவு நல்லதல்ல. சர்ப்ப தோஷ ஆதிக்கம் மிகுந்திருப்பதால் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் ராகு–கேதுக்களின் பலமறிந்து யோகம் தரும் நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலங் களில் சர்ப்ப சாந்திகளை மேற்கொள்வது அவசியமாகும். அப்பொழுதுதான் சந்தோஷத்தை நிலையாக வைத்திருக்க இயலும்.

ஜென்ம கேதுவால் சிறப்பான பலன்கள் ஏற்படுமா? என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஆன்மிக நாட்டத்தை அதிகரித்து அதன் மூலமாக உங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அருளாளர்களின் தொடர்பு அதிகரிக்கும். அடுத்து நடக்கப் போவது என்ன? என்று யோசிக்கத் தூண்டும். கவுரவம், அந்தஸ்து உயரும்.

குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் உங்கள் சொற்களை மீறி நடக்கிறார்களே என்று சொல்வீர்கள். ஆனால் மற்றவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்–வாங்கல்களில் இதுவரை சந்தித்த ஏமாற்றங்களை இனி ஈடுகட்டப் போகிறீர்கள். இருந்தாலும், ஜென்ம கேது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். மருத்துவச் செலவுகள் கூடும்.

சப்தம ராகுவின் சஞ்சாரம்!

சப்தம ராகு நீண்ட தூரப் பயணங்களை ஒரு சிலருக்கு வர வழைத்துக் கொடுக்கும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்க வேண்டுமானால் கூட்டாளிகளின் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்து முடிவடுத்து இணைத்துக் கொள்ளுங்கள். ஞாபக மறதி அதிகரிக் கும். பொல்லாதவர்கள் உங்களைவிட்டு விலக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

குடும்பத்தில் அமைதிக் குறைவு ஏற்படாதிருக்க விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், பொறுமையும் உங்களுக்கு அவசியம் தேவை. குடும்பத் தகவல்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலமும் ஒரு சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம். என்பதால் அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. நிலம், வீடு வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும் என்றாலும் கூட பத்திரப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

குடும்பத்தினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதை முன்னிட்டு அதிக விரயங்கள் ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் பழைய வீட்டை பழுது பார்ப்பதில் ஆர்வம் காட்டலாம். வாகனங்களைப் புதுப்பிக்கலாம். கட்டிடம் கட்டும் பணி விட்டு விட்டு நடந்தாலும் கூட ஓரளவு முடிவதற்கான வாய்ப்பு உண்டு.

அரசியல் மற்றும் பொறுப்பில் இருப்பவர்கள், மேலிடத்தில் உங்கள் பெயர் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது. உ த்தியோகத்தில் உள்ளவர்கள் பகை பாராட்டாமல் உடன் பணிபுரிபவர்களோடு அனுசரித்துச்செல்ல வேண்டும். மேலதி காரிகளின் அன்புக்கு பாத்திரமாவது அரிது.

சலுகைகள் தாமதபடலாம். தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பழைய பங்குதாரர்கள் விலகிக் கொள்ள முன்வருவதாகச் சொல்வர். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குஉரிய பங்கைக் கொடுத்து விட்டுப் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொண்டு தொழிலை வளப்படுத்திக் கொள்வது நல்லது. புதியவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். ஏற்றம் வரும் என்று நீங்கள் நினைத்த செயல்களில் ஏமாற்றம் வந்து சேரலாம்.

பிறருக்கு பொறுப்பு சொல்லித் தொகை வாங்கிக் கொடுப்பதாக இருந்தால் நம்பிக்கைக்கு உரியவர் களாக இருக்கிறார்களா? என்பதை அறிந்து செயல்படுவதே நல்லது. இதுபோன்ற காலங்களில் நீங்கள் யாகங்களை வைப்பதன் மூலம் யோகங்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

சிறப்பு வழிபாடுகளைச் செய்வதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். செல்வ நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உள்ளூர் யோகம் முதல் வெளிமாநிலம் செல்லும் யோகம் வரை வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ள இயலும்.

பாதசார அடிப்படையில் ராகு தரும் பலன்கள்!

ராகு பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): கல்யாண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். சில வரன்கள் விட்டுப் போனாலும் கூட அதே வரன் திரும்பி வந்து முடிவடையலாம். போட்டிகளுக்கு மத்தியில் வியாபாரம் ஓரளவு நடைபெறும். வாடிக்கையாளர்களுடன் பேசும் பொழுது கோபத்தைக் குறைத்துக்கொள்வதும், பகைத்துக்கொள்ளாமல் இருப்பதும் நல்லது. உஷ்ண நோய்களுக்கு ஆளாக நேரிடும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம்.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): இடம், பூமி சேர்க்கை ஏற்பட வழிபிறக்கும். இழந்ததை ஈடுசெய்ய புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தாய்வழி ஆதரவு கூடும். பூர்வீக சொத்துக்களால் கணிசமான தொகை கை களில் புரளும். பாகப்பிரிவினைகள் பல வருடங்களாக முடிவடையாமல் இழுத்தடிக்கிறார்களே என்று நினைத்தவர்கள் இப்போது மகிழ்ச்சியடையும் விதத்தில் முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கலாம்.

ராகு சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): மனச்சஞ்சலங்கள் அதிகரிக்கும். மறதி கூடும். இனம்புரியாத கவலை இதயத்தை வாட்டும். ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டு அதனால் விரயம் வந்துவிட்டதே என்று ஆதங்கப் படுவீர்கள். நண்பர்கள் மட்டுமல்ல உறவினர்களும் வெறுப்புணர்ச்சியோடு பழகலாம். உங்களுக்கு இது போன்ற காலங்களில் விட்டுக்கொடுக்கும் தன்மை வேண்டும். நீண்ட நாளாக உடலில் இருந்த பிரச்சினைகள் இப்பொழுது விஸ்வரூபம் எடுக்கலாம். வைத்தியச் செலவு வாடிக்கையாகி விட்டதே என்று நினைப்பீர்கள்.

பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!

கேது பகவான் குரு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கூட்டு முயற்சிகளில் வெற்றி உண்டு. அரைகுறையாக நின்ற வேலைகள் துரிதமாக முடிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். குழந்தை பாக்கியம் வேண்டிக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். புதிய தொழில் தொடங்க முன்வருவீர்கள். அதற்கு போதுமான அளவு பொருளாதார உதவி கிடைக்க உறவினர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக பெரிய பொறுப்புகள் வந்து சேரும்.

கேது பகவான் ராகுசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): தைரியமும், தன்னம்பிக்கையும் குறையலாம். தனவரவு வந்தாலும் மறுநிமிடமே செலவாகி விடும். நூதனப்பொருட்களை வாங்க முன்வருவீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதியும், வேலை வாய்ப்பை முன்னிட்டும் செலவிடும் சூழ்நிலை உண்டு. வாங்கல்– கொடுக்கல்களில் கவனம் தேவை.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): சகோதர சச்சரவு அகலும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து செயல்படுவர். சொத்து விற்பனையால் தனலாபம் கிடைத்து வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

ஜென்ம கேதுவால் சிறப்புகள் வந்து சேரவும், ஏழாமிடத்து ராகுவால் இனிய பலன்கள் கிடைக்கவும், சனிக்கிழமை தோறும் ஆஞ்ச நேயரை வழிபட்டு வருவது நல்லது. தேய்பிறை அஷ்டமியன்று விரதமிருந்து வைரவரை வழிபட்டு வருவதன் மூலம் வளமும், நலமும் வந்து சேரும்.