search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார்.
    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி, பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

    கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதைக்கும் மாஸ்கோவுக்கும் சம்பந்தம் இருப்பதால் தான் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்

    மேலும் இப்படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட உள்ளதாக தகவல் வெளியானது.




    இந்நிலையில் திரிஷாவுக்கு பதில் தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அந்த நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்.
    • படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படஹ்ட்தின் மூலம் தான் அறிமுகமாகிறார்கள்.கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்நிலையில் படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார். தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
    • சூரியும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

    உலகப்பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. ஜாதி, மத பாகுபாடின்றி மக்கள் ஒன்று கூடி மகிழும் ஒற்றுமை திருவிழாவான இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    வி.ஐ.பி.க்கள் வரிசை என்றில்லாமல் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரியும் மக்களோடு மக்களாக கலந்துகொண்டார். என்னதான் மதுரையில் பிறந்து வளர்ந்த போதிலும், அவரை பார்த்ததும் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    அவரும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முழுவதுமாக கண்டு ரசித்த பின்னர் அழகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார்.
    • அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய் , எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வனங்கான், பார்டர், AV 36 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    இப்படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என படக்கிழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
    • விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    நடிகர் விக்ரம் 'சித்தா' பட இயக்குநர் அருண்குமாருடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் டீசர் சீயான் விக்ரமின் பிறந்தநாளன்று வெளியாகி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

    விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அதைத்தொடர்ந்து படத்தின் புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் மலையாள நடிகரான சித்திக் நடிக்கவிருக்கிறார் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவர் 350 மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

    டைட்டில் டீசரில் மளிகை கடையில் வேலை செய்யும் விக்ரம் திடீர் என்று துப்பாக்கி எடுத்து சுடும் காட்சிகள் மிரட்டலாக உள்ளது. மற்ற படங்களில் இல்லாத ஒரு விஷயம் இப்படத்தில் உள்ளது. படத்தலைப்பில் வீர தீர சூரன் பாகம் - 2 என்று வெளியிட்டுள்ளனர். முதலில் பாகம் இரண்டை வெளியிட்டபின் பாகம் ஒன்றை வெளியிடப்போகிறார்கள்.

    இந்த வீடியோவில் விக்ரமின் தோற்றம் நம் கவனத்தை கவர்கிறது இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதுவரை யூடியூபில் 50 லட்ச பார்வைகளை பெற்று டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது.
    • சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

     லோகேஷ் கனகராஜ் அவரது படங்களின் ப்ரோமோ வீடியோவை மிக வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் கதையோடு ஒரு அங்கமாக அந்த ப்ரோமோ வீடியோக்களை எடுப்பதில் திறம் பெற்றவர். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று எல்லாரும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் 171- வது படமான கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

    இதற்கு முன் விக்ரம் படத்தின் ப்ரோமொ வீடியோவில் வரும் 'ஆரம்பிக்கலாங்களா', லியோ படத்தில் வரும் 'ப்லடி ஸ்வீட்' வசனங்கள் மிகவும் வைரலாகியது.

    அதைத் தொடர்ந்து கூலி படத்தின் ப்ரோமோ வீடியோவில் ஒரு கேங்கஸ்டர் கும்பல் துறைமுகத்தில் பல வகையான தங்கத்தை கடத்தி அதை அனுப்புவதற்கு பேக் பண்ணி கொண்டு இருக்கின்றனர். அப்பொழுது ஒரு ஃபோன்காலில் துறைமுகத்தில் செக்யூரிட்டி அடித்து விட்டு ஒருவன் உள்ளே வருகிறான் என்ற தகவலை கூறுகிறான்.

    ரஜினிகாந்த் உள்ளே வந்து அனைவரையும் மாஸாகவும், ஸ்டைலாகவும் அடிக்கிறார். அடிக்கும் பொழுது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த 'ரங்கா' படத்தில் புகழ் பெற்ற 'அப்பாவும் தாத்தாவும்" என்ற வசனத்தை பேசிக்கொண்டே அடிக்கிறார்.

    அடித்து முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜின் ஃபைனல் டச்சாக இதில் ரஜினிகாந்து 'முடிச்சடலாம் மா!!' என்ற வசனத்தை பேசுகிறார். தற்பொழுது இந்த டைடில் டீசர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. . இதுவரை யூடியூபில் 50 லட்ச பார்வைகளை பெற்று டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது.

    ரஜினிகாந்த இதற்கு முன் உழைப்பாளி, மன்னன், முள்ளும் மலரும் போன்ற படங்களில் கூலி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

    இதற்குமுன் 1983 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் மன்மோகன் தேசாய் இயக்கத்தில் இந்தி திரைப்படமான கூலி வெளியாகியது.

    1991 ஆம் ஆண்டு சுரேஷ் பாபு தயாரிப்பில் ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் வெங்கடேஷ் மற்றும் தபு நடிப்பில் தெலுங்கு திரைப்படமான கூலி வெளியாகியது.

    1995 ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் சரத்குமார் மற்றும் மீனா இணைந்து நடித்து வெளியான தமிழ் திரைப்படமான கூலி வெளியாகியது.

     

    இதைத்தொடர்ந்து தற்பொழுது ரஜிகாந்தின் 171 - வது படத்திற்கும் 'கூலி' என்ற தலைப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் லோகேஷின் சினிமாடிக் யூனிவர்சில் சேராது என தெரிவித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்ற போகிறார்கள். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை குறித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதுவரை சுமார் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி 4 தேசிய விருதுகள், 33 மாநில அரசு விருதுகளை வாங்கியுள்ளார்.
    • இதுவரை 500 இசைக் கச்சேரிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

    தென் இந்தியாவின் நைட்டிங்கேள் என்று அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி. "அன்னக்கிளி உன்னை தேடுதே", "மச்சானை பார்த்தீங்களா", "கண்மணியே காதல் என்பது" உள்பட பல பாடல்களை இளையராஜா இசையிலும், எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ஆகியோரின் இசையிலும் பாடி இன்று வரை தனது மெல்லிய குரலால் மனதை மயக்கி வருபவர் எஸ்.ஜானகி.

    இதுவரை சுமார் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவர் 4 தேசிய விருதுகள், 33 மாநில அரசு விருதுகளை வாங்கியுள்ளார். இதுவரை 500 இசைக் கச்சேரிகளில் பாடல்களை பாடியுள்ளார். இளமையும், மழலையும் நிறைந்த குரலுக்கு சொந்தக்காரரான பாடகி எஸ்.ஜானகி இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    அவருக்கு பாடகி சித்ரா, சுஜாதா உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • திரிஷாவை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் திரிஷா.. திரிஷா என விண்ணை முட்டும் அளவுக்கு கோஷம் எழுப்பினர்.
    • சில ரசிகர்கள் உற்சாக மிகுதியில் நடிகை திரிஷாவை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தனர்.

    தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இன்னுமும் நடிகை திரிஷா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

    நடிகை திரிஷா தற்போது மலையாளம் மொழியில் தயாராகி வரும் ஐடென்டிட்டி என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் டோமினோ தாமஸ் நடித்து வருகிறார். மேலும் நடிகர் வினய் நடித்து வருகிறார். அகில்பவுல் படத்தை இயக்குகிறார்.

    இதற்கான படப்பிடிப்பு ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த சிங்கம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்காக அந்த மில்லில் பல கோடி மதிப்பில் செட் அமைத்து நடிகை திரிஷா, நடிகர் டோவினோ தாமஸ் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் நடிகை திரிஷா பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இதை அறிந்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். நடிகை திரிஷா.. திரிஷா.. என்று கோஷம் எழுப்பினர். அப்போது படப்பிடிப்பு குழுவினர் தயவு செய்து படப்பிடிப்புக்கு தொந்தரவு செய்யாமல் இங்கிருந்து கலைந்து சென்று விடுங்கள் என்று கூறினர்.

    ஆனால் ரசிகர்கள் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் திரிஷாவை பார்க்காமல் இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்று திரிஷா கேரவனை சூழ்ந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து நடிகை திரிஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் கேரவனில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கையை அசைத்தார்.

    திரிஷாவை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் திரிஷா.. திரிஷா என விண்ணை முட்டும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். பலர் தங்கள் செல்போனில் நடிகை திரிஷாவை படம் எடுத்துக் கொண்டனர். சில ரசிகர்கள் உற்சாக மிகுதியில் நடிகை திரிஷாவை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தனர். சிறிது நேரம் ரசிகர்களை பார்த்து கையசைத்த நடிகை திரிஷா மீண்டும் கேரவனுக்குள் சென்று விட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இன்றும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.


    • இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது
    • சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    'பேட்ட' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 24, பேட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இந்நிலையில் படத்தில் நடிக்க காஸ்டிங் கால் போஸ்டரை கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 8 வயது முதல் 80 வயது வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஆண் மற்றும் பெண் வரம்பில்லை எனவும் மொழி தடையில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    விண்ணப்பிப்பவர்கள் அவர்கள் நடிப்பை பிரதிபலிக்கும் விதமாக 1 முதல் 3 நிமிட வீடியோவை பெயர் மற்றும் பிற விவரங்களை மென்ஷன் செய்து 7550011050 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என அந்த போஸ்டரில் குறிப்பிட்டள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மிர்ச்சி சிவாவுடன் ஹரிஷா, ராதா ரவி, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர், ரகு ஆகியோர் நடித்துள்ளனர்.
    • இந்த பாடலை பிரேம் ஜி, ஸ்டீபன் செக்கரியா மற்றும் கர்ணன் கணபதி இணைந்து பாடியுள்ளனர்.

    சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். எட்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார். மிர்ச்சி சிவாவுடன், ஹரிஷா, ராதா ரவி, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர், ரகு ஆகியோர் நடித்துள்ளனர்.

    சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடலான 'வீ ஆர் நாட் தி சேம்' சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான 'மண்டைக்கு சூரு ஏறுதே' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

    இந்த பாடலை பிரேம் ஜி, ஸ்டீபன் செக்கரியா மற்றும் கர்ணன் கணபதி இணைந்து பாடியுள்ளனர்.

    ஸ்டீபன் செக்கரியா சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் பாடகர். அவர் எழுதி பாடிய உசுரையே தொலச்சேன், சகியே, விலகாதே, அடிப்பெண்ணே போன்ற பாடல்கள் யூடியூபில் மிகவும் வைரல்.

    ஸ்டீபன் செக்கரியா இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, மாற்றான், மாரி போன்ற பல ஹிட்டான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
    • போலிஸ் அதிகாரியாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்துள்ளார்.

    2007 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான லக்ஷ்மி கல்யாணம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக காஜல் அகர்வால் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து 'சந்தாமாமா' படத்தின் மூலம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார்.

    2009 ஆம் ஆண்டு ராஜமௌளி இயக்கத்தில் வெளிவந்த 'மகதீரா' படம் காஜல் அகர்வாலுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் டார்லிங், பிருந்தாவனம், மிஸ்டர் பெர்ஃபக்ட், நாயக், பிசின்ஸ் மேன் போன்ற பிரபல படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தார்.

    பின் 2008 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்தார்.

    நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, மாற்றான், மாரி போன்ற பல ஹிட்டான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

    கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான கருங்காப்பியம் படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து தெலுன்கு படமான தற்பொழுது சத்யபாமா படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சுமன் சிக்கலா இப்படத்தை இயக்கியுள்ளார். காஜல் அகர்வாலுடன் பிரகாஷ் ராஜ் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஏசிபி போலிஸ் அதிகாரியாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்துள்ளார். படம் வரும் மே 17 ஆம் தேதி வெலியாகிறது என படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதையொட்டி காஜல் அகர்வாலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ்நாட்டிற்கு நிச்சயம் மாற்றம் தேவை. 2026-ல் மற்றவர்கள் வருவதற்கு ஏன் வழி கொடுக்கிறீர்கள்.
    • தேர்தலில் நான் சைக்கிளில் சென்று வாக்களித்தற்கு காரணம், என்னிடம் வண்டியில்லை.

    நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார். அவரது இயக்கத்தில் 3- வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34- வது படமாகும்.

    இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.




    இப்படம் வருகிற 26- ந்தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் "ரத்னம்" பட பிரமோஷன் பணிகளில் விஷால் ஈடுபட்டு உள்ளார். சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஷால் கூறியதாவது :-

    பாராளுமன்ற தேர்தலில் நான் சைக்கிளில் சென்று வாக்களித்தற்கு காரணம், விஜய்யின் இன்ஸ்பிரேஷன் என சொல்ல முடியாது. என்னிடம் வண்டியில்லை. அப்பா, அம்மாவிடம் வண்டி உள்ளது. என்னுடைய வண்டியை விற்றுவிட்டேன்.



    நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவரது தன்னம்பிக்கை பிடிக்கும். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷன் மோசமாக உள்ளது.

    'டிராபிக் ஜாம்' இல்லாமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்பதற்காக சைக்கிளில் சென்றேன் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் மாற்றம் தேவை. 2026-ல் மற்றவர்கள் வருவதற்கு ஏன் வழி கொடுக்கிறீர்கள்.

    எல்லோரும் நல்லது செய்யவே அரசியலுக்கு வருகின்றனர்.நீங்கள் நல்லது செய்துவிட்டால் நாங்கள் ஏன் எங்கள் தொழிலை விட்டு அரசியலுக்கு வருகிறோம்.




    தமிழ்நாட்டிற்கு மாற்றம் என்பது நிச்சயம் தேவைப்படுகிறது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தால், என்னைப் போன்ற வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டு சென்று விடுவோம்.

    திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் நீங்கள் செய்ய வேண்டியது மக்கள் நலப்பணிகள். மக்களுக்கு ஏதாவது என்றால் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எம்எல்ஏ, எம்.பிக்க்கள் மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். என்ன கொடுமை இது? "என்றார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×