search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாடம்
    X

    பாடம்

    மொழி திணிப்பு விவகாரத்தில் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் நடக்கும் போராட்டமாக உருவாகி இருக்கும் ‘பாடம்’ படத்தின் முன்னோட்டம்.
    ரோலன் மூவிஸ் சார்பில் ஜிபின் பி.எஸ். தயாரித்துள்ள படம் ‘பாடம்’.

    இதில் புதுமுகங்கள் கார்த்திக், மோனா ஆகியோர் நாயகன்- நாயகியாக நடித்துள்ளனர். விஜித் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    இசை - கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு - மனோ, படத்தொகுப்பு - ஜிபினின், ஸ்டண்ட் - ஆக்‌ஷன் பிரகாஷ், கலை - பழனிவேல். இயக்கம் - ராஜசேகர். இவர் இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக பணி புரிந்தவர். படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் மீது ஆங்கில கல்வியையும், மொழியையும் திணிப்பதால் நடக்கும் சீர்கேடுகள் பற்றிய படம் இது. ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். வாழ்க்கை முறையல்ல. இது பலருக்கு புரிவதில்லை. இதை மையமாக வைத்து ஒரு மாணவனுக்கும், ஆசிரியருக்கும் நடக்கும் போராட்டமே இந்த படம்.



    இந்த போரில் மாணவன் தனது சவால்களை எப்படியெல்லாம் சந்தித்து வெற்றி பெற்றான் என்பதுதான் இந்த படத்தின் கதை. நமது கல்வி விதிமுறையையும், பெற்றோரின் மனநிலையை யும்,மாணவர்கள் மீது சுமத்தப்படும் சமுதாய அழுத்தங்களையும் இந்த படம் அலசும்.

    சமீபத்தில் ஒரு உயிரை பறித்த ஒரு முக்கிய பிரச்சினை பற்றி இந்த படம் பேசும். எனவே எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் ‘பாடம்’ கதையுடன் இணைந்து ரசித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

    Next Story
    ×