search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தங்கரதம்
    X

    தங்கரதம்

    என்.டி.சி. மீடியா மற்றும் வீகேர் புரொடக்‌ஷன் தயாரித்துள்ள படமன ‘தங்கரதம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    என்.டி.சி. மீடியா மற்றும் வீகேர் புரொடக்‌ஷன் தயாரித்துள்ள படம் ‘தங்கரதம்’.

    இந்த படத்தில் நாயகன் வெற்றி, நாயகி அதிதி கிருஷ்ணா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சவுந்தரராஜா, நான்  கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லொள்ளுசபா சாமிநாதன், வெள்ளபுறா பாண்டி, ராண்டில்யா உள்பட பலர்  நடிக்கிறார்கள்.

    இசை-டோனி பிரிட்ஜோ, ஒளிப்பதிவு- ஜேக்கப் ரத்தினராஜ், படத்தொகுப்பு-சுரேஷ் அர்ஸ், கலை-என்.கே.பாலமுருகன்,  ஸ்டண்ட்-பயர் கார்த்திக், நடனம்- தீனா, தயாரிப்பு- சி.எம்.வர்க்கீஸ் வெளியீடு- எஸ்.பி.ஐ.சினிமாஸ், வெங்கீஸ்பிலிம் இன்டர்  நே‌ஷனல்.



    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- பாலமுருகன்.

    ‘தங்கரதம்’ படம் பற்றி கூறிய அவர்...

    “ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கிராமம் கரியாம்பட்டி. இங்கிருந்து தினமும் இரண்டு டெம்போக்களில் ஒட்டன் சத்திரம்  மார்க்கெட்டிற்கு காய்கறிகள் போகும். ஒன்று தங்கரதம் டெம்போ, மற்றொன்று பரமன் டெம்போ. தங்கரதம் டெம்போவின்  டிரைவர் நாயகன் செல்வா, பரமன் டெம்போவின் டிரைவர் வில்லன் பரமன், காய்கறி மூட்டைகள் ஏற்றுவதிலும் மார்க்கெட்டுக்கு  முந்திக் கொண்டு போவதிலும் இவர்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட மோதல் பகையாக வளர்கிறது. இந்த சூழ்நிலையில்  உண்மையான ஒரு காதலுக்கும், விசுவாசத்துக்கும் இடையில் நடக்கிற உணர்வு போராட்டத்தில் எது ஜெயிக்கிறது என்பது தான்  படத்தின் கதை” என்றார்.
    Next Story
    ×