search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பள்ளி பருவத்திலே
    X

    பள்ளி பருவத்திலே

    வி.கே.பி.டி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பள்ளி பருவத்திலே’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    வி.கே.பி.டி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பள்ளி பருவத்திலே’.

    இந்த படத்தில் இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா  அறிமுகமாகிறார். இவர் கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர்களுடன் கே.எஸ்.ரவி குமார், ஊர்வசி,  தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு, ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- வினோத்குமார், இசை-விஜய் நாராயணன், இவர் இளையராஜா, ஏ.ஆர்.ரகு மான் ஆகியோரிடம் உதவியாளராக  இருந்தவர்.பாடல்கள் - வைரமுத்து, வாசுகோகிலா, எம்.ஜி. சாரதா, கலை- ஜான்பிரிட்டோ,எடிட்டிங்-சுரஷ்அர்ஷ், நடனம்- தினா,  ஸ்டண்ட் -சுப்ரீம்சுந்தர், தயாரிப்பு- டி.வேலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வாசுதேவ் பாஸ்கர். இவர் படம் பற்றி  கூறும்போது...

    “நிஜ சம்பவங்களின் தொகுப்பே கதையாக உருவாக்கப் பட்டுள்ளது. தஞ்சையில் உள்ள ஆம்பளாபட்டு என்ற கிராமத்தில் நான்  படித்த பள்ளிக் கூடத்தில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்ய மானது. இங்கு படித்த பலர் உயர்ந்த நிலையில் இருக் கிறார்கள்.  இதற்கு காரணமான ஆசிரியர் சாரங்கன் கதாப்பாத்திரத்தை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றிருக்கிறார். ஊர்வசி பாத்திரமும் பேசப்படும்.



    இன்றைய கால கட்டத்தில் அழிந்து வரும் விவசாயத்தை காக்கும் பொருட்டு படப்பிடிப்பு நடைபெறும் தஞ்சை மாவட்டத்தில்,  விவசாயிகளுக்கு 100 பசு மாடுகளை தானமாக கொடுக்க உள்ளோம். தொடக்க விழா நடைபெற்ற பிப்ரவரி 12 முதல் படப்பிடிப்பு  முடிவடை வதற்குள் 100 மாடுகளை வழங்குவோம்.

    ‘பள்ளி பருவத்திலே’ கிராமத்து காமெடி படமாக உருவாகிறது” என்றார்.
    Next Story
    ×