search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நிபுணன்
    X

    நிபுணன்

    பேஷன் பிலிம் பேக்டரி வழங்க அருண் வைத்தியநாதன் தயாரித்து இயக்கும் படம், `நிபுணன்'. இதில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். இவருடன் பிரசன்னா, வைபவ், சுமன், வரலட்சுமி, சுஹாசினி,சுருதி ஹரிஹரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
    பேஷன் பிலிம் பேக்டரி வழங்க அருண் வைத்தியநாதன் தயாரித்து இயக்கும் படம், `நிபுணன்'. இதில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். இவருடன் பிரசன்னா, வைபவ், சுமன், வரலட்சுமி, சுஹாசினி,சுருதி ஹரிஹரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு- அரவிந்த் கிருஷ்ணா, இசை- எஸ்.நவீன், படத்தொகுப்பு- சதீஷ்சூரியா, திரைக்கதை-அருண் வைத்தியநாதன், ஆனந்த ராகவ், கலை- ஆறுசாமி, ஸ்டண்ட்- அன்பறிவ், சுதீஷ், தயாரிப்பு- உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், அருண் வைத்தியநாதன்.

    இயக்கம்- அருண் வைத்தியநாதன். துப்பறியும் கதையாக உருவாகும் `நிபுணன்' படத்தில் அர்ஜுன் துப்பு துலக்கும் போலீஸ் குழுவின் தலைமை அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு கீழ் காக்கிசட்டை அணியாமல் சாதாரண உடையில் மக்களுடன் மக்களாக கலந்து துப்பு துலக்கும் ரகசிய போலீஸ் அதிகாரிகளாக பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர்  நடிக்கிறார்கள்.

    வழக்கமான பாணியில் இல்லாமல் புதிய கோணத்தில் `நிபுணன்' படம் தயாராவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படம் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் தயார் ஆகிறது.
    Next Story
    ×