search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காதலின் பொன் வீதியில்
    X

    காதலின் பொன் வீதியில்

    ஸ்ரீராம் பிலிம் இண்ட்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கும் படம் `காதலின் பொன் வீதியில்'. இதில், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா துடுக்கான இளம் நாயகியாக நடிக்கிறார். நாயகனாக சந்தன் அறிமுகம் ஆகிறார்.
    ஸ்ரீராம் பிலிம் இண்ட்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கும் படம் `காதலின் பொன் வீதியில்'. இதில், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா துடுக்கான இளம் நாயகியாக நடிக்கிறார். நாயகனாக சந்தன் அறிமுகம் ஆகிறார். இவர் நடிப்பு கல்லூரியில் படித்து முறையான பயிற்சி பெற்றவர்.

    சந்தன்-ஐஸ்வர்யா அர்ஜுன் ஜோடியுடன் டைரக்டர் கே.விஸ்வநாத்,  சுஹாசினி, நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகிபாபு, பிளாக் பாண்டி, போண்டாமணி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    எச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். இசை-ஜெஸ்ஸி கிப்ட்.  படத்தொகுப்பு- கே.கே., ஸ்டண்ட்- `கிக்ஆஸ்' காளி, இணைதயாரிப்பு-பாலாஜி.
    கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு- இயக்கம்- அர்ஜுன். இளமை ததும்பும் காதல் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதையாக இது உருவாகிறது.

    சண்டை காட்சிகளுடன், நகைச்சுவையும் இடம் பெறுகிறது. `காதலின் பொன் வீதியில்' முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத், டெல்லியிலும், அடுத்து தர்மசாலா, லடாக் பகுதிகளிலும் நடைபெறுகிறது.
    Next Story
    ×