search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காதலர் தினத்தை குறி வைக்கும் விஜய் சேதுபதி
    X

    காதலர் தினத்தை குறி வைக்கும் விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
    விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் ‘கவண்’, ‘விக்ரம் வேதா’, ‘புரியாத புதிர்’, ‘கருப்பன்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த வருடம் விஜய் சேதுபதிக்கு சிறந்த வருடம் என்றே சொல்லலாம். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘96’ திரைப்படம் உருவாகி வருகிறது.

    இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 3 கெட்டப்பில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சி.பிரேம் இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது. 

    இதையடுத்து காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன்’, ‘சீதகாதி’, ‘ஜுங்கா’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
    Next Story
    ×