search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஷாலுக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சி சார்பில் அமீர் களமிறக்கப்படுவாரா?
    X

    விஷாலுக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சி சார்பில் அமீர் களமிறக்கப்படுவாரா?

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலுக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளராக இயக்குனர் அமீர் களமிறங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த டைரக்டர் அமீர், ஆர்.கே.நகரில் நான்கூட வேட்பாளராக போட்டியிடலாம். அப்படி போட்டியிட்டால் நாம்தமிழர் கட்சி வேட்பாளராகவே களம் இறங்குவேன் என்று தெரிவித்தார்.


    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-


    ஆர்.கே.நகர் தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அமீரை அங்கு நிறுத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம். இன்று மாலை அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன்.


    விஷால் ஏதோ ஆர்வத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். அவரது போட்டி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.


    நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்கனவே கலைக்கோட்டுதயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விஷால் நடிகர் சங்கத் தலைவராகவும், தயாரிப்பாளர் சங்கத்தலைவராகவும் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோன்றே அரசியல் தேர்தலையும் நினைத்துக் கொண்டார். அவர் வரட்டும் பார்க்கலாம்.


    வட்டிக்கு வாங்கி படம் தயாரிக்கும் நிலையில்தான் திரைத்துறை உள்ளது. இந்த பிரச்சினையில் அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலுக்கு வங்கி கடன் கொடுப்பதில்லை. அன்புசெழியன் இல்லா விட்டால் ஒரு போத்ராவோ அல்லது ஜெயினோ இந்த தொழிலை செய்வார்கள். இந்த தொழிலை காப்பாற்ற அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


    இவ்வாறு சீமான் கூறினார்.

    Next Story
    ×