search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கன்னடத்தில் களமிறங்கும் தனுஷ்
    X

    கன்னடத்தில் களமிறங்கும் தனுஷ்

    தமிழ், மலையாளம், இந்தி, ஹாலிவுட்டில் கால் பதித்த தனுஷ், அடுத்ததாக கன்னடத்தில் களமிறங்க இருக்கிறார்.
    தமிழில் பல படங்களை தயாரித்த தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தற்போது ரஜினியின் ‘காலா’ படத்தை தயாரித்து வருகிறது. இதற்கிடையே தனுஷ் மலையாளத்தில் அறிமுக இயக்குனர்களை வைத்து ‘தரங்கம்’ என்ற படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டார். அந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது தவிர ‘மரடோனா’ என்ற மலையாளப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

    அடுத்ததாக கன்னட படம் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார் தனுஷ். கன்னட தயாரிப்பாளர் ஜேக்கப் வர்க்கீஸ் என்பவருடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இதில் கதாநாயகனாக ரிஷி என்பவர் நடிக்க இருக்கிறார். இவர் சமீபத்தில் பிரபலமாகிய கன்னட இளம் ஹீரோ.

    தமிழ், மலையாளம், இந்தி, ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தனுஷ், பட தயாரிப்பிலும் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என்று தனது எல்லையை விரிவாக்கி இருக்கிறார்.
    Next Story
    ×