search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பழம்பெரும் நடிகர் பீலி சிவம் காலமானார்
    X

    பழம்பெரும் நடிகர் பீலி சிவம் காலமானார்

    'தூரத்து இடி முழக்கம்', ‘அழகன்’, ‘கங்காகவுரி, ‘விருதகிரி’, ‘தங்க பாப்பா’, ‘அபிமன்யு’ உள்ளிட்ட படங்களில் நடித்த பீலி சிவம் உடல் நலக்குறைவால் காலமானார்.
    பழம்பெரும் நடிகர் பீலி சிவம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 79.

    'தூரத்து இடி முழக்கம்' படம் மூலம் அறிமுகமானவர் பீலி சிவம். இப்படத்திற்கு பிறகு ‘அழகன்’, ‘கங்காகவுரி, ‘விருதகிரி’, ‘தங்க பாப்பா’, ‘அபிமன்யு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

    சிறிது காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீலி சிவம், வேலூரில் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×