என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த திஷா பதானி
Byமாலை மலர்25 Sep 2017 12:15 PM GMT (Updated: 25 Sep 2017 12:15 PM GMT)
ஸ்ருதிஹாசனுக்கு நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் எம்.எஸ்.தோனி படத்தின் நாயகி திஷா பதானி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாக இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இதில் ஜெயம் ரவி, ஆர்யா கதாநாயகன்களாகவும், ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, ஸ்ருதிஹாசன் இப்படத்திலிருந்து விலகினார்.
ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்த முக்கிய கதாபாத்திரத்தில் பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்த திஷா பதானி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரங்குகள், கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. டிசம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ள இப்படத்தை, பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Next Story
×