search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை விமர்சித்த கமல்ஹாசன்
    X

    சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை விமர்சித்த கமல்ஹாசன்

    தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கமல்ஹாசன் சொகுசு விடுதியில் தங்கி குதிரை பேரம் செய்து வரும் எம்.எல்.ஏ.க்களை விமர்சித்திருக்கிறார்.
    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தபோதும் அதனையும் மீறி போராட்டம் நடந்து வருகிறது.

    இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. எந்த நிபந்தனையும் வைக்காமல் போராட்டத்தை வாபஸ் பெற்றால் திங்களன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.



    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    `வேலைக்கு செல்லவில்லை என்றால் ஊதியம் கிடையாது என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா? சொகுசு விடுதியில் தங்கிக் கொண்டு குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு அது பொருந்தாதா?

    மரியாதைக்குரிய நீதிமன்றம் ஆசிரியர்களுக்கு மட்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதே எச்சரிக்கையை பணியில் கவனம் செலுத்தாத எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்கலாமே என்று கமல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
    Next Story
    ×