search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பொது பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் கமல்
    X

    பொது பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் கமல்

    ரஜினியின் அரசியல் பிரவேசம் வெளிப்பட்டது முதலே கமலும் தனத பங்குங்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது அவரும் அரசியலில் குதிப்பதற்கான முதற்படியாகவே இருக்கிறது. இதுவரை கமல் வெளிப்படுத்திய கருத்துக்களை பார்ப்போம்.
    நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக பொது பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகிறார். இதற்கு அவரது ரசிகர்களிடமும், பொது மக்களிடமும் வரவேற்பு உள்ளது.

    கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், அரசியல் குறித்தும் ஊழல் பற்றியும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தின. மாநிலத்தில் நடைபெறும் ஊழல் குறித்து அமைச்சர்களின் ‘இ-மெயில்’ முகவரிக்கு புகார் அனுப்புங்கள் என்று அவரது ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து கமலை, அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இந்த நிலையில் அமைச்சர்களின் இணையதள முகவரிகள் அகற்றப்பட்டன. இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார்களை அனுப்பும்படி ரசிகர்களிடம் கமல் கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் புகார் மனுக்கள் குவந்தன. இந்த நிலையில் சத்துணவு முட்டை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கமல் ரசிகர் மன்றத்தினர் ஆதாரங்களை தெரிவித்தனர்.



    கமல் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ‘நீட்’ தேர்வு விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றியும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் கமல் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் ‘நீட்’டின் கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும், என் மக்களுக்கு வந்தது, அதை கவனி அரசே, உம்மை கவனிப்போம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே, கமல் பற்றி விமர்சித்த அமைச்சர்களை கண்டித்து கமல் நற்பணி மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டினார்கள். இதுபற்றி கருத்து வெளியிட்ட கமல், தரம் தாழாதீர். வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும். நாடுகாக்க நற்பணிக்கு மட்டுமே நீ தேவை. இவருக்கு பதிலளிக்க நானே போதும் என்று கூறி இருந்தார்.

    அடுத்து ஊழல் பற்றி குறிப்பிட்ட கமல், ‘என் பிரகடனத்தில் பிழை இருக்கிறதாம். எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வது என் கடமை என்று கூறினார்.



    பெரம்பலூரில் கமல் ரசிகர்கள் கண்டுபிடித்த சத்துணவு முட்டை ஊழல் குறித்து வக்கீல்கள் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று அவரது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

    சிவாஜி கணேசன் சிலையை அகற்றியதற்கும் கண்டனம் தெரிவித்தார். ‘சிவாஜி ரசிகர்கள் மனதிலும், நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலை செய்வோம். அதை எந்த நாளும் காப்போம் அரசுக்கு அப்பால் என் அப்பா’ என்று கருத்து தெரிவித்தார்.

    இந்த நிலையில், நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். இதை விமர்சனம் செய்த கமல், ‘நீட் தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம்பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயை கூர்ந்து உடனே பேசுங்கள் என்று கருத்து தெரிவித்தார்.

    சுதந்திர தினம்பற்றி குறிப்பிட்ட அவர், ‘சுதந்திரம்’. ஊழலில் இருந்து நாம் பெறாதவரையில் இன்னும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திர போராட்டத்துக்கு சூளுரைக்க துணிவுள்ளவர் யாரும் வெல்வோம் என்று தெரிவித்து இருந்தார். ஓட்டுக்கு பணம் பெறுவதையும், குறை கூறினார்.

    நீட் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதும், ‘காந்திக்கு குல்லா. காவிக்கு குல்லா. காஷ்மீர் குல்லா தற்போது கோமாளி குல்லா. தமிழன் தலையில். போதுமா? இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா என்று கமல் சொன்னார்.



    நீட் தேர்வு விவகாரம் சூடுபிடித்த நிலையில், ‘நீட் பற்றி தயவாய் நீட்டி முழங்காதீர். இது விடை காணும் வேளை. இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடி யோசிப்போம். வெகுளாதீர். மதி நீதியையும் வெல்லும்.’

    களம் இறங்கிவிட்டதை உணராத அனைவருக்கும், இதுவும் களமே. பலகளம் பொருந்தும் மாமல்லரன்றோ நாம் என கூறி இருக்கிறார்.

    இதற்கிடையே கமல் பேசிய பேச்சுகள், பேட்டிகள் அவர் அரசியலுக்கு வருவதற்கு தயாராகி வருவதுபோல தோற்றத்தை ஏற்படுத்தின. ‘இனி முகமூடி அணிய மாட்டேன்’ என்றார். நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கூறினார்.

    அரசியல் கட்சி தொடங்க ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது. கமல் அரசியல் கட்சி தொடங்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர். ஆதரவு அளிப்பதாகவும் கூறி வருகின்றனர்.

    பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து கமல் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரிலங் கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கும் கமல் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், ‘அமைதியான குரலை துப்பாக்கி பறித்திருக்கிறது. விவாதத்தை துப்பாக்கியால் வெல்ல முயற்சிப்பது மோசமான வழி, கவுரி லங்கேஷ்-க்கு அஞ்சலி. அனைவருக்கும் எனது ஆறுதல் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×